676. கேளப்பா அஞ்சுயுகம்
நாதாக்களோடே கொடிதாகத்தான் சிறிது வேதாந்தம்பார்த்தார்
கேளப்பா நீலியுண்டு ராமதேவர்
விழைந்தேழு லட்சமப்பா யோகம்பார்த்தார்
நாளப்பா வாமமுனி
செரும்படையுண்டு நாலேழுலட்சமப்பா சமாதியுற்றார்
தேனப்பா ஓமமுண்டு ஆனந்தநாதர்
செகத்திலுள்ள அதிசயங்கள் பார்த்திட்டாரே
விளக்கவுரை :
677. பார்த்திட்டு விழிகொண்டு
கஞ்சமலைசித்தர் பத்துயுகம் ஆரூடச்சமாதியிலேநின்றார்
ஏர்த்திட்ட பொற்றலையார்
கொங்கணர்தானப்பா ஏழுயுகம் குளிகைகட்டி வாதம்பார்த்தார்
வார்த்திடவே பதஞ்சலிதான்
கரந்தையுண்டு கைகொட்டிச் சிதம்பரத்தில் நடனம்கண்டார்
போர்த்திட்ட கொல்லனுட
கோவையுண்டு போகர்முனியென்று சொல்லிப்புலகித்தேனே
விளக்கவுரை :
[ads-post]
678. புளகித்து கோடியுகம்
வாதம்பார்த்து போக்கோடே யொவ்வொன்றாய் விரித்துயானும்
இளகித்து ஏழுகாண்டம்
இதுவேசொன்னேன் ஏழையுந்தான் எழுநூறாய் நிகண்டாய்க்கோர்த்தேன்
அழகித்துக் கண்டபடி
சொன்னமாக்கள் ஆச்சரியம் வெட்டவெளி மறைப்போயில்லை
ஊகித்து உப்பைநன்றாய்க்
கட்டியண்ணு ஒருசொல்லும் தப்பாது சித்தியாமே
விளக்கவுரை :
679. சித்தியாம் அன்னத்தில்
உப்புகூட்டச் செப்புகிறேன் நாதாக்கள்சொல்லாதெல்லாம்
மத்தியாய்ப் புங்கம்வேர்ப்
பாலைவாங்கு பாரையுப்புத் தோய்த்தெடுத்து ரவியிற்போட்டு
முத்தியா ஏழுநாள்
ரவியிற்போட்டு முனையான வெடியுப்பு பலந்தானஞ்சு
வெத்தியாய் சீனமது
பலந்தானைந்து வெண்காரம் பலமஞ்சு கல்லுப்பஞ்சே
விளக்கவுரை :
680. அஞ்சோடு காரமஞ்சு பூநீரஞ்சு
ஆதியாங்கடநுரையுஞ் சூடனஞ்சு
பிஞ்சோடு சவ்வீரம்
பலந்தான்ரண்டு பேயானபுங்கன்வேர் பால்லாட்டி
கஞ்சோடு ஏழுநாள்
வார்த்தரைத்து நலமான ரவிதனிலே யுலரப்போட்டு
குஞ்சோடு அண்டநீர்
பலந்தானைந்து குழப்பியே பாலாலே வைத்துக்கொள்ளே
விளக்கவுரை :