496. தானென்ற கடல்நுரையும் ஒவ்வொன்று பலந்தான் தாக்கியரை யெட்டுநாள் திராவகத்தைவிட்டு
பானென்ற ரவிதனிலே
உலரப்போட்டு மருப்பீங்கான் தன்னிலிட்டு தனலில்வைத்து
ஊனென்ற பொடிப்போலே
வறுத்துக்கொண்டு உற்பனமாய்க் காசியென்ற மேருக்கேற்றி
வானென்ற அரைவாசி மட்டும்
போட்டு மயங்காதே மாலுகையில் வைத்திடாயே
விளக்கவுரை :
497. வைத்திட்டு தீயெரிப்பாய்
பனிரெண்டுசாமம் வளமான தீபம்போல் ஆறவிட்டுக்
கைத்திட்டு தீயெரிப்பாய்
கமலம்போல கலங்காத பனிரண்டுசாமம்தானும்
மொய்த்திட்டுப் பகல்முழுதும்
தீயைப்போடு முயற்சியாய் ராக்காலம் ஆறப்போடு
நைத்திட்டு ஆறுநாள் ஆனபின்பு
நலமாகும் பதம்பார்த்து இறக்கிடாயே
விளக்கவுரை :
[ads-post]
498. இறக்கியே குப்பியைத்தான்
முன்மருந்துகூட்டி இதமாக திராவகத்தில் அரைத்துலர்த்தி
நறுக்கியே முன்போல
பொடியாய்ப்பண்ணி நலமான காசிபென்ற மேருக்கேற்றி
உறக்கியே வானுகையில்
மேலேவைத்து உற்பனமாய்த் தீயிட்டு அறுநாலுசாமம்
இறக்கியே ஆறவிட்டு உடைத்துவாங்கி
மறுகாலும் முன்போலே மருந்தைக்கூட்டே
விளக்கவுரை :
499. கூட்டியே மும்முறைதான்
செய்தாயானால் கொடுவசிப்பாய்ச் சவ்வீரமிருக்கும்பாரு
நீட்டியே சிறுவிஷமும்
பலமுமஞ்சு நெடிதான அலரிவேர்பட்டை பலம்பத்து
மூட்டியே கெந்தகந்தான்
பலமுரண்டு மூட்டையா மஞ்சளென்ற கருவாலாட்டி
வாட்டியே பில்லைபண்ணிப்
புடத்தயிலம் வாங்கி வகையான வீரத்தில் சுருக்குபோடே
விளக்கவுரை :
500. போட்டுடனே மெழுகாக
பதத்தில்வாங்கிப் பேரானரேக்குசுத்தி வைக்கத்தின்னும்
நீட்டுடனே வுள்ளுக்கு
நாலுதங்கம் நிகழாமல் சுற்றிவைக்கத் தின்றுபோடும்
மூட்டுடனே ஆயிரத்துக்கொன்றீய
முசியாதே பதினாலு மாற்றுமாகும்
மாட்டுடனே வுபசவங்கள்
ஈயமாகும் மாசற்ற வீரத்தை ஒளித்தார்பாரே
விளக்கவுரை :