போகர் சப்தகாண்டம் 596 - 600 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

596. உப்பான கெந்தியது திராவகசத்துக்காதி உத்தமனே சாரணைக்கு முதலியாகும்
தப்பான சொல்லில்லை கருமறைப்போயில்லை சத்தியமாய் நான்பார்த்தபடி தான்சொன்னேன்
சப்பான அஞ்சுகொம்பில் மனந்தான்சென்று கலகத்தில் விழுகாதே கருத்தூன்றிப்பார்
அப்பான உப்புப்போல் நேர்மைபாரு அழும்பருடன் பேசாமல் இருக்கநன்றே

விளக்கவுரை :


597. நன்றெனவே குடோரியொன்று சொல்லக்கேளு நலமான வெடியுப்பு நாலாங்காய்ச்சல்
கன்றெனவே பலம்நாலு கல்வத்திலிட்டு கானிதுக்கு சமனாகப் பூநீருபோட்டு 
வின்றெனவே வெள்ளையென்ற பாஷாணந்தான் வெங்காரம் பலம்நாலு பொறித்துப்போட்டு
தன்றெனவே தாளகமும் நாலுபலமே போட்டு சாதகமாய்ச் சூதமது பலமும்நாலே

விளக்கவுரை :

[ads-post]

598. நாலோடு அரைபலந்தான் சாரம்போடு நலமாகக் கல்லுப்பு வறுத்துப்போடு  
சாலோடு நாலுபலம் கூட்டிப்போடு தளையெல்லாம் எருக்கினுடபாலினாலே
காலோடு மறுசாமம் அரைத்து நன்றாய்க் கனமான ரவிதனிலே பொடியாய்ப்பண்ணி
மேலோடு காசிபென்ற மேருக்கேற்றி விரவியே அரைவாசிமட்டும்போடே

விளக்கவுரை :


599. போட்டுமே வானுகையில் மேலேவைத்து பொலிவாகத் தீமூட்டுகமலம்போல
வாட்டுமே பனிரண்டு சாமந்தானும் பதறாமல்போட்டுவா கமலத்தீயை
ஆட்டுமே ஆறவிட்டு எடுத்துப்பாரு அரகரா வயிரம்போல் பதங்கித்துநிற்கும்
காட்டுமே சத்துதனில் கரைநீராகக் கண்விட்டு ஈயம்போல் இருக்குந்தானே

விளக்கவுரை :


600. தானான சூடனது வைப்புகேளு தனித்துநின்ற வாழையுடகிழங்கு தண்ணீர்
தேனென்ற படிபத்து அளந்துகொண்டு சிறப்பான செம்பினுட பாண்டத்தில்விட்டு
வேனென்ற வெடியுப்பு நாலுபத்து பலந்தான் வெகுளாமல் பொடிபண்ணி கூடப்போட்டு
மானென்ற அடுப்பேற்றி யெறிநேர்பாக வற்றியெல்லாம் குழம்புபோல வருகும்பாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 591 - 595 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam
591. வேடமா இந்துப்பு வைப்புசொல்வேன் விளங்கியதோர் நாலடுப்பு வரிசையாய்க்கட்டி
பாடமாம் அடிகனத்த சட்டிவைத்து பருவமாய்க் கடல்நீரில் உப்புகாய்ச்சி
கோடமாமரத்தினந் தினமும்காய்ச்சிக் காய்ச்சிக் கொட்டியே வடிப்பாரமுள்ளபானை
காடமாய் நிறைத்திட்டு அடுப்பிலேற்றி காடாக்கினியாகவே தீயைமூட்டே

விளக்கவுரை :


592. மூட்டவே வெந்துருகிச் சலமாய்நிற்கும் முனையாக முப்பத்துக்கொன்று சீனம்
நீட்டவே வெடியுப்பு முப்பத்துக்கொன்று நேராகப்பொடிபண்ணி அதிலேபோடு
ஆட்டவே வெந்து ஒன்றாய் குழம்பாய்நிற்கும் ஆறவிட்டுப் பானையைதான் உடைத்துவாங்கி
காட்டவே வெளுப்பாக கட்டியாகும் கல்லுப்பில் செய்தாக்கால் சிவந்துபோமே

விளக்கவுரை :

[ads-post]

593. சிவக்கின்ற இந்துப்பு வாதத்துக்காய்ச் செய்கின்ற பேர்களுக்கு கல்லுப்புச்சுளுகு
பவக்கின்ற லோகத்தோர் கல்லுப்பில் செய்வார் பரங்கியென்றால் கடல்நீரில் உப்புகாய்ச்சி
கவக்கின்ற வண்ணார் தன்னுப்புப்போலச் சதுரமாய்க் கட்டில்வைத்துச் செய்வாரையா
அவக்கின்ற கட்டியாய் வெளுப்புமெத்த ஆகையால் சுண்ணாம்புக்கு இதுதானென்றே

விளக்கவுரை :


594. நன்றெனவே கெந்தியுப்பு வைப்புகேளு நலமாகக்கடல்நீரில் உப்புகாய்ச்சி
கண்டனவே அடிகனத்த பானையிலேபோட்டு காய்ச்சினதோருப்புக்குப் பதினாறிலொன்று
தண்டனவே சரைகெந்தி பொடித்துப்போட்டு சாதகமாய் முப்பத்துக் கொன்றுநீலம்
பண்டெனவே வெடியுப்பும் அப்படியேயாகும் பாங்காகப் பொடித்ததெல்லாம் கூடப்போடே

விளக்கவுரை :


595. கூடவிட்டு அடுப்பேற்றி எரிநால்சாமம் கோடிகோடாக்கினியாம் தீயைப்போடு
ஆடவிட்டு உப்புருகி நிற்கும்போது அதிற்போடு மருந்தெல்லாம் பொடியாய்ப்பண்ணி
வாடவிட்டு நால்சாமம் எரித்தபின்பு மயங்காதே சீதளமாய் ஆறப்போடு   
நாடவிக்கிப் பானையைத்தானுடைவாங்க நலமான வயிரம்போலுப்புமாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 586 - 590 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

586. சித்தரென்ற நாமமது எதினாலாச்சு சிவ வித்தைக் கட்டியதோர் தீர்மையாலே
மத்தனென்ற நாமமது எதினாலாச்சு பானமென்ற தூசிக்கா பருவத்தாலே
நித்தனென்ற நாமமது எதினாலாச்சு நிலைத்தாறு தலம்கண்ட நிலையினாலே
முத்தனென்ற நாமமது எதினாலாச்சு மூச்சற்ற ஞானவிடம்கண்ட ஞானியோர்க்கே

விளக்கவுரை :


587. ஞானிநானென்று சொல்லிவாய்பேசாமல் மாண்பர் நலமான அவ்வேடம் பூண்டுகொண்டு
யோனிதனக்காசை சாத்திரங்கள் சொல்லி உண்மையாபென்ற மந்திரங்கள் உபதேசித்து
பானியென்ற பணம்பரித்து பொய்கள்சொல்லி பார்த்துக்கொள்வேன் என்று நரகத்தில்புக்கி
சூணியென்ற நோய்வந்தால் அமைத்தபடியென்று சுழன்றலைவார் ஞானியல்ல வேடத்தோரே

விளக்கவுரை :

[ads-post]

588. வேடமாந் துரிசியென்ற செந்தூரம் பலந்தான் விளங்கியதோர் சுத்தித்த பூரமொன்று
காடமந்த தங்கமென்ற ரேக்குத்தானும் கடுகவே அரைப்பலந்தான் கூடவிட்டு
பாடமாம் வெற்றிலையின் சாற்றாலாட்டு பக்குவமாய்ப் பொடியாக்கி குப்பிக்கேற்றி
வாடமாம் வாலுகையின் மேலேவைத்து வளமாகபனிரண்டுசாமம் தீயெரியே

விளக்கவுரை :


589. தீயெரித்து ஆறவிட்டு எடுத்துப்பாரு சிவப்பென்றால் வெகுசிவப்பு அருணன்போலாம்
ஆயெரித்து நவலோகம் ஆயிரத்துக்கொன்று அணைத்திடவே பதினாறுமாற்றுமாகும்
பாயெரித்து பணவிடைதான் தேனிலுண்ணு பளபளக்கும் உடம்பெல்லாம் மண்டலத்தில்
மனம்வெறுத்து வறுமையுற்றால் என்னஞானம் வழங்கியதோர் சித்தியெல்லாம் மண்ணாய்ப்போமே

விளக்கவுரை :


590. மண்ணாசை கொண்டல்லோ சிறிதுபேர்கள் மாயமாம் வாசனையில் இறந்துபோனார்
பெண்ணாசை கொண்டல்லோ சிறிதுபேர்கள் பொன்தோற்றுப் பேயராய் மாண்டுபோனார்
உண்ணாசை கொண்டல்லோ சிறிதுபேர்கள் உலுத்தராய்ப் பிச்சையெடுத்து உண்டிறந்தார்
கண்ணாசை பசுவுக்கு இருக்குமாம்போல் கலக்கமற்ற ஞானிக்கு வேடமென்னசொல்லே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 581 - 585 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

581. போமெனவே ரவியில்வைத்துத் தரிசியைநீவாங்கிப் பொடிபண்ணிக் கல்வத்தில் திராவகத்தைவார்த்து
ஆவெனவே மறுசாமம் அரைத்தபின்பு அப்பனே மறுபீங்கான் தன்னில் வைத்து
காவெனவே நீர்குத்தி ரவியிற்போடு கலங்காதே மூன்றுநாள் ஆனபின்பு
தாமெனவே தணலுருகுவறுத்துப்போட்டுத் தயங்காதே பொடிபோலே மேருக்கேற்றே

விளக்கவுரை :


582. ஏற்றியே தீமூட்டு பனிரண்டுசாமம் இதமாகக்கடந்தபின்பு ஆறவிட்டு
மாற்றியே புடைத்தெடுத்து கல்வத்திலிட்டு வாகானதிராவகத்தில் அரைத்துமுன்போல்
தூற்றியே செரும்பீங்கான்தன்னில் வைத்துதுடிப்பான திராவகத்தைக் குத்துகுத்து
ஆற்றியே தணலுக்குள் வறுத்துப்போடு அதிதமாம் காசிபென்ற மேருக்குப்போடே

விளக்கவுரை :

[ads-post]

583. போட்டுமே வானுகையின் மேலேவைத்துப் பொலிவாகத்தீபம்போல் தீயைப்போடு
ஆட்டுமே பனிரண்டுசாமமானால் அப்பனே ஆறவிட்டு எடுத்துப்பாரு
காட்டுமே ஐந்துதரம் இப்படியே பண்ணு கசடற்ற வருணனைப்போல் சிவந்துகாணும்
தீட்டுமே அம்மரத்தைக் கத்திகொண்டு செதுக்கியதோர் வாளொக்கும் துரிசியாட்டே

விளக்கவுரை :


584. ஆட்டான செந்தூரம் நவலோகத்தில் அணைத்திடவே பத்தரைதான் ஆயிரத்துக்கொன்று
மூட்டான சூதகத்தைக் கரண்டியிலேவிட்டு மூந்துநின்ற செந்தூரம் ஆரையிலைக்கட்டு
காட்டான சாரதனைப் பிழிந்தாயானால் கனகம்போல் திரண்டுருண்டு மணியுமாகும்
வாட்டான சூடன் அதிற்குள்ளே வாட்டி மருவநன்றாய் உருக்கிடவே ஜோதியாமே

விளக்கவுரை :


585. ஜோதியாம் குளிகைதனை வாயில்வைக்கச் சுக்கிலத்தம்பனையாகும் வசியமாகும்
வாதியாம் கைக்குளிது இருந்துதென்றால் வாதாடிசண்டையிட்டோர்
வணக்கமாவார்ஜாதியாம் குலங்களென்று தர்க்கம்யேகிச் சண்டையிட்டு மயிர்பிடித்து சாகவேண்டாம்
பேதியாம் காயத்தை சித்திபண்ணி பேரான சித்தினிட மரபில்நில்லே

விளக்கவுரை :


Powered by Blogger.