656. பேணிப்பார் நெல்லிக்காய்
முக்கல்வாங்கி பேரானபால்விட்டவித்துக்கொண்டு
ஊணிப்பா நிழலுலர்த்திச்
சூரணமேசெய்து உத்தமனே சுத்தித்த கெந்திசரிசேர்த்து
பேணிப்பார் தேனதனிற்
குழைத்துவுண்ணு பேராக மண்டலந்தான் உண்டாயானால்
ஆணிப்பார் முன்னெடுத்த
தேகம்போக்கி ஆச்சரியம் சிவசக்திதேகமாச்சே
விளக்கவுரை :
657. சத்தியது ஏதென்றால்
கெந்தமுமாச்சு தனித்துநின்ற சிவந்தானும் சூதமாச்சு
புத்தியது ஏதென்றால்
மூலமாச்சு புகழான ஆறுதளம் உன்னிப்பாரு
பத்திபறு வயதென்றால்
அறிவுட்புக்கி பராபரத்தில் இச்சதுவேபத்திபத்தி
முத்தியது ஏதென்றால்
மவுனந்தாண்ட மோசமில்லை சைதன்னிய முத்தியாமே
விளக்கவுரை :
[ads-post]
658. ஆமப்பா இதுகடந்த
சிவனார்வேம்பை அப்பனே பிடித்துநன்றாய்ச் சூரணமேசெய்து
தேமப்பா வானுழுவைச்
சரியாய்க்கூட்டி சிறப்பாகக் கரைந்தைச்சார் வார்த்தரைத்து
தாமப்பா வில்லைப்பண்ணி
நிழலுலர்த்திச் சாதகமாய்ப் பூம்புடத்தில் தயிலம்வாங்கி
வாமப்பா மூக்கழஞ்சு
அந்திசந்தி மறவாதே மண்டலமும் கொண்டிடாயே
விளக்கவுரை :
659. கொண்டிடவே குட்டமெல்லாம் போகும்பாரு கூரானசரீரத்தில் வாதம்போகும்
கண்டிடவே விஷங்களெல்லாம்
அகன்றுபோகும் மேனிவுயர் மாந்துளிர் நிறமுமாகும்
கண்டிடவே கன்னியர்கள்
வசமதாவார் காரியமாய் ஐம்புலனை படுத்துச்சாடும்
தூன்றிடவே ஆசையற்றால்
காயசித்தியோகும் தூசித்துக் கன்னியரைத் தொடலாகாதே
விளக்கவுரை :
660. ஆகவே அண்டத்தின் கற்பம்கேளு
அப்பனே கருங்கோழி சாவலுடன்போடு
வாகவே வளர்த்ததின்
முட்டையெல்லாம்வாங்கி வகையாக கல்லுப்புக்குள்ளேவைத்து
ஏகவே இருபதுநாள்
கழித்தபின்பு எடுத்தல்லோ அயச்சட்டிக்குள்ளேவைத்து
போகவே கெருடனுட
கிழங்குசார்விட்டு புகழாக அடுப்பேற்றி எரித்திடாயே
விளக்கவுரை :