போகர் சப்தகாண்டம் 636 - 640 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 636 - 640 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

636. பொடியாவதேதென்றால் சொல்லக்கேளு பேரான பொற்கொன்றைப் பூவினோடு
கொடியான மல்லிகையின் பூவினோடு கொக்கிறகு மந்தாரை வெள்ளைப்பூவும்
அடியாக நிழலுலர்த்தாய் உலர்த்திக்கொண்டு அப்பனே பொடித்துநன்றாய்ச் சூரணமேசெய்து
கொடியான தேனதனில் குழைத்துயுண்ணு நேர்பாகமாலையிலே மண்டலந்தானுண்ணே

விளக்கவுரை :


637. மண்டலந்தானுண்டபின்பு சொல்லக்கேளு வாகான தூதுவளை இலையினோடு
விண்டலந்தான் தக்கோலஞ்சாதிக்காயு மேலான வாலுழுவைவித்தினோடு  
குண்டலந்தான் கொடிவேலி பொற்கொன்றைப்பூவு கூரான நிலப்பனையின் கிழங்குசூட்டி
முண்டலந்தான்பொடிசெய்து வைத்துக்கொண்டு மூக்கழஞ்சு முட்பன்றி நெய்யில்கொள்ளே

விளக்கவுரை :

[ads-post]

638. கொள்ளவே வதத்தைக் கறிப்போடு கொடிதான பித்தமெல்லாம் முறிந்துபோகும்
கள்ளவே சிரசில்நிற்கும் கற்பத்தை சாடுஞ்சங்கிலைபோல் கோழையறுந்தமர்ந்திருக்கும்
விள்ளவே மதிதன்னில் அமுதஞ்சேர்க்கும் மெய்நிறைந்து ஆடியெல்லாம் இறுகிக்கொள்ளும்
துள்ளவே இந்திரியச் சேறுபொங்கும் துடியாதே காமநோய்க் கொல்லுந்தானே

விளக்கவுரை :


639. கொல்லுகிற காமத்தை மதியிலேற்று குறிபார்த்து தளங்களெல்லாம் கூர்ந்துபாரு
வொல்லுகிற மனக்குரங்கு அஞ்சகொப்பிற்றாண்ட விடுகாதே யோகமென்ற வாளால்வீசு
மல்லுகின்ற யோகத்தை சதாநித்தம் பகரு மதியினிற்கும் மூதத்தைச்சிந்தியுண்ணு
அல்லுகிற ஆத்தாளை நித்தம்பூசி பரிவில்நின்ற குருபதத்தை யடுத்துக்கேளே

விளக்கவுரை :


640. கேளப்பா கரிசாலை குப்பைமேனி கொடியான கரந்தையொடு வல்லாரைநீலி
வாளப்பா பொற்றலையின் சமூகமோடு வகையாக நிழலுலர்த்த உலர்த்திக்கொண்டு
தாளப்பா இடித்துநன்றாய் சூரணமேசெய்து சாதகமாய் வெகுகடிதான தேனிலுண்ணு
கேளப்பா கட்டியதோர் வேசம்போல கெணத்திலே காயசித்தி இருவேளையுண்ணே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar