போகர் சப்தகாண்டம் 511 - 515 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

511. பாரப்பாநூல் மற்றநூல்களெல்லாம் பரிபாஷைக் கருவாகச் சொன்னாரையா
நேரப்பா கண்ணாடி மூக்கும்போல் நேர்பாக சமர்சொல்லி வைத்தார் தேவர்
சேரப்பா சாஸ்திரங்கள் பார்க்கப்பார்க்கத் திருட்டெல்லாம்வெளியாகும் மறைப்புமில்லை
ஆரப்பா என்னுடைய நூலுகண்டோர் ஆதியென்ற கொங்கணர்தான் கரைகண்டாரே

விளக்கவுரை :


512. கண்கண்ட கோரையென்ற வீரவுப்பைக் காட்டுகிறேன் கருவாகக் கேளுங்கள்மக்காள்
பாரைகண்ட சவ்வீரம் பலந்தானெட்டு பாய்ச்சிநன்றாய் கல்வத்திற் பொடியாய்ப் பண்ணி
திரைகண்ட கல்லுப்புச் சுன்னம்ரண்டு ஜெகமறிய சவர்க்காரச் சுன்னம்ரண்டு
மறைகண்ட துரிசியென்ற சுன்னம்ரண்டு மாசற்றவெடியுப்புச் சுன்னம்ரண்டே

விளக்கவுரை :

[ads-post]

513. ரெண்டான சாரமென்ற சுன்னம்ரெண்டு நேர்பான சீனமென்ற சுன்னம்ரெண்டு
பண்டான அன்னமென்ற பேதிரண்டு பாங்கான பொடியோடே வொக்கக்கூட்டித்
தண்டான மேருவுக்கு அரைவாசிபோட்டுச் சாதகமாய் வாலுகையின் மேலேவைத்து
செண்டான அடுப்பேற்றி வைப்பாயப்பா ஜெகமறிய பனிரண்டு சாமம்தானே

விளக்கவுரை :


514. தானென்ற வீரத்தை எடுத்துப் பார்த்தால் சாதகமாய் அடியிலே தானேநிற்கும்
கானென்ற இரும்புமேல் அணுபோல்வைத்து கனமான நீரையள்ளி அதிலேகுத்தி
தேனென்ற குருவாகும் தண்ணியிலே குழைத்துச் சிறப்பாகக் காகத்தின் இறகிற்பூச
கோனென்ற கொக்கிறகுபோலேயாகும் கொள்ளையோ கொள்ளையிதில் வாதந்தானே

விளக்கவுரை :


515. வாதந்தான் எப்படிதான் வருகுமக்காள் மகத்தான துரிசியல்லோ நீறுபண்ணவேணும்
சூதந்தான் தன்னையல்லோ கட்டத்தேணும் துடியான சூதமல்லோ காயசித்தியாகும்
வேதமென்ற பொருளறிந்தான் ஞானியாவான் விரைந்தாறுதல்ம் கண்டோன் யோகியாவான்
காதந்தானென்று சொல்ல வார்த்தையாச்சு சலந்தொட்டி நடந்தாக்கால் துலையும்பாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 506 - 510 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

506. வாதமென்றால் கொஞ்சத்தில் கிடைக்குமோதான் மகத்தான யோகிமுதல் ரிஷிகள்சித்தர்
நீதமென்ற பஞ்சகர்த்தாள் இவர்களெல்லாம் நேர்ப்பாக பார்க்கையிலும் தப்பிப்போகும்
வேதமென்ற அந்தரத்தின் முடிவுக்கு ஏற்கும் விரைந்த மனோன்மணித் தாயார் சொல்லயானும்
பாதமெந்தன் சிரசில்வைத்து கேட்டுப்பரிவாக பிள்ளைகட்கா உரைசெய்தேனே

விளக்கவுரை :


507. உரைசெய்தார் சித்தர்கள்தான் அநேகம்கோடி உத்தமனே அகஸ்தியர்தான் எட்டுப்பாவாய்
நிரைசெய்தே நவகண்டம் சொன்னாரையா நேர்பாக வெண்பாவாய் கோரக்கர்தாமும்
திரைசெய்த எழு ஆயிரம்தான் சொன்னார் திரட்டியல்லோ மச்சமுனி ஏழுகாண்டம் சொன்னார்
புரைசெய்த சிவவாக்கியர் அஞ்சு காண்டம் சொன்னார் போக்கோடே சித்தர்சொன்னார் கரைகாணேணே

விளக்கவுரை :

[ads-post]

508. காணாத காசிபர்தான் வண்ணம்சொன்னார் கறையற்ற ரோமமுனி வடுகிற்சொன்னார்
பூணாதராமதேவர் சந்தப்பா சொன்னார் புகழரிய நந்திகள்தான் சந்தஞ்சொன்னார்
கோணாத சங்குமாமுனி தானையா குறைத்துமே கலித்துரையாய்த் தெளிவாய்ச்சொன்னார்
கோணாதே திருமூலநாயர் தாமும் சொன்ன திருமந்திரமும்தான் காடுகாடே

விளக்கவுரை :


509. காடாகப்போகாமல் பதஞ்சலிமாமூர்த்தி கணக்கோடே ஏழுகாண்டம் சொன்னாரையா
தோடாகச் சட்டைமுனி நிகண்டோடொக்கத் தோராமல் இருபத்துயேழுநூறு 
பாட்டாக காலாங்கிநாதர்தாமும் பக்குவமாய் நாலுகாண்டம் சொன்னாரையா  
நாயாக இருந்தபேர்க்கு உதவியென்று நலமாக ஏழுகாண்டம் சொன்னேன்பாரே   

விளக்கவுரை :


510. பார்க்கவே என்மைந்தா எழுநூறாகப் பரிவாகச் சொல்லிவிட்டேன் சூத்திரமாய்த்தானும்
நோக்கவே என்பிள்ளை கொங்கணர்தானப்பா நிறைமூன்று ஆயிரத்தன்னூறு சொன்னார்
சேர்க்கவே சட்டைமுனி நூலும்நன்று ஜெகமறிய கொங்கணர்தன் நூலும்நன்று
கார்க்கவே வேகம் ரோமமுனி நூலும்நன்று கருதியே மனமூன்றிப் பாருபாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 501 - 505 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

501. ஒளித்தாரே நாதாக்கள் என்றுசொல்லி உத்தமித்தாய்ப் பாதத்துக்குண்மையாக
அளித்தாரே லோகத்தோர் பிழைக்கவென்று ஆச்சரியம் வீரம்விட்டால் வாதம்போச்சு
களித்தாரே முன்சொன்ன வீரமெல்லாம் காரமிடும் வைத்தியத்திற்கு உறுதியாகும்
சளித்தாரே யேமமென்றும் காணாதேங்கி சுணங்களாய்ச் சூடலைந்து மாள்வான்தானே

விளக்கவுரை :


502. மாளாமல் பறங்கியென்ற பாஷாணத்தை மகிழ்வாக வைக்கிறதோர் முறையைக்கேளு
தாளாமல் சூதமொரு பலந்தான்பத்து சாகாமல் கல்லுப்பு பலந்தானெட்டு
மீளாமல் வெள்ளையென்ற பாஷாணம் ஐந்து விரவியே கல்வத்தில் பொடித்துக்கொண்டு
கேளாமல் திராவகத்தில் எட்டுநாளாட்டி கெடியாகப்பொடிபண்ணி மேருக்கேற்றே

விளக்கவுரை :

[ads-post]

503. மேருக்கேற்றி பின்வாலுகையில் வைத்து விதமாகத் தீயுங்கள் பனிரண்டுசாமம்
பேருக்கே பதங்கமது இறங்கியேறும் பெருந்தேங்காய் போலிருக்கும் பாஷாணந்தான்
பேருக்கேறினபோலமருந்து கூட்டிப்பேசாதே திராவகத்தைவிட்டு ஆட்டிப்
பாருக்கே பொடிபண்ணி மேருக்கேற்றி பக்குவமாய் வானுகையில் பதித்திட்டாயே

விளக்கவுரை :


504. பதித்திட்டு பனிரண்டுசாமம் தீயைப் பகல்முழுதும் எரியிட்டு ஆறப்போடு
விதித்திட்ட பக்குவத்தில் இறக்கிப்பாரு மேலோடுதள்ளியே பொடியாய்ப்பண்ணு
மதித்திட்டு முன்போல மருந்துகூட்டி மறவாதே மூன்றுதரம் திறந்தாயானால்  
கதித்திட்டு பரங்கியென்ற பாஷாணமாகும் கண்ணிமைக்குள் ரகிதவித்தை ஆகும்பாரே

விளக்கவுரை :


505. பாரப்பா பரங்கியென்ற பாஷாணந்தான் பலமெடுத்து அயச்சட்டிக்குள்ளேவைத்து
நேரப்பா துண்டிப்பாய் நாலுசாமம் நீத்தாதே சுருக்கிடனே மெழுகாய்ப்போகும்
தூரப்பா இரும்பு செம்பில் நூற்றுக்கொன்றி துடியான ரசிதமது பதினாறாகும்
சீரப்பா சரக்கெல்லாம் கட்டிப்போகும் சிறுபிள்ளை ஆடும்இந்த வாதந்தானே 

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 496 - 500 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

496. தானென்ற கடல்நுரையும் ஒவ்வொன்று பலந்தான் தாக்கியரை யெட்டுநாள் திராவகத்தைவிட்டு
பானென்ற ரவிதனிலே உலரப்போட்டு மருப்பீங்கான் தன்னிலிட்டு தனலில்வைத்து
ஊனென்ற பொடிப்போலே வறுத்துக்கொண்டு உற்பனமாய்க் காசியென்ற மேருக்கேற்றி
வானென்ற அரைவாசி மட்டும் போட்டு மயங்காதே மாலுகையில் வைத்திடாயே

விளக்கவுரை :


497. வைத்திட்டு தீயெரிப்பாய் பனிரெண்டுசாமம் வளமான தீபம்போல் ஆறவிட்டுக்
கைத்திட்டு தீயெரிப்பாய் கமலம்போல கலங்காத பனிரண்டுசாமம்தானும்
மொய்த்திட்டுப் பகல்முழுதும் தீயைப்போடு முயற்சியாய் ராக்காலம் ஆறப்போடு
நைத்திட்டு ஆறுநாள் ஆனபின்பு நலமாகும் பதம்பார்த்து இறக்கிடாயே

விளக்கவுரை :

[ads-post]

498. இறக்கியே குப்பியைத்தான் முன்மருந்துகூட்டி இதமாக திராவகத்தில் அரைத்துலர்த்தி
நறுக்கியே முன்போல பொடியாய்ப்பண்ணி நலமான காசிபென்ற மேருக்கேற்றி
உறக்கியே வானுகையில் மேலேவைத்து உற்பனமாய்த் தீயிட்டு அறுநாலுசாமம்
இறக்கியே ஆறவிட்டு உடைத்துவாங்கி மறுகாலும் முன்போலே மருந்தைக்கூட்டே

விளக்கவுரை :


499. கூட்டியே மும்முறைதான் செய்தாயானால் கொடுவசிப்பாய்ச் சவ்வீரமிருக்கும்பாரு
நீட்டியே சிறுவிஷமும் பலமுமஞ்சு நெடிதான அலரிவேர்பட்டை பலம்பத்து
மூட்டியே கெந்தகந்தான் பலமுரண்டு மூட்டையா மஞ்சளென்ற கருவாலாட்டி
வாட்டியே பில்லைபண்ணிப் புடத்தயிலம் வாங்கி வகையான வீரத்தில் சுருக்குபோடே

விளக்கவுரை :


500. போட்டுடனே மெழுகாக பதத்தில்வாங்கிப் பேரானரேக்குசுத்தி வைக்கத்தின்னும்
நீட்டுடனே வுள்ளுக்கு நாலுதங்கம் நிகழாமல் சுற்றிவைக்கத் தின்றுபோடும்
மூட்டுடனே ஆயிரத்துக்கொன்றீய முசியாதே பதினாலு மாற்றுமாகும்
மாட்டுடனே வுபசவங்கள் ஈயமாகும் மாசற்ற வீரத்தை ஒளித்தார்பாரே

விளக்கவுரை :


Powered by Blogger.