போகர் சப்தகாண்டம் 586 - 590 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 586 - 590 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

586. சித்தரென்ற நாமமது எதினாலாச்சு சிவ வித்தைக் கட்டியதோர் தீர்மையாலே
மத்தனென்ற நாமமது எதினாலாச்சு பானமென்ற தூசிக்கா பருவத்தாலே
நித்தனென்ற நாமமது எதினாலாச்சு நிலைத்தாறு தலம்கண்ட நிலையினாலே
முத்தனென்ற நாமமது எதினாலாச்சு மூச்சற்ற ஞானவிடம்கண்ட ஞானியோர்க்கே

விளக்கவுரை :


587. ஞானிநானென்று சொல்லிவாய்பேசாமல் மாண்பர் நலமான அவ்வேடம் பூண்டுகொண்டு
யோனிதனக்காசை சாத்திரங்கள் சொல்லி உண்மையாபென்ற மந்திரங்கள் உபதேசித்து
பானியென்ற பணம்பரித்து பொய்கள்சொல்லி பார்த்துக்கொள்வேன் என்று நரகத்தில்புக்கி
சூணியென்ற நோய்வந்தால் அமைத்தபடியென்று சுழன்றலைவார் ஞானியல்ல வேடத்தோரே

விளக்கவுரை :

[ads-post]

588. வேடமாந் துரிசியென்ற செந்தூரம் பலந்தான் விளங்கியதோர் சுத்தித்த பூரமொன்று
காடமந்த தங்கமென்ற ரேக்குத்தானும் கடுகவே அரைப்பலந்தான் கூடவிட்டு
பாடமாம் வெற்றிலையின் சாற்றாலாட்டு பக்குவமாய்ப் பொடியாக்கி குப்பிக்கேற்றி
வாடமாம் வாலுகையின் மேலேவைத்து வளமாகபனிரண்டுசாமம் தீயெரியே

விளக்கவுரை :


589. தீயெரித்து ஆறவிட்டு எடுத்துப்பாரு சிவப்பென்றால் வெகுசிவப்பு அருணன்போலாம்
ஆயெரித்து நவலோகம் ஆயிரத்துக்கொன்று அணைத்திடவே பதினாறுமாற்றுமாகும்
பாயெரித்து பணவிடைதான் தேனிலுண்ணு பளபளக்கும் உடம்பெல்லாம் மண்டலத்தில்
மனம்வெறுத்து வறுமையுற்றால் என்னஞானம் வழங்கியதோர் சித்தியெல்லாம் மண்ணாய்ப்போமே

விளக்கவுரை :


590. மண்ணாசை கொண்டல்லோ சிறிதுபேர்கள் மாயமாம் வாசனையில் இறந்துபோனார்
பெண்ணாசை கொண்டல்லோ சிறிதுபேர்கள் பொன்தோற்றுப் பேயராய் மாண்டுபோனார்
உண்ணாசை கொண்டல்லோ சிறிதுபேர்கள் உலுத்தராய்ப் பிச்சையெடுத்து உண்டிறந்தார்
கண்ணாசை பசுவுக்கு இருக்குமாம்போல் கலக்கமற்ற ஞானிக்கு வேடமென்னசொல்லே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar