போகர் சப்தகாண்டம் 631 - 635 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 631 - 635 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

631. கொள்ளவே ஐப்பசிக்கும் கார்த்திகைக்குமப்பா குமறியாஞ்சார்தனிலே வைத்துக்கொள்ளு
விள்ளவே காயசித்தி யோகசித்தி வேதாந்தமனோன்மணியாம் ஞானசித்தி
தள்ளவே அஷ்டமாம் யோகசித்தி தாரணியில் மானிடர்கள் கெவுனசித்தி
மெள்ளவே சதாகாலம் இந்தமார்க்கம் மேதினியில் கசடறவே வைத்துப்போற்றே

விளக்கவுரை :


632. வைத்துமே தைமார்கழி மாசிக்கப்பா வாகான கற்கண்டினோடேயுண்ணு
பைத்துமே பங்குனிக்கு நெய்யிற்கொள்ளு பனிரெண்டு மாதத்திற்பருவம் சொன்னேன்
நைத்துமே இப்படிதான் பருவமாக நானுண்டபடிசொன்னேன் நீயுமுண்ணு
பொய்த்துமே போகாமல் பூசைபண்ணு போக்கோடே வாசியைத்தான் இழுத்துவாங்கே

விளக்கவுரை :

[ads-post]

633. வாங்கியே சதுரக்கள்ளி காயேபத்து மைந்தனே குமரிச்சோற்காசுரண்டு
தேங்கியே அமுரியுடன் கலந்துகொள்ள சிதைந்துநின்ற ஆமமெல்லாம் தள்ளிப்போடு
பாங்கியே கைம்முறையாய் செய்தாயானால் பலிக்குமே வயித்தியவாதயோகம்
ஏங்கியே சடத்திலுள்ள விழநீர்வற்றும் எலும்பில்நின்ற சுண்ணாம்பு வேகம்போமே

விளக்கவுரை :


634. வேகம்போம் இருபதுநாள் காலமேகொள்ளு மெலிவான மாலையிலே கியாழங்கொள்ளு
தாகம்போந் தாளிசப்பத்திரியுஞ் சுக்குந்தனிந்ததொரு சீரகமுமாஞ்சியேலம்  
ஆகம்போய் வராகனிடை யொவ்வொன்றுக்கு அதட்டியே சட்டியிலே பொடித்துக்காய்ச்சி
காகம்போம் ஆழாக்கு மாலையிலேகொள்ளு நமக்குநமனாவாய் நன்றாய்ப்பாரே

விளக்கவுரை :


635. பாரப்பா இதுகடந்தபின்பு நீதான் பரிவாக அவ்வஞ்சாய் மிளகையேற்றி
சேரப்பா அமுரியிலே காலமேகொள்ளு சிறப்பான நாற்பதுநாள் கொள்ளுகொள்ளு
காரப்பா இருபதுநாளேற்றியுண்ணு கைம்முறையாய் நூறுமட்டுமானபின்பு
தூரப்பா அவ்வஞ்சாய்க் குறைத்து எண்ணு சொல்முறையாய் மாலையிலே பொடிநீயுண்ணே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar