506. வாதமென்றால் கொஞ்சத்தில்
கிடைக்குமோதான் மகத்தான யோகிமுதல் ரிஷிகள்சித்தர்
நீதமென்ற பஞ்சகர்த்தாள்
இவர்களெல்லாம் நேர்ப்பாக பார்க்கையிலும் தப்பிப்போகும்
வேதமென்ற அந்தரத்தின்
முடிவுக்கு ஏற்கும் விரைந்த மனோன்மணித் தாயார் சொல்லயானும்
பாதமெந்தன் சிரசில்வைத்து
கேட்டுப்பரிவாக பிள்ளைகட்கா உரைசெய்தேனே
விளக்கவுரை :
507. உரைசெய்தார் சித்தர்கள்தான்
அநேகம்கோடி உத்தமனே அகஸ்தியர்தான் எட்டுப்பாவாய்
நிரைசெய்தே நவகண்டம்
சொன்னாரையா நேர்பாக வெண்பாவாய் கோரக்கர்தாமும்
திரைசெய்த எழு ஆயிரம்தான்
சொன்னார் திரட்டியல்லோ மச்சமுனி ஏழுகாண்டம் சொன்னார்
புரைசெய்த சிவவாக்கியர்
அஞ்சு காண்டம் சொன்னார் போக்கோடே சித்தர்சொன்னார் கரைகாணேணே
விளக்கவுரை :
[ads-post]
508. காணாத காசிபர்தான் வண்ணம்சொன்னார் கறையற்ற ரோமமுனி வடுகிற்சொன்னார்
பூணாதராமதேவர் சந்தப்பா
சொன்னார் புகழரிய நந்திகள்தான் சந்தஞ்சொன்னார்
கோணாத சங்குமாமுனி தானையா
குறைத்துமே கலித்துரையாய்த் தெளிவாய்ச்சொன்னார்
கோணாதே திருமூலநாயர் தாமும்
சொன்ன திருமந்திரமும்தான் காடுகாடே
விளக்கவுரை :
509. காடாகப்போகாமல்
பதஞ்சலிமாமூர்த்தி கணக்கோடே ஏழுகாண்டம் சொன்னாரையா
தோடாகச் சட்டைமுனி
நிகண்டோடொக்கத் தோராமல் இருபத்துயேழுநூறு
பாட்டாக காலாங்கிநாதர்தாமும்
பக்குவமாய் நாலுகாண்டம் சொன்னாரையா
நாயாக இருந்தபேர்க்கு
உதவியென்று நலமாக ஏழுகாண்டம் சொன்னேன்பாரே
விளக்கவுரை :
510. பார்க்கவே என்மைந்தா
எழுநூறாகப் பரிவாகச் சொல்லிவிட்டேன் சூத்திரமாய்த்தானும்
நோக்கவே என்பிள்ளை
கொங்கணர்தானப்பா நிறைமூன்று ஆயிரத்தன்னூறு சொன்னார்
சேர்க்கவே சட்டைமுனி
நூலும்நன்று ஜெகமறிய கொங்கணர்தன் நூலும்நன்று
கார்க்கவே வேகம் ரோமமுனி
நூலும்நன்று கருதியே மனமூன்றிப் பாருபாரே
விளக்கவுரை :