போகர் சப்தகாண்டம் 581 - 585 of 7000 பாடல்கள்
581. போமெனவே ரவியில்வைத்துத்
தரிசியைநீவாங்கிப் பொடிபண்ணிக் கல்வத்தில் திராவகத்தைவார்த்து
ஆவெனவே மறுசாமம்
அரைத்தபின்பு அப்பனே மறுபீங்கான் தன்னில் வைத்து
காவெனவே நீர்குத்தி
ரவியிற்போடு கலங்காதே மூன்றுநாள் ஆனபின்பு
தாமெனவே
தணலுருகுவறுத்துப்போட்டுத் தயங்காதே பொடிபோலே மேருக்கேற்றே
விளக்கவுரை :
582. ஏற்றியே தீமூட்டு
பனிரண்டுசாமம் இதமாகக்கடந்தபின்பு ஆறவிட்டு
மாற்றியே புடைத்தெடுத்து
கல்வத்திலிட்டு வாகானதிராவகத்தில் அரைத்துமுன்போல்
தூற்றியே
செரும்பீங்கான்தன்னில் வைத்துதுடிப்பான திராவகத்தைக் குத்துகுத்து
ஆற்றியே தணலுக்குள்
வறுத்துப்போடு அதிதமாம் காசிபென்ற மேருக்குப்போடே
விளக்கவுரை :
[ads-post]
583. போட்டுமே வானுகையின்
மேலேவைத்துப் பொலிவாகத்தீபம்போல் தீயைப்போடு
ஆட்டுமே பனிரண்டுசாமமானால்
அப்பனே ஆறவிட்டு எடுத்துப்பாரு
காட்டுமே ஐந்துதரம் இப்படியே
பண்ணு கசடற்ற வருணனைப்போல் சிவந்துகாணும்
தீட்டுமே அம்மரத்தைக்
கத்திகொண்டு செதுக்கியதோர் வாளொக்கும் துரிசியாட்டே
விளக்கவுரை :
584. ஆட்டான செந்தூரம்
நவலோகத்தில் அணைத்திடவே பத்தரைதான் ஆயிரத்துக்கொன்று
மூட்டான சூதகத்தைக்
கரண்டியிலேவிட்டு மூந்துநின்ற செந்தூரம் ஆரையிலைக்கட்டு
காட்டான சாரதனைப்
பிழிந்தாயானால் கனகம்போல் திரண்டுருண்டு மணியுமாகும்
வாட்டான சூடன் அதிற்குள்ளே
வாட்டி மருவநன்றாய் உருக்கிடவே ஜோதியாமே
விளக்கவுரை :
585. ஜோதியாம் குளிகைதனை
வாயில்வைக்கச் சுக்கிலத்தம்பனையாகும் வசியமாகும்
வாதியாம் கைக்குளிது
இருந்துதென்றால் வாதாடிசண்டையிட்டோர்
வணக்கமாவார்ஜாதியாம்
குலங்களென்று தர்க்கம்யேகிச் சண்டையிட்டு மயிர்பிடித்து சாகவேண்டாம்
பேதியாம் காயத்தை
சித்திபண்ணி பேரான சித்தினிட மரபில்நில்லே
விளக்கவுரை :