601. வருதல்கண்டு கருவாயின்
பட்டைதன்னை வகையாகத் தூள்பண்ணி தயிலம்வாங்கி
திருகல்கண்டு படிதானும்
கூடவிட்டு சிறப்பான புட்டான பதத்திற்காய்ச்சி
கருதல்கண்டு இறக்கியே
ஆறவிட்டுக் கசகாமல் உளிகொண்டு வெட்டிவாங்கி
அருகல்கண்டு பரணிதனில்
அடைத்துப்போடு ஆச்சரியம் சூடனென்ற பேருமாச்சே
விளக்கவுரை :
602. ஆச்சிந்த சூடனைத்தான்
பொடியாய்ப்பண்ணி அகண்டசெம்புபானைதனில் கால்வாசிபோட்டு
பாச்சிந்த செம்பினுட
சூடத்துநீரை பக்குவமாய் மேல்வைத்துச் சீலைசுற்றி
காச்சிந்த அடுப்பேற்றிக்
கமலம்போல கையொருக்கத் தண்ணீரை பதத்தைப்பார்த்து
கீச்சிந்த ஆவிவிடுத்துப்
பார்க்க கிண்ணியென்ற கற்பூரமாகும்பாரே
விளக்கவுரை :
[ads-post]
603. பாரப்பா கிண்ணியென்ற
கற்பூரத்தில் பக்குவமாய்க் கட்டினதோர் சரக்கையெல்லாம்
வாரப்பா பரிசுற்றி
வாட்டென்றதெல்லாம் மைந்தனே இதினுடைய தீயில்வாட்டு
நேரப்பா புகையடங்கி
பரியுள்ளவாங்கி நேர்ப்பாகச் செந்தூரமாகும்பாரு
காரப்பா விளக்குதான்
கற்பூரவிளக்கு கருகாமல் சிவக்குமிந்த தீபந்தானே
விளக்கவுரை :
604. தானென்ற அயமுருக்கு
வித்தைகேளு சாதகமயெலியாலம்பால் ரண்டுசேரில்
கானென்ற கெந்தகத்தைப்
பொடியாய்ப்பண்ணி கனமான நாலுபலம் கூடப்போட்டு
லவனென்ற வெண்காரம்
பலமும்ரண்டு மெலிவான குடோரி கால்பலமும்போடு
ஊனென்ற செவ்வல்லிக்
கிழங்குதானும் உரலிலிட்டு இடித்துச்சார் சேரவாரே
விளக்கவுரை :
605. வார்த்துடனே யெள்ளெண்ணை
ரெண்டுசேரு வாகாக வுதுவெல்லாம் அயச்சட்டிலிட்டு
பேர்த்துடனே அடுப்பேற்றி
யெறித்துமெள்ளப் பொங்காமல் தயிலமென்ற பதத்தில்வாங்கு
சேர்த்துடனே யரப்பொடிதான்
பலமும்நாலு திறமான காந்தத்தால் எடுத்துக்கொண்டு
ஏர்த்துடனே பீங்கானில்
பொடியைப்போட்டு இதமாகத் தயிலத்தில் பிசறிவையே
விளக்கவுரை :