போகர் சப்தகாண்டம் 616 - 620 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 616 - 620 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

616. தமரிட்டு உண்டைபண்ணி அதிலேபோட்டு சாதகமாய் மூன்றுதினம் கழிந்தபின்பு
அமரிட்ட செம்பட்டில் கோர்த்துக்கொண்டு ஆதியாம் பராபரியைபூசைபண்ணி 
கமரிட்ட வஸ்துசுத்தி அர்ச்சனையேசெய்து காரணமாம் சாம்பவி விமோசனமேபண்ணி
குமரிட்டு ஆதாரம் நிராதாரம் பார்த்து கொள்கியதோர் சபைதன்னில் மனதையுண்ணே

விளக்கவுரை :


617. உன்னிய பிரசத்தம் கேளாப்பக்கம் உவந்திருந்து நிஷ்டையிலே ஜபமேசெய்து
கன்னிய அஞ்செழுத்து மூன்றெழுத்தும் ஓதி காரணமாம் குருசொல்ல வுறுதிகேட்டு
மன்னியே மதியில்நின்று அமுதத்தையுண்ண பரிதிகண்ட பனிபோல பாவம்நீங்கி
மன்னியே சிலம்பொலி நாதம்கேட்டு மகிழ்ச்சியாய் கற்பமதை உண்டுதேறே

விளக்கவுரை :

[ads-post]

618. தேறியே காந்தசத்து பலத்தைவாங்கிச் சிவப்பாகத் தங்கத்தை இடைக்கிடையேகூட்டி
மாறவே ரெண்டுமொன்றாய் புகும்போது மைந்தனே நாகமொரு பலத்தைப்போடு
ஆறவே கல்வத்தில் இதனைக்கொட்டி அதட்டியே பொடிபண்ணி சூதம்சேர்த்து
காரவே ரெண்டுபலம் கெந்தியிட்டுக் காரியமாய் பொற்றலையின் சாற்றாலாட்டே

விளக்கவுரை :


619. ஆட்டியே அறுசாமம் ரவியில்வைத்து அப்பனே பொடிபண்ணி குப்பிக்கேற்றி
நீட்டியே வானுகையின் மேலேவைத்து நினைவாகத்தீ போட்டு பனிரண்டுசாமம்
பூட்டியே செந்தூரப்பதத்தைப் பாரு புகழாகச் சலாகைநுனி கருப்புகாணும்
வாட்டியே ஆறவிட்டு இறக்கிக்கொட்டி மைந்தனே தங்கமென்ற சிமினில்வையே

விளக்கவுரை :


620. வைக்கவே நவலோகம் நூற்றுக்கொன்று மாட்டிடவே பனிரண்டு மாற்றுமாகும்
மெய்க்கவே பணவிடைதான் தேனிலுண்ண மேனியெல்லாம் தங்கமாகும்பாரு
நைக்கவே நரைதிரை எல்லாம்மாறும் நமனென்ற சொல்லுமில்லை கற்பகோடி
சைக்கவே புளியுப்பு இரண்டும்விட்டு கன்னியின் மேலாசைவிட்டு உண்ணு உண்டே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar