641. உண்ணப்பா மண்டலந்தான்
நோய்மூன்றுபோம் உத்தமனே உதிரத்தில் கிருமிபோகும்
கண்ணப்பா பவளம்போல்
சிவந்திருக்கும் காயமெல்லாம் சம்பனத்தின் வாசம்வீசும்
விண்ணப்பா அந்தரத்து
மீன்களெல்லாம் வெகுளாமல் பகல்காணத் தோற்றுவிற்கும்
வண்ணப்பா பாதாள நிதிகள்
தோற்றும் வாய்திறந்த தளமாறும் வெளியாய்ப்போமே
விளக்கவுரை :
642. போமப்பா இதுகடந்த
பின்புநீதான் புகழ்பெறவே நூறாண்டு வேம்பைப்பார்த்து
ஆமப்பா பட்டையைத்தான்
வெட்டிவந்து அப்பனே நிழலுலத்தாய் உலர்த்திபின்பு
காமப்பா இடித்து
நன்றாய்ச்சூரணமே கரிசாலை மல்லிகையின் சாறுவார்த்தை
தேமப்பா ஏழுதரம்
பாவனையேசெய்து சிறப்பான வொருகடித்தூள் கொண்டிடாயே
விளக்கவுரை :
[ads-post]
643. கொண்டிடவே அனுபான வகையைக்கேளு குறிஞ்சித்தேன் தனிற்குழைத்து நாற்பதுநாள்கொள்ளு
விண்டிடவே அந்திசந்தி
நினைவாய்க்கொள்ளு மெய்யெல்லாம் கருங்காலின் வயிரமாகும்
கண்டிடவே
நரைதிரைகளெல்லாம்போகும் சுக்கிலந்தான் மேலிறுகிக்கீழோடாது
கண்டிடவே ஆறுதளம்
வெளியாய்க்காணும் காலனுமே அஞ்சிடுவான் காணுகாணே
விளக்கவுரை :
644. காணவே மலைதோறும்
சர்க்கரைவேம்புண்டு காய்தின்றால் கற்கண்டுபோலேதோன்றும்
பூணவே இலைதின்றால்
மண்டலத்தில்சித்தி புகழான காய்தின்றால் பட்சத்தில்சித்தி
தோணவே பூதின்றால்
வாதத்தில்சித்தி தொகுத்ததொகை சித்தருக்கு இதுவேயாகும்
ஆணைவே கீழ்வழிபார்க்குமப்பா
ஆச்சரியம் இதுதேடி அறிந்துகொள்ளே
விளக்கவுரை :
645. கொள்ளவே சிவப்பான
கற்றாழைதானும் கொண்டுவர மண்டலந்தான் அந்திசந்தி
விள்ளவே தேகமது
கஸ்தூரிவீசும் வேர்வைதான் தேகத்தில் கசியாதப்பா
துள்ளவே
நரைதிரைகளெல்லாம்மாறும் சோம்பலென்ற நித்திரையும் கொட்டாவியில்லை
கள்ளவே காமமிது உடம்பிலூறும்
கண்களுமே செவ்வாளிப் பூப்போலாமே
விளக்கவுரை :