போகர் சப்தகாண்டம் 626 - 630 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 626 - 630 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

626. கொள்ளவே வயதங்கே அறுபதாகில் குறையாதே கடுக்காயைப் பத்துநாள்கொள்ளு
அள்ளவே யறுபதின்மேல் வயதானால் ஆச்சரியங் காயசித்தி அகாவாகா
விள்ளவே கடுக்காயைப் பொடியாய்ப்பண்ணி மெல்லிதாய்ச் சீலையிலே பறிந்துகொண்டு
துள்ளவே அமுரிதனைமுறித்துக்கொண்டு சுகமாகவெருகடித்தூள் குழம்பில்கொள்ளே

விளக்கவுரை :


627. கொள்ளுதற்கு அமுரிதனை முறிக்கக்கேளு கொடூரமாங் காந்தமென்ற பாத்திரத்தில்
விள்ளுதற்கு முன்னீராம் அமுரிதள்ளி விளங்கவே கொள்ளுமட்டும் பின்னீர்வாங்கித்
துள்ளுதற்கு தேத்தினுட வித்துதன்னை துடியாக இதிற்கலக்கி வைத்தும்பின்னும்
அள்ளுதற்கு தெளிவிருந்து தூளைப்போட்டு அங்கனவே வாசியோடிழுத்துவாங்கே

விளக்கவுரை :

[ads-post]

628. வாங்கியே தினந்தோறும் விடியற்காலைமாலையிலே கியாழமொன்று வைக்கக்கேளு
பாங்கியே மிளகதுதான் இருபத்தஞ்சு பரிவான அருகம்வேர் பிடிதானொன்று
தேங்கியே பிடித்துநன்றாய் சட்டியிலேபோட்டு திறமாக படியொன்று தண்ணீர்விட்டு
ஆங்கியே ஆழாக்காய் காய்ச்சிக்கொண்டு ஆலெண்ணப் பாக்களவு போட்டருந்தே

விளக்கவுரை :


629. அருந்தியேகாலமே கடுக்காய்கொள்ளு அப்பனே மாலையிலே கியாழங்கொள்ளு
பொருந்தியே உடலுக்குத் தாகமில்லை புளியுப்பு எண்ணெயெல்லாம் தள்ளுதள்ளு
அருந்தியே மண்டலந்தான் கொள்ளும்போது அப்பனேயொருமுறைதான் சட்டைநீக்கும்
மொருந்தியே இக்கற்பம் கொண்டாயானால் புண்ணியனே திரேகமது இறுகும்பாரே

விளக்கவுரை :


630. இறுகுமே செங்கடுக்காய் மிக்கநன்று இதமாக கிடைக்காட்டி பொற்கடுக்காய்நன்று
அறுகுமே ஆணியாவணிக்குமப்பா அழகான வெல்லத்தினோடேகொள்ளு
தருகுமே சித்திரைவைகாசிக்கப்பா சாதகமாய் சுக்கினுட கியாழத்திற்கொள்ளு
மறுகுமே புரட்டாசியாடிக்கப்பா மாசற்ற குறிஞ்சித்தேன் தன்னிற்கொள்ளு

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar