போகர் சப்தகாண்டம் 666 - 670 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 666 - 670 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

666. நீர்க்கவே தாம்பூலம் தின்பதற்கு நினைவாகச் சுண்ணாம்பு செய்யக்கேளு
கார்க்கவே கற்பூரச்சிலையின்மேலே கல்லுக்குள் சுன்னத்தைக் கவசம்போட்டு
பார்க்கவே கறியோட்டி ஊதுயூது பஞ்சுபோல் பொருமியங்கே சுன்னமாகும்
தோர்க்கவே கல்நாரில் இப்படியேயூது துடியான அண்டத்தோல் ஊதிடாயே

விளக்கவுரை :


667. ஊதிடவே கெருடபட்சி பவளமுத்து உத்தமனே இவ்வகையும் சுன்னமாகும்
கோதுவது கொட்டைப்பாக்கதனைச்சீவி குறிப்பாகப் பளுத்த வெற்றிலையில்பூசி
ஓதுவது முன்சாற்றை உமிழ்ந்துபோட்டு உத்தமனே தாம்பூலம் தின்றுத்துப்பு  
வாதுவது வாதசத்தம் கேட்டு மத்தைப்போக்கு மகத்தான உபாசத்தின் சுன்னந்தானே

விளக்கவுரை :

[ads-post]

668. தானென்ற காலையிலே வழலைவாங்கச் சாதகமாய்ச் சொல்லுகிறேன் மக்காள்கேளும்
வானென்ற கரிசாலஞ்சாற்றினோடு வளமான ஆவினெய் சமனாய்ச் சேர்த்து
ஊனென்ற அங்குட்ட விரலில் தோய்த்து உத்தமனே அண்ணாக்கில் பிரளதேய்த்து
தேனென்ற சங்கிலிபோல் கபந்தான் வீழும் சிறப்பாகப் பதினாறுதரமும் வாங்கே

விளக்கவுரை :


669. வாங்கியே மண்டலந்தான் இப்படிதானப்பா மாலையிலே செய்கிறவரிசைகேளு
பாங்கிலாப் பேரண்டத் தெண்ணெய்தன்னைப் பரிவாகத்தான் துணியில் தோய்த்துக் கொண்டு
தேங்கியே பாலைபோல் காலையூன்றி சிறப்பாகக் குஞ்சனத்தில் சுத்துநூலு
ஓங்கிவா யிடசாரி திருப்புநூறு ஒளிந்திருந்த ஆமமெல்லாம் கழன்றுபோமே

விளக்கவுரை :


670. ஆமமே கழலாட்டால் காயசித்தியில்லை அண்ணாக்கில் வீழாட்டால் அமுதம்சிந்தாம்
வாமமே யில்லாட்டால் பூசைபோச்சு மாயிங்கே சொல்வது மறைந்துபோச்சு 
ஏமமே பிறப்பதுவும் மண்ணாய்ப்போச்சு எடுத்ததொரு குளிகையுட வேகம்போச்சு
காமமே கதியென்று இருக்கவேண்டாம் கைமுறையாய் இருதளத்தின் சட்டைதள்ளே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar