போகர் சப்தகாண்டம் 651 - 655 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 651 - 655 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

651. போக்கான கிளிமூக்குமாவொன்றுண்டு புகழான கிளிபோலே காயும்காய்க்கும்  
வாக்கான இலையதுவும் அரசிலைபோல்காணும் மைந்தனே இதனுடைய பழத்தையுண்ணு
நோக்கான கெவுனவழி சறுக்காபோடும் நொடியிலே காயசித்தி கிடைக்குமப்பா
போக்கான பூப்பூத்த பத்துநாள் பழமாம் புண்ணியராம் சித்தருக்கு எய்தும்வாறே

விளக்கவுரை :


652. வாறுகேள் இடத்தோல்வேர் பட்டைவாங்கி மருவநன்றாய் நிழலுலர்த்திச் சூரணமேசெய்ய
பேறுகேள் பலம்நாலு நிறுத்திக்கொண்டு பேச்சரிய சூதமதுபலந்தான் நாலு
தாறுகேள் கல்வத்தில் இதனைப்போட்டு சாதகமாய் மல்லிகையின் சாறுவிட்டு
தேறுகேள் எண்சாமம் அரைப்புமைபோல் தேன்வார்த்து வுண்டைசெய்து வைத்துக்கொள்ளே

விளக்கவுரை :

[ads-post]

653. வைத்ததொரு மருந்தெடுத்து அந்திசந்தி வகையாக மண்டலந்தான் உண்டாயானால்
கைத்ததொரு பித்தமது கபத்தைச்சாடும் கசடான ஆறுதளம் திறந்துபோகும்
வெய்த்ததொரு வாதமெண்பதுவும் போகும் மேலான சிலேத்துமமும் அகன்றுபோகும்
வித்ததொரு சரசோதி நிர்த்தஞ்செய்வாள் வினைபோல் ஒளியாகும் வாக்குத்தானே

விளக்கவுரை :


654. தானென்ற பொற்சீந்தியானால்நன்று சாதகமாய் சிகப்புநன்று கிடையாவிட்டால்
பானென்ற நற்சீந்தி மேல்தோலைப்போக்கி மருந்தண்டாய்க் கொண்டுவந்து கிழித்துப்போட்டு
கோனென்ற நிழலுலர்த்தி சூரணமேசெய்து கூறானகற்கண்டு சமபாகஞ்சேர்த்து
வேனென்ற ஒருகடித்தூள் அந்திசந்தி வெகுளாதே மண்டலமும் உண்டுபாரே

விளக்கவுரை :


655. பாரப்பா மேகமென்ற தெல்லாம்போகும் பரிவாக வாதபித்தம் பக்குவமாகும்
சேரப்பா கபாலத்தின் வெட்டைபோகும் செகமறிய அட்டசர வேகம்போகும்
காரப்பா தாதுமூற்றும் தழைக்குந்திரேகம் சதிரான ஆறுதளம் வன்னிமீதும்
பேரப்பா சிந்திக்கு சாவேயில்லை பேரின்ப சாஸ்திரத்தைப் பேணிப்பாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar