போகர் சப்தகாண்டம் 596 - 600 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 596 - 600 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

596. உப்பான கெந்தியது திராவகசத்துக்காதி உத்தமனே சாரணைக்கு முதலியாகும்
தப்பான சொல்லில்லை கருமறைப்போயில்லை சத்தியமாய் நான்பார்த்தபடி தான்சொன்னேன்
சப்பான அஞ்சுகொம்பில் மனந்தான்சென்று கலகத்தில் விழுகாதே கருத்தூன்றிப்பார்
அப்பான உப்புப்போல் நேர்மைபாரு அழும்பருடன் பேசாமல் இருக்கநன்றே

விளக்கவுரை :


597. நன்றெனவே குடோரியொன்று சொல்லக்கேளு நலமான வெடியுப்பு நாலாங்காய்ச்சல்
கன்றெனவே பலம்நாலு கல்வத்திலிட்டு கானிதுக்கு சமனாகப் பூநீருபோட்டு 
வின்றெனவே வெள்ளையென்ற பாஷாணந்தான் வெங்காரம் பலம்நாலு பொறித்துப்போட்டு
தன்றெனவே தாளகமும் நாலுபலமே போட்டு சாதகமாய்ச் சூதமது பலமும்நாலே

விளக்கவுரை :

[ads-post]

598. நாலோடு அரைபலந்தான் சாரம்போடு நலமாகக் கல்லுப்பு வறுத்துப்போடு  
சாலோடு நாலுபலம் கூட்டிப்போடு தளையெல்லாம் எருக்கினுடபாலினாலே
காலோடு மறுசாமம் அரைத்து நன்றாய்க் கனமான ரவிதனிலே பொடியாய்ப்பண்ணி
மேலோடு காசிபென்ற மேருக்கேற்றி விரவியே அரைவாசிமட்டும்போடே

விளக்கவுரை :


599. போட்டுமே வானுகையில் மேலேவைத்து பொலிவாகத் தீமூட்டுகமலம்போல
வாட்டுமே பனிரண்டு சாமந்தானும் பதறாமல்போட்டுவா கமலத்தீயை
ஆட்டுமே ஆறவிட்டு எடுத்துப்பாரு அரகரா வயிரம்போல் பதங்கித்துநிற்கும்
காட்டுமே சத்துதனில் கரைநீராகக் கண்விட்டு ஈயம்போல் இருக்குந்தானே

விளக்கவுரை :


600. தானான சூடனது வைப்புகேளு தனித்துநின்ற வாழையுடகிழங்கு தண்ணீர்
தேனென்ற படிபத்து அளந்துகொண்டு சிறப்பான செம்பினுட பாண்டத்தில்விட்டு
வேனென்ற வெடியுப்பு நாலுபத்து பலந்தான் வெகுளாமல் பொடிபண்ணி கூடப்போட்டு
மானென்ற அடுப்பேற்றி யெறிநேர்பாக வற்றியெல்லாம் குழம்புபோல வருகும்பாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar