566. தீர்க்கவே உருட்டியதை
வைத்துக்கொண்டு செப்பரிய மத்தங்காய்க்குள்ளேவைத்து
மூர்க்கமாய்ப் புடந்தன்னைப்
பேர்த்துப்போடு முயற்சியாய்ப் பின்பெடுத்துக் கழுவிப்போடு
ஆர்க்கமாய் வெள்ளியதன் விராகனிடைபத்து
அழகாக சிமிழ்போல திருவள்வைத்துப்பண்ணி
தூர்க்கதே சூதவுண்டை
நடுவேவைத்து துப்புரவாய் மேல்மூடிதிருவப்போடே
விளக்கவுரை :
567. திருவியே மறுசற்றால்
நல்லயெண்ணை சிறப்பாகக் கல்வத்திலரைமட்டம் வார்த்து
மருவியே வெள்ளியென்ற
கிண்ணிதன்னை வட்டமிட்டு ஊங்சல்போல் கல்வத்திட்டு
தருவியே மேலோடுகொண்டுமூடி
சாங்கமாய்ப் பாஷாணம்மேலேபூசி
கருவியே கவசத்தின்
கழுத்துதன்னில் கடுகியே மனம்போலத் தமருபோடே
விளக்கவுரை :
[ads-post]
568. தமரிட்டுக் கலசத்தை
ஆணிமேல்வைத்து தயங்காதே விரல்பருமன் கிரியைப்போட்டு
கமரிட்டு விளக்கேற்றி
நாலுசாமம் கலங்காதே யெரியிட்டு ஆறவிட்டு
அமரிட்டு வெள்ளியென்ற
கிண்ணிதன்னை அசையாமல் திருகிவிடு உண்டைவாங்கி
பமரிட்டுத் தண்ணியிலே
கழுவிப்போட்டு பத்துவிசை அவிப்புடமாய் காயில்போடே
விளக்கவுரை :
569. காயிலே போட்டபின்பு தண்ணீரில்கழுவி
கசகாமல் வெள்ளியிட சிமிளில்வைத்துப்
பாயிலே முன்போல
யெண்ணையிலேபோட்டு பக்குவமாய் நாற்சாமம் எரித்தபின்பு
போயிலே இப்படிதான்
ஆறுபுடம்போடு பேரான எண்ணையிலே பத்துவிசைபோடு
தோயிலே வெள்ளியைத்தான்
அடித்துப்போடு சிறப்பான வெள்ளியைத்தான் ஈயம்விட்டதே
விளக்கவுரை :
570. ஊதியே முன்னிரையில்
சிமிள்போலப்பண்ணு உத்தமனே புடம்பத்து எரிப்புபத்து
பாதியே இப்படிதான்
செய்துகொண்டு பரிவாகக் கரியில்வைத்து உருக்கஆடும்
கோதியே தங்கமிட்டு
உருக்கிக்கொண்டு குறிப்பான நாகமதுகூடவிட்டு
ஆதியே சகனாகப்
பொடியாய்ப்பண்ணி அற்றகெந்தி சூதமிடைச்சரியாய் கூட்டே
விளக்கவுரை :