591. வேடமா இந்துப்பு
வைப்புசொல்வேன் விளங்கியதோர் நாலடுப்பு வரிசையாய்க்கட்டி
பாடமாம் அடிகனத்த
சட்டிவைத்து பருவமாய்க் கடல்நீரில் உப்புகாய்ச்சி
கோடமாமரத்தினந்
தினமும்காய்ச்சிக் காய்ச்சிக் கொட்டியே வடிப்பாரமுள்ளபானை
காடமாய் நிறைத்திட்டு
அடுப்பிலேற்றி காடாக்கினியாகவே தீயைமூட்டே
விளக்கவுரை :
592. மூட்டவே வெந்துருகிச்
சலமாய்நிற்கும் முனையாக முப்பத்துக்கொன்று சீனம்
நீட்டவே வெடியுப்பு
முப்பத்துக்கொன்று நேராகப்பொடிபண்ணி அதிலேபோடு
ஆட்டவே வெந்து ஒன்றாய்
குழம்பாய்நிற்கும் ஆறவிட்டுப் பானையைதான் உடைத்துவாங்கி
காட்டவே வெளுப்பாக
கட்டியாகும் கல்லுப்பில் செய்தாக்கால் சிவந்துபோமே
விளக்கவுரை :
[ads-post]
593. சிவக்கின்ற இந்துப்பு
வாதத்துக்காய்ச் செய்கின்ற பேர்களுக்கு கல்லுப்புச்சுளுகு
பவக்கின்ற லோகத்தோர்
கல்லுப்பில் செய்வார் பரங்கியென்றால் கடல்நீரில் உப்புகாய்ச்சி
கவக்கின்ற வண்ணார்
தன்னுப்புப்போலச் சதுரமாய்க் கட்டில்வைத்துச் செய்வாரையா
அவக்கின்ற கட்டியாய்
வெளுப்புமெத்த ஆகையால் சுண்ணாம்புக்கு இதுதானென்றே
விளக்கவுரை :
594. நன்றெனவே கெந்தியுப்பு
வைப்புகேளு நலமாகக்கடல்நீரில் உப்புகாய்ச்சி
கண்டனவே அடிகனத்த
பானையிலேபோட்டு காய்ச்சினதோருப்புக்குப் பதினாறிலொன்று
தண்டனவே சரைகெந்தி
பொடித்துப்போட்டு சாதகமாய் முப்பத்துக் கொன்றுநீலம்
பண்டெனவே வெடியுப்பும்
அப்படியேயாகும் பாங்காகப் பொடித்ததெல்லாம் கூடப்போடே
விளக்கவுரை :
595. கூடவிட்டு அடுப்பேற்றி
எரிநால்சாமம் கோடிகோடாக்கினியாம் தீயைப்போடு
ஆடவிட்டு உப்புருகி
நிற்கும்போது அதிற்போடு மருந்தெல்லாம் பொடியாய்ப்பண்ணி
வாடவிட்டு நால்சாமம்
எரித்தபின்பு மயங்காதே சீதளமாய் ஆறப்போடு
நாடவிக்கிப்
பானையைத்தானுடைவாங்க நலமான வயிரம்போலுப்புமாமே
விளக்கவுரை :