போகர் சப்தகாண்டம் 621 - 625 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 621 - 625 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

621. உண்ணவே கற்பத்துக்கு உறுதிகேளு உப்பாகா புளியாகா பெண்ணுமாகா
கண்ணவே துவர்ப்பாகா மோருமாகா கசிந்தயெள்ளு நல்லெண்ணெய் சுண்ணாம்பாகா
விண்ணவே நித்திரையின் சோம்பலாகா வேறான மாங்கிஷங்கள் மச்சமாகா
பண்ணவே கடுகுள்ளி காயமாகா பலபலவாம் சிந்தையெல்லாம் அறுத்துதள்ளே

விளக்கவுரை :


622. தள்ளியே உண்ணுகிற பத்தியத்தைக்கேளு சார்பான நெய்யாகும் பாலுமாகும்
அள்ளியே சிறுபயறு முருங்கையாகும் அப்பனே வெள்ளாட்டுக் கரியுமாகும்
துள்ளியே தூதுவளை யிலைகாயாகும் சுண்டெலியாம் கவுதாரி காடையாகும்
பள்ளியே பழமாகும் மழுவெல்லாம் தேனாகும் பானமாமே

விளக்கவுரை :

[ads-post]

623. ஆமப்பா சிறுகீரை அரைக்கீரையாகும் அதிகமாம் புளியாரை நல்லாரையாகும்
போமப்பா பொன்னி நல்லாங்கன்னியாகும் புளிப்பான நெல்லிக்காய் வூற்காயாகும்
தேமப்பா வழுதலங்காய் பீர்க்கங்காயாகும் சிறப்பான மூசலாகும் ஊர்க்குருவியாகும்
வாமப்பா மரையாகும் மானுமாகும் வகையாக இப்படிதான் பத்தியமாயுண்ணே   

விளக்கவுரை :


624. உண்ணுறது ஒருசேரை பரிசியப்பா உத்தமனே உத்தமனே ஒருபொழுது வெந்நீர்கொள்ளு
பண்ணுறதோர் மருந்துகளில் காந்திகொண்டால் பசுவின்பால் ராக்காலமொருசேர்கொள்ளு
விண்ணுறது உள்ளமுடம் பெல்லாம்பாரு வேதாந்தவாலையைத்தான் நித்தம்பூசி
அண்ணுறது குருபதத்தை அடுத்துநித்தம் அடுக்கடுக்காய் உண்ணுகிற கற்பங்கேளே  

விளக்கவுரை :


625. உண்ணவே வயதங்கே இருபதாகி உத்தமனே இருபதுநாள் கடுக்காய்க்கொள்ளு
கண்ணவே வயதங்கில் முப்பதாகில் கடிதாக முப்பதுநாள் கொள்ளுகொள்ளு
மண்ணவே வயதங்கில் நாற்பதாகில் பரிவாக கடுக்காயை நாற்பதுநாள் கொள்ளு
ரண்ணவே வயதங்கே அன்பதாகில் நலமாகப் பதினைந்து நாள்தான்கொள்ளே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar