போகர் சப்தகாண்டம் 576 - 580 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 576 - 580 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

576. கேளுநீ மெழுகாகும் பதத்தில்வாங்கிக் கெடிபடவே துரிசியின் மேலப்பிப்போடு
வாளுநீ யுலர்ந்தபின்பு அதின்மேற்போட வகையாகச் சுண்ணாம்புக் கவசம்போடு
தாளுநீ யுலர்ந்தபின்பு சீலைசெய்து தணலிலே யூதிநன்றாய்க் கவம்வாங்கி
நீளுமே நீறியதைக் குகையில்வைத்து நேராக விட்டெரிக்க மணியுமாமே

விளக்கவுரை :


577. மணியெடுத்து அடித்தாக்கால் ரவியுமாகும் மாசற்ற வெள்ளிதனில் நாலுக்கொன்று
தனியாக வுருக்கிடவே மூன்றுமாற்று தப்பாது கைகண்டதொழிலுமாகும்
அணியாக இச்செம்பு களங்குசெய்ய அப்பனே செந்தூரங் குருந்தான் செய்ய
கணியாக நாலாறுங் காணுங்காணும் கருத்திதுக் கருவென்றால் கெந்திதானே

விளக்கவுரை :

[ads-post]

578. தானாகுந் துரிசியென்ற செந்தூரத்தை சாற்றுகிறேன் இதுவேகுரு முன்னேபாரு
தேனாகும் வெடியுப்புச் செயநீர்தன்னில் சிறந்துநின்ற துரிசியொரு பலந்தானெட்டு
கானாகும் செயநீரில் தோய்த்துத்தோய்த்துக் கடுரவியில் போட்டுவா தினந்தான் ஏழு
பானாகும் வெடியுப்பு மூன்றுபத்து பலந்தான் பண்பான சீனமதுமுப்பத்தஞ்சே

விளக்கவுரை :


579. அஞ்சவே கல்வத்தில் பொடியாய்ப் பண்ணி அப்பனே கழுதையிட ரத்தம்வார்த்துத்
துஞ்சவே அரைத்துநன்றாய் வில்லைபண்ணித் துடியான ரவிதனிலே யுலரப்போட்டு
மிஞ்சவே கல்வத்தில் போட்டுநீயும் மேலான சக்கரமாம் பானைவைத்து
கெஞ்சவே யுளுந்தரைத்துச் சீலைசெய்து கெடியான அடுப்பேற்றித் தீயைமூட்டே

விளக்கவுரை :


580. மூட்டவே லோடிப்புகையோடொக்க மூக்காலே சலம்விழுகும் வெள்ளைநீராய் 
ஆட்டவே வெள்ளையைத்தான் அகலவைத்து அதன்பின்பு சிவந்தசலம் வருகுமக்காள்
பூட்டவே பீங்கானில் வாங்கிப் பேரான அரக்காலே குப்பிபண்ணி
நீட்டவே அதில்வாரு கரையாதப்பா நேரானலோகமென்றால் கரைந்துபோமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar