571. கூட்டியே கல்வத்தில்
பொடியாய்ப்பண்ணி கொடியான மல்லிகையின் சாற்றாலாட்டி
நீட்டியே மூன்றுநாள்
அரைத்தபின்பு நேராகப்பொடிபண்ணி குப்பிக்கேற்றி
மூட்டியே வானுகையின் மேலேவைத்து
முயற்சியாய் தீயிட்டு கமலம்போல
ஆட்டியே பனிரண்டு சாமமானால்
அருணநிறம் போலாகும் வேதைகேளே
விளக்கவுரை :
572. கேளப்பா நூற்றொன்று லோகத்தோடும் கெடியான மாற்றென்ன எட்டுமாகும்
வேளப்பா குளிகைக்குச்
சாரணையே செய்தால் விரவியே கோடிலட்சம்காணலாகும்
தாளப்பா ஆச்சுண்டு
தயங்கவேண்டாம் தயங்காத மூலிகையிலாச்சுமெத்த
பாளப்பா துரிசுவிட்டு
சூதக்கட்டு படுசுருக்கு மூலிகையில் காட்டாதென்னே
விளக்கவுரை :
[ads-post]
573. என்னவே உபசரங்கள்
நூற்றிரண்டுபத்து இலைகளினால் சுருக்கிட்டால் சத்துவாரா
மண்ணவே பாஷாணம்
அறுபத்துநாலும் படுமுன்னே நட்டாகச் சுன்னமாகா
மண்ணவே உப்புவகை
இருபத்தஞ்சும் மல்லிகை பூப்போல்மலர்ந்து சுன்னமாகா
தன்னவே காரசாரங்களாலே
சகலமுந்தான் கடினவாம் குருவுமாமே
விளக்கவுரை :
574. ஆமப்பா மூலிகையில்
சிறிதுவுண்டு அந்தவித மூலிகைதான் மானுடருக்கெய்தா
வாமப்பா மலைகளிலே
யுண்டுவுண்டு மகத்தான கல்லருகில் சூதமுண்டு
தாமப்பா மனிதரங்கே
சஞ்சரிக்கப்போகார் சஞ்சரிப்பார் நாதாக்கள் ரிஷிகள்சித்தர்
போமப்பா மனிதருக்குக்
காரசாரம் புகழ் ஆதிவாதத்தில் துரிசியாமே
விளக்கவுரை :
575. ஆதியாம் துரிசியொன்றில் களங்குசொல்ல
அறைகிறேன் பண்பாக அறிவுள்ளோர்க்கு
யாதியாம் துரிசியிலே
ஒருபலமேதூக்கு பண்பாகக் கெந்தியது பலமே முக்கால்
வாதியாம் சூடனது
பலமரைதான்போடு மாசற்ற வீரமது பலமும்கால்தான்
மேதியாம் இதுமூன்றும்
உமிநீர்விட்டுப் பிலக்கவரை நாற்சாமம் பின்புகேளே
விளக்கவுரை :