போகர் சப்தகாண்டம் 501 - 505 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 501 - 505 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

501. ஒளித்தாரே நாதாக்கள் என்றுசொல்லி உத்தமித்தாய்ப் பாதத்துக்குண்மையாக
அளித்தாரே லோகத்தோர் பிழைக்கவென்று ஆச்சரியம் வீரம்விட்டால் வாதம்போச்சு
களித்தாரே முன்சொன்ன வீரமெல்லாம் காரமிடும் வைத்தியத்திற்கு உறுதியாகும்
சளித்தாரே யேமமென்றும் காணாதேங்கி சுணங்களாய்ச் சூடலைந்து மாள்வான்தானே

விளக்கவுரை :


502. மாளாமல் பறங்கியென்ற பாஷாணத்தை மகிழ்வாக வைக்கிறதோர் முறையைக்கேளு
தாளாமல் சூதமொரு பலந்தான்பத்து சாகாமல் கல்லுப்பு பலந்தானெட்டு
மீளாமல் வெள்ளையென்ற பாஷாணம் ஐந்து விரவியே கல்வத்தில் பொடித்துக்கொண்டு
கேளாமல் திராவகத்தில் எட்டுநாளாட்டி கெடியாகப்பொடிபண்ணி மேருக்கேற்றே

விளக்கவுரை :

[ads-post]

503. மேருக்கேற்றி பின்வாலுகையில் வைத்து விதமாகத் தீயுங்கள் பனிரண்டுசாமம்
பேருக்கே பதங்கமது இறங்கியேறும் பெருந்தேங்காய் போலிருக்கும் பாஷாணந்தான்
பேருக்கேறினபோலமருந்து கூட்டிப்பேசாதே திராவகத்தைவிட்டு ஆட்டிப்
பாருக்கே பொடிபண்ணி மேருக்கேற்றி பக்குவமாய் வானுகையில் பதித்திட்டாயே

விளக்கவுரை :


504. பதித்திட்டு பனிரண்டுசாமம் தீயைப் பகல்முழுதும் எரியிட்டு ஆறப்போடு
விதித்திட்ட பக்குவத்தில் இறக்கிப்பாரு மேலோடுதள்ளியே பொடியாய்ப்பண்ணு
மதித்திட்டு முன்போல மருந்துகூட்டி மறவாதே மூன்றுதரம் திறந்தாயானால்  
கதித்திட்டு பரங்கியென்ற பாஷாணமாகும் கண்ணிமைக்குள் ரகிதவித்தை ஆகும்பாரே

விளக்கவுரை :


505. பாரப்பா பரங்கியென்ற பாஷாணந்தான் பலமெடுத்து அயச்சட்டிக்குள்ளேவைத்து
நேரப்பா துண்டிப்பாய் நாலுசாமம் நீத்தாதே சுருக்கிடனே மெழுகாய்ப்போகும்
தூரப்பா இரும்பு செம்பில் நூற்றுக்கொன்றி துடியான ரசிதமது பதினாறாகும்
சீரப்பா சரக்கெல்லாம் கட்டிப்போகும் சிறுபிள்ளை ஆடும்இந்த வாதந்தானே 

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar