போகர் சப்தகாண்டம் 671 - 675 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 671 - 675 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

671. தள்ளியே மூலிகையைக் கறுப்புபண்ணச் சாதகமாய் அரைமட்டும் குழிதான்வெட்டி
தெள்ளியே சேங்கொட்டை ஒன்றிரண்டாய்வெட்டி சிறப்பாக மிளகுசாம்பல் பரப்பிமேலே
அள்ளியே கரம்பைமண்ணை மேலேபோட்டு அழகாக பாத்திகட்டி நீர்விட்டு
நள்ளியே அழுகவிட்டு மூன்றுதினங்கள் நலமாகக் கொத்தியே ஆறப்போடே

விளக்கவுரை :


672. ஆறவிட்டுப் பதிப்பதற்கு விபரங்கேளு அழகான குமரியொடு ஓமங்கஞ்சா
தேறவிட்டு வல்லாரைக் கரிசாலை சிறப்பான செரும்படையும் நீலிவீழி  
ஏறவிட்டுப் பொற்றலை யினொச்சிநெல்லி இதமான கரந்தையொடு மத்தந்தும்பை
சீறவிட்டுக் கொல்லனி கோவைவாழை சிறப்பாகப் பதித்துவைத்து நீரைவாரே 

விளக்கவுரை :

[ads-post]

673. வார்த்தல்லோ பயிராக்கி தண்ணீர்வார்த்து வாகாகக் காய்ந்தபின்பு விரையைவாங்கிப்
பார்த்தல்லோ முன்போல சேங்கொட்டையிட்டு புகழான மறுபடிதான் விரையைப்போடு
கோர்த்தல்லோ ரண்டிடத்தில் கொட்டையிட்டுச் கொடுஞ்சுருக்காய் மாறியே பயிரைப்போடு
ஏர்த்தல்லோ இப்படிதான் ஆறுதரம்போடு என்மகனே முழுக்கறுப்பாய் மூலிதானே

விளக்கவுரை :


674. தானென்ற மூலிகைதான் மலைகள்தோறும் சாதகமாய் வைத்தாரே ரிஷிகள்சித்தர்
வாவென்ற கறுப்புக்கு பரிட்சைக்கேளு வாகாகக் கொக்கிறகு கொண்டுவந்து
பானென்ற இலைகசக்கி மேலேபூசப் பரிவாகக் காகத்தினிறகோயாகும்
கோனென்ற இலைதின்றால் காயசித்தி கொடுஞ்சுறுக்காய் கொடியவரை இறுத்துந்தானே

விளக்கவுரை :


675. இறுத்தியதோர் குமரியுட கற்பமுண்டு எழுபதுதான் கோடியுகமிருந்தார்பாட்டர்
அருந்தியதோர் ஓமமுண்டு காலாங்கிநாயனறுபதுதான் கோடியுகம் வாதம்பார்த்தார்
வருந்தியதோர் கஞ்சாதான் கோரக்கர்தானும் மனதொன்றிச் சமாதியிலே ஏழுயுகம்நின்றார்
திருந்தியதோர் கரிசாலைக் கற்பமுண்டு சிவயோகிமுனியுடைய திறமைகேளே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar