போகர் சப்தகாண்டம் 671 - 675 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

671. தள்ளியே மூலிகையைக் கறுப்புபண்ணச் சாதகமாய் அரைமட்டும் குழிதான்வெட்டி
தெள்ளியே சேங்கொட்டை ஒன்றிரண்டாய்வெட்டி சிறப்பாக மிளகுசாம்பல் பரப்பிமேலே
அள்ளியே கரம்பைமண்ணை மேலேபோட்டு அழகாக பாத்திகட்டி நீர்விட்டு
நள்ளியே அழுகவிட்டு மூன்றுதினங்கள் நலமாகக் கொத்தியே ஆறப்போடே

விளக்கவுரை :


672. ஆறவிட்டுப் பதிப்பதற்கு விபரங்கேளு அழகான குமரியொடு ஓமங்கஞ்சா
தேறவிட்டு வல்லாரைக் கரிசாலை சிறப்பான செரும்படையும் நீலிவீழி  
ஏறவிட்டுப் பொற்றலை யினொச்சிநெல்லி இதமான கரந்தையொடு மத்தந்தும்பை
சீறவிட்டுக் கொல்லனி கோவைவாழை சிறப்பாகப் பதித்துவைத்து நீரைவாரே 

விளக்கவுரை :

[ads-post]

673. வார்த்தல்லோ பயிராக்கி தண்ணீர்வார்த்து வாகாகக் காய்ந்தபின்பு விரையைவாங்கிப்
பார்த்தல்லோ முன்போல சேங்கொட்டையிட்டு புகழான மறுபடிதான் விரையைப்போடு
கோர்த்தல்லோ ரண்டிடத்தில் கொட்டையிட்டுச் கொடுஞ்சுருக்காய் மாறியே பயிரைப்போடு
ஏர்த்தல்லோ இப்படிதான் ஆறுதரம்போடு என்மகனே முழுக்கறுப்பாய் மூலிதானே

விளக்கவுரை :


674. தானென்ற மூலிகைதான் மலைகள்தோறும் சாதகமாய் வைத்தாரே ரிஷிகள்சித்தர்
வாவென்ற கறுப்புக்கு பரிட்சைக்கேளு வாகாகக் கொக்கிறகு கொண்டுவந்து
பானென்ற இலைகசக்கி மேலேபூசப் பரிவாகக் காகத்தினிறகோயாகும்
கோனென்ற இலைதின்றால் காயசித்தி கொடுஞ்சுறுக்காய் கொடியவரை இறுத்துந்தானே

விளக்கவுரை :


675. இறுத்தியதோர் குமரியுட கற்பமுண்டு எழுபதுதான் கோடியுகமிருந்தார்பாட்டர்
அருந்தியதோர் ஓமமுண்டு காலாங்கிநாயனறுபதுதான் கோடியுகம் வாதம்பார்த்தார்
வருந்தியதோர் கஞ்சாதான் கோரக்கர்தானும் மனதொன்றிச் சமாதியிலே ஏழுயுகம்நின்றார்
திருந்தியதோர் கரிசாலைக் கற்பமுண்டு சிவயோகிமுனியுடைய திறமைகேளே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 666 - 670 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

666. நீர்க்கவே தாம்பூலம் தின்பதற்கு நினைவாகச் சுண்ணாம்பு செய்யக்கேளு
கார்க்கவே கற்பூரச்சிலையின்மேலே கல்லுக்குள் சுன்னத்தைக் கவசம்போட்டு
பார்க்கவே கறியோட்டி ஊதுயூது பஞ்சுபோல் பொருமியங்கே சுன்னமாகும்
தோர்க்கவே கல்நாரில் இப்படியேயூது துடியான அண்டத்தோல் ஊதிடாயே

விளக்கவுரை :


667. ஊதிடவே கெருடபட்சி பவளமுத்து உத்தமனே இவ்வகையும் சுன்னமாகும்
கோதுவது கொட்டைப்பாக்கதனைச்சீவி குறிப்பாகப் பளுத்த வெற்றிலையில்பூசி
ஓதுவது முன்சாற்றை உமிழ்ந்துபோட்டு உத்தமனே தாம்பூலம் தின்றுத்துப்பு  
வாதுவது வாதசத்தம் கேட்டு மத்தைப்போக்கு மகத்தான உபாசத்தின் சுன்னந்தானே

விளக்கவுரை :

[ads-post]

668. தானென்ற காலையிலே வழலைவாங்கச் சாதகமாய்ச் சொல்லுகிறேன் மக்காள்கேளும்
வானென்ற கரிசாலஞ்சாற்றினோடு வளமான ஆவினெய் சமனாய்ச் சேர்த்து
ஊனென்ற அங்குட்ட விரலில் தோய்த்து உத்தமனே அண்ணாக்கில் பிரளதேய்த்து
தேனென்ற சங்கிலிபோல் கபந்தான் வீழும் சிறப்பாகப் பதினாறுதரமும் வாங்கே

விளக்கவுரை :


669. வாங்கியே மண்டலந்தான் இப்படிதானப்பா மாலையிலே செய்கிறவரிசைகேளு
பாங்கிலாப் பேரண்டத் தெண்ணெய்தன்னைப் பரிவாகத்தான் துணியில் தோய்த்துக் கொண்டு
தேங்கியே பாலைபோல் காலையூன்றி சிறப்பாகக் குஞ்சனத்தில் சுத்துநூலு
ஓங்கிவா யிடசாரி திருப்புநூறு ஒளிந்திருந்த ஆமமெல்லாம் கழன்றுபோமே

விளக்கவுரை :


670. ஆமமே கழலாட்டால் காயசித்தியில்லை அண்ணாக்கில் வீழாட்டால் அமுதம்சிந்தாம்
வாமமே யில்லாட்டால் பூசைபோச்சு மாயிங்கே சொல்வது மறைந்துபோச்சு 
ஏமமே பிறப்பதுவும் மண்ணாய்ப்போச்சு எடுத்ததொரு குளிகையுட வேகம்போச்சு
காமமே கதியென்று இருக்கவேண்டாம் கைமுறையாய் இருதளத்தின் சட்டைதள்ளே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 661 - 665 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

661. எரித்திடவே சாரெல்லாம் சுண்டிப்பாரு மிதமாக ஆறவிட்டு வைத்துக்கொண்டு
பரித்திடவே மேலோடு அண்டமொன்று வாங்கி பதறாமல் ரண்டாக்கி பச்சந்திக்கொள்ளு
தரித்திடவே தினமொன்று மேலோடுவாங்கி சாதகமாய்த் தினந்தோறும் ஒவ்வொன்றாக
மரித்திடவே எரித்தசலம் கற்பாந்தகாலம் வைத்திருக்க வேணுமென்றால் மண்கலந்தான்கொள்ளே

விளக்கவுரை :


662. கொள்ளவே காயமிது சிவந்துமின்னும் குறிப்பான கண்கள்ரண்டு செய்தஞ்சம்போலாம்
விள்ளவே கைகால்ரண்டும் கற்றூணாகும் மெலிவான நரம்பெல்லாம் இருகிக்கொள்ளும்
துள்ளவே அனுபவித்தால் விந்துவீழாச் சுக்கிலந்தான் இறுகியங்கே மேலேயோடும்
தள்ளவே சட்டையொன்று கக்கிப்போகும் சமர்த்துடனே இவ்வளவும் சாதித்தேறே

விளக்கவுரை :

[ads-post]

663. சாதித்து தலைமுழுக வரிசைகேளு சாதகமாய்ப் பட்சத்துக் கொருகாலப்பா
பேதித்து மிளகோடு மஞ்சள்நெல்லி பேரான வெப்பரிசி கடுக்காய்தானும்
வாதித்து சமபாகம் நிறுத்துக்கொண்டு வளமான ஆவின்பால் விட்டுஆட்டி
காதித்த தலைதனிலே தேய்த்துக்கொண்டு கனமான வெந்நீரில் முழுகிடாயே

விளக்கவுரை :


664. முழுகிடவே கபாலமது கெட்டியாகும் மூச்சான வாசியது மேற்கொள்ளாது
எழுகிடவே ரோமமது தும்பிபோலாகும் நனைந்தாலும் குளியாது வன்னிமீறும்
அழுதிடவே கண்ணீர் தண்ணீர்விழாது அந்தரத்தின் மீனெல்லாம் பகலில்தோன்றும்
விழித்திடவே உடலிலுள்ள விஷநீர்வற்றும் மேனியுமே பொன்நிறமாகும்பாரே

விளக்கவுரை :


665. பார்க்கவே வார்த்துமிக உருகிக்கால்தான் பரிவாக ஆவினெய் தேய்த்துக்கொண்டு
ஏர்க்கவே பசும்பாலும் அரைப்பாய்ப்பண்ணி எளிதாக வெந்நீரில் முழுகிவாநீ
கார்க்கவே ரோமமது கருவண்டுபோலாம் கண்ணுக்குள் ஒளிமீறும் தாகமில்லை
தேர்க்கவே சுழிமுனையும் கெட்டிட்டேறும் சுள்ளாமல் பிரபஞ்ச மாயைநீக்கே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 656 - 660 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

656. பேணிப்பார் நெல்லிக்காய் முக்கல்வாங்கி பேரானபால்விட்டவித்துக்கொண்டு
ஊணிப்பா நிழலுலர்த்திச் சூரணமேசெய்து உத்தமனே சுத்தித்த கெந்திசரிசேர்த்து
பேணிப்பார் தேனதனிற் குழைத்துவுண்ணு பேராக மண்டலந்தான் உண்டாயானால்
ஆணிப்பார் முன்னெடுத்த தேகம்போக்கி ஆச்சரியம் சிவசக்திதேகமாச்சே

விளக்கவுரை :


657. சத்தியது ஏதென்றால் கெந்தமுமாச்சு தனித்துநின்ற சிவந்தானும் சூதமாச்சு
புத்தியது ஏதென்றால் மூலமாச்சு புகழான ஆறுதளம் உன்னிப்பாரு
பத்திபறு வயதென்றால் அறிவுட்புக்கி பராபரத்தில் இச்சதுவேபத்திபத்தி
முத்தியது ஏதென்றால் மவுனந்தாண்ட மோசமில்லை சைதன்னிய முத்தியாமே

விளக்கவுரை :

[ads-post]

658. ஆமப்பா இதுகடந்த சிவனார்வேம்பை அப்பனே பிடித்துநன்றாய்ச் சூரணமேசெய்து
தேமப்பா வானுழுவைச் சரியாய்க்கூட்டி சிறப்பாகக் கரைந்தைச்சார் வார்த்தரைத்து
தாமப்பா வில்லைப்பண்ணி நிழலுலர்த்திச் சாதகமாய்ப் பூம்புடத்தில் தயிலம்வாங்கி
வாமப்பா மூக்கழஞ்சு அந்திசந்தி மறவாதே மண்டலமும் கொண்டிடாயே

விளக்கவுரை :


659. கொண்டிடவே குட்டமெல்லாம் போகும்பாரு கூரானசரீரத்தில் வாதம்போகும்
கண்டிடவே விஷங்களெல்லாம் அகன்றுபோகும் மேனிவுயர் மாந்துளிர் நிறமுமாகும்
கண்டிடவே கன்னியர்கள் வசமதாவார் காரியமாய் ஐம்புலனை படுத்துச்சாடும்
தூன்றிடவே ஆசையற்றால் காயசித்தியோகும் தூசித்துக் கன்னியரைத் தொடலாகாதே

விளக்கவுரை :


660. ஆகவே அண்டத்தின் கற்பம்கேளு அப்பனே கருங்கோழி சாவலுடன்போடு   
வாகவே வளர்த்ததின் முட்டையெல்லாம்வாங்கி வகையாக கல்லுப்புக்குள்ளேவைத்து
ஏகவே இருபதுநாள் கழித்தபின்பு எடுத்தல்லோ அயச்சட்டிக்குள்ளேவைத்து 
போகவே கெருடனுட கிழங்குசார்விட்டு புகழாக அடுப்பேற்றி எரித்திடாயே

விளக்கவுரை :


Powered by Blogger.