போகர் சப்தகாண்டம் 646 - 650 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 646 - 650 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

646. ஆமிந்தச் சோறெடுத்து சூதத்துக்கு அளவிலேவைத்து மெல்லசுருக்குப்போட
வாமிந்த சூதமது மணிபோலாமே வகைவகையாய் பாஷாணம்கட்டிப்போகும்
சேமிந்தத் தங்கத்தை உருக்கிசாய்க்க ஷெணத்திலே செம்பாகும் தூரவோடும்
நாமிந்தப்படி பார்த்தோம் காரீயம் செம்பாம் நாதாக்கள் இப்படியே பார்த்திட்டாரே

விளக்கவுரை :


647. பார்த்திட்ட மலைகளிலே மூலிகையைக்கேளு பரிவான கருநெல்லி கருத்தநொச்சி
பூர்த்திட்ட புறச்சோதி பெரியசோதி புகழ்பெரிய வெள்ளைப்பூ துத்தியோடு
ஏர்த்திட்ட கல்லுக்குள் கோசங்கம்பாளளிதானரேமவிருட்சம் எருமைவிருட்சம்
கார்த்திட்ட கருநீலி கணங்கல் விருட்சம் கறுத்திருக்கும் கொடுவேலி செந்திராமே

விளக்கவுரை :

[ads-post]

648. செந்திரால் வெண்புரசு வெள்ளைக்கண்டா செங்கள்ளி சேம்பல்லிகுண்டலமாம்பாலை
கந்திராம் கசப்பான பசலையொடு கடியதொரு பொற்சீந்தி சாய்கைவேதி
அந்திராய்க் கருவீரு சிவதத்தில்லை அதிவெள்ளைத்தூதுவளை கறுத்தவாளை
கந்திராய் கருப்பான கரிசாலை கருத்தமத்தை வெண்கரந்தைக் கரையுமாமே

விளக்கவுரை :


649. ஆமப்பா மூவிலைக்குறுந்தினோடு ஆச்சரியங்கருந்தும்பை வெள்ளைக்காந்தி
ஓமப்பா வெண்டான ஆதண்டையோடு உத்தமனே முப்பத்திரண்டுமூலி
வாமப்பா மலைதோறும் உண்டுவுண்டு மகத்தான மூலிகைதான் பரீசவேதை
காமப்பா ஒப்பின்றி சூதங்கட்டும் கலந்துநின்ற பாஷாணம் சாகே

விளக்கவுரை :


650. சாகவே சரக்கான அறுபத்திநாலும் தனித்தனியே வேதையுமாம் சகஸ்திரத்துக்கோடும்
சாகவே உபசரங்கள் நூற்றிரணடுபத்தஞ்சும் அனைபோல்சத்தாக பிறக்கும்பாரு
சாகவே ஷணமுதல் இருபத்தஞ்சும் தனித்தனியே கட்டாகும் சரக்கைக்கொல்லும்
சாகவே பண்ணாமல் இருந்தினிக்கும் சங்கற்பவிருப்பமென்ற வீட்டைப்போக்கே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar