606. வைத்துமே மூன்றுநாள்
ஆனபின்பு வஜ்ஜிரமாம் குகைதன்னில் அடைத்துமூடி
மொய்த்துமே சரவுலையில்
வைத்துவூத பேரான அயந்தானும் உருகியாடும்
நைத்துமே பொடியாக்கித்
தயிலத்தில் பிசறிநலமாக முன்போலவுருக்கித்தீரு
தைத்துமே
தாமுருக்கித்தீர்ந்தால் கனமான அயந்தானும் நாகந்தானே
விளக்கவுரை :
607. நாகமாம் அயந்தானும்
சிவந்திருக்கும் நண்பாக இடைக்கிடைதான் தங்கத்திலீய்ந்து
பாகமாயுருகையிலே நாகமீயப் பதையாமல்
நாகமங்கே கட்டிப்போகும்
சாகமாம் கல்வத்தில்
இதனையிட்டு தனைப்பொடித்து நாகயிடைச் சூதங்கட்டி
ஆகமாம் சூதத்தில்
ரெட்டிகெந்தி அரைத்துமே மல்லிகையின் சாற்றாலாட்டே
விளக்கவுரை :
[ads-post]
608. ஆட்டுவது நாகரசமானபின்பு
அப்பனே ரவியில்வைத்து பொடியாய்ப்பண்ணி
பூட்டுவது காசிபென்ற
மேருக்கேற்றி பேரானவானுகையில் மேலேவைத்துக்
காட்டுவாய் பனிரண்டுசாமம்
தீயைக்கமலம்போல் எறியிட்டுக் கலரவாங்கி
ஊட்டுவது நவலோகம்
நூற்றுக்கொன்று உட்புகுந்து பத்தரைதான் தப்பாவாறே
விளக்கவுரை :
609. வாறுகேள் செந்தூரம்
குன்றியுண்ணு மண்டலத்தில் நரைதிரைகளெல்லாம் மாறும்
கூறுகேள் தேகமது
கருங்கல்லாகும் குத்தினால் மலைகளெல்லாம் பொடியாய்ப்போகும்
தேறுகேள் தேகமது
வுவர்ந்தகாலம் சென்றாலும் பதினாறுவயது போலாகும்
வேறுகேள் வாசியெல்லாம்
உள்ளெநிற்கும் வெளியோடே மனங்கப்பண்ணும்பாரே
விளக்கவுரை :
610. பண்ணவே காந்தத்தின்
சத்துகேளு பருக்கையாய்ப்பொடித்து அயச்சட்டியிட்டு
குண்ணவே கொள்ளிலையின்
சாறுவாங்கிக் குன்றாதே நால்சாமம் சுறுக்குப்போடு
விண்ணவே வெள்ளாட்டு
உதிரம்வார்த்து விளங்கவே அதின்தோலில் வைத்துகட்டி
கண்ணவே குழிவெட்டி
குப்பைக்குள்வைத்து கலங்காதே இருபதுநாள் மூடிப்போடே
விளக்கவுரை :