போகர் சப்தகாண்டம் 686 - 690 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

686. உண்ணவே மண்டலத்தில் வெளியேமீறும் உத்தமனே கால்கள்ரண்டு கற்றூணாகும்
விண்ணவே பச்சைரசமென்றுதின்னு வெகுளாதே பாஷாணமெல்லாம் தின்னு
விண்ணவே உபரசத்தின் சத்தைத்தின்னு கலங்காதே வாசிகொண்டு உள்ளேபூரு
பண்ணவே நடக்கையிலும் இருக்கையிலும் நீரன் பழக்கமுண்டு மூலத்தைப்பாருபாரே

விளக்கவுரை :


687. பார்க்கவே உப்பென்ற களங்கள்தன்னைப் பலபலவாம் லோகத்தில் அன்பதுக்கொன்றீய்ந்து
ஏர்க்கவே இதைவிற்றுச் செலவுசெய்து எளிதாக அன்னவரை தண்ணீர்கொள்ளு
கார்க்கவே யொருசேரைச் சமைத்துவுண்டு கனமான கற்பத்தை வுண்டுதேறு  
தோர்க்கவே வுட்புகுந்து மூலம்பாரு தொடுகுறிபோல் ஆறுதளம் வெளியாய்போமே

விளக்கவுரை :

[ads-post]

688. வெளியான வப்பிரேக சத்துகேளு விளங்குகின்ற வப்ரோக முதற்றரந்தான்
சுளியான ரத்தவர்னம் ரண்டாம்பட்சம் முயர்ந்த மூன்றாம்தரம்தான் கிருஷ்ணவர்னம்
அள்யாத வப்பிரேக நவநீதம்பண்ணி அப்பனே கிளிபோல கட்டிக்கொண்டு
களியான கொள்ளிலையின் சாறுதன்னால் களியாதே நாள்மூன்று ஓலையாக்கே

விளக்கவுரை :


689. ஆர்க்கவே ஓலையோர் சட்டியிலேவிட்டு அசையாதே கொள்ளிலைசார் தன்னாலே
பார்க்கவே அடுப்பேற்றி கரித்துபின்பு மருவாழைக்கிழங்குச்சார் மூன்றுநாள்தான்
காக்கவே அறுசாமம் ஊறப்போட்டு கலங்காமல் வடிகட்டி எடுத்துக்கொண்டு  
நீக்கவே வானுகையில் அடுப்பிலேற்றி நிதானமதா யெரித்துமெள்ளக் குளிகைவாங்கே

விளக்கவுரை :


690. வாங்கியே பலம்பத்து கல்வத்தில்போட்டு வகையான வெங்காயம் பலம்தான் பத்து
தேங்கியே காரமைந்து கட்டப்புவொன்று சிறப்பான சர்க்கரைதேன் பழமும்போடு
ஓங்கியே ஆகளையின் பாலைவார்த்து உறுதியாம் குடோரியொரு பலமும்போட்டு
நீங்கியே மூன்றுநாள் நெகிழவாட்டி லேசானவடைதட்டி யுலரப்போடே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 681 - 685 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

681. கொள்ளவே பாரவுப்பில் தோய்த்துதோய்த்து குறிப்பாகக் கரிவோட்டில் வாட்டுவாட்டு
மெள்ளவே தணலுக்குளடர்ந்து வாட்டுவெளுப்படங்கி யுப்பதுவும் செம்மையாகும்
தள்ளவே சுண்ணாம்பு முப்புகோரே சமனாகப்பொடுத்துமைபோல் முறியறவே
துள்ளவே ரண்டடையாய்த்தட்டி வைத்துத்துடியாக விசித்தவுப்பை வைத்துவையே

விளக்கவுரை :


682. வைத்து மேலடைமூடி சட்டியில்வைத்து வாகாக நாற்சாமம் தீயைமூட்டி
மொய்து மேல்மூடி யொருசீலைசெய்து முசியாமல் நூறெருபுடத்தேபோடு
தைத்துமே ஆறவிட்டு யெடுத்துப்பாரு தவளம்போல் அப்பளிங்கு நிறமாகிநிற்கும்
நைத்துமே கரிச்சோரில் இந்தவுப்பையிட்டு நலமாக நாள்தோறும் கொண்டிடாயே

விளக்கவுரை :

[ads-post]

683. கொண்டிட்டால் இந்தவுப்பு சட்டையெல்லாம் தள்ளும் கூசாதே வாசியெல்லாம் கெட்டிட்டேறும்
விண்டிட்ட புருவமையத்தமர் திறக்கும் விழியோடே மனங்கலங்க பண்ணிவிக்கும்
தண்டிட்ட அமுரியிலே இறங்காதுப்பு சாதகமாய் பச்சையுப்புத் தின்றாயானால்
மண்டிட்ட சித்தியெல்லாம் பாழாய்ப்போகும் வாய்த்திருந்த கருவெல்லாம் மண்ணாப்போமே

விளக்கவுரை :


684. போமென்ற உப்புக்கு காரமேற்றி பொலிவாகச் சுன்னமென்ற குகையிலூத
ஆமென்ற பூப்போல சுன்னமாகும் அத்திடைக்குச் சாரம்விடச் செயநீராகும்
வேமென்ற சரக்கான வறகத்துநாலும் வெகுளாமல் மணிபோல கண்விட்டாடும்
சாமென்ற சாவுபொய்யாம் வோதையாகும் சகஸ்திறந்தான் மாற்றாகுந்தன்னிற்பாரே

விளக்கவுரை :


685. பாரப்பா உப்புநின்று உருகும்போது பரிவோடு இடைக்கிடையாய் நாகம்போடு
காரப்பா நாகயிடை சூதம்போடு கனமான கெந்தந்தான் ரெட்டிப்போடு
சேரப்பா எடுத்துடனே களங்குமாகும் சேர்ந்தநவலோகத்தில் அன்பதுக்கொன்றீய
ஓமப்பா மாற்றாறி காணுங்காணும் வெகுளாதே பணவிடைதான் தேனிலுண்ணே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 676 - 680 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

676. கேளப்பா அஞ்சுயுகம் நாதாக்களோடே கொடிதாகத்தான் சிறிது வேதாந்தம்பார்த்தார்
கேளப்பா நீலியுண்டு ராமதேவர் விழைந்தேழு லட்சமப்பா யோகம்பார்த்தார்   
நாளப்பா வாமமுனி செரும்படையுண்டு நாலேழுலட்சமப்பா சமாதியுற்றார்
தேனப்பா ஓமமுண்டு ஆனந்தநாதர் செகத்திலுள்ள அதிசயங்கள் பார்த்திட்டாரே

விளக்கவுரை :


677. பார்த்திட்டு விழிகொண்டு கஞ்சமலைசித்தர் பத்துயுகம் ஆரூடச்சமாதியிலேநின்றார்
ஏர்த்திட்ட பொற்றலையார் கொங்கணர்தானப்பா ஏழுயுகம் குளிகைகட்டி வாதம்பார்த்தார்
வார்த்திடவே பதஞ்சலிதான் கரந்தையுண்டு கைகொட்டிச் சிதம்பரத்தில் நடனம்கண்டார்
போர்த்திட்ட கொல்லனுட கோவையுண்டு போகர்முனியென்று சொல்லிப்புலகித்தேனே

விளக்கவுரை :

[ads-post]

678. புளகித்து கோடியுகம் வாதம்பார்த்து போக்கோடே யொவ்வொன்றாய் விரித்துயானும்
இளகித்து ஏழுகாண்டம் இதுவேசொன்னேன் ஏழையுந்தான் எழுநூறாய் நிகண்டாய்க்கோர்த்தேன்
அழகித்துக் கண்டபடி சொன்னமாக்கள் ஆச்சரியம் வெட்டவெளி மறைப்போயில்லை
ஊகித்து உப்பைநன்றாய்க் கட்டியண்ணு ஒருசொல்லும் தப்பாது சித்தியாமே

விளக்கவுரை :


679. சித்தியாம் அன்னத்தில் உப்புகூட்டச் செப்புகிறேன் நாதாக்கள்சொல்லாதெல்லாம்
மத்தியாய்ப் புங்கம்வேர்ப் பாலைவாங்கு பாரையுப்புத் தோய்த்தெடுத்து ரவியிற்போட்டு
முத்தியா ஏழுநாள் ரவியிற்போட்டு முனையான வெடியுப்பு பலந்தானஞ்சு  
வெத்தியாய் சீனமது பலந்தானைந்து வெண்காரம் பலமஞ்சு கல்லுப்பஞ்சே

விளக்கவுரை :


680. அஞ்சோடு காரமஞ்சு பூநீரஞ்சு ஆதியாங்கடநுரையுஞ் சூடனஞ்சு
பிஞ்சோடு சவ்வீரம் பலந்தான்ரண்டு பேயானபுங்கன்வேர் பால்லாட்டி
கஞ்சோடு ஏழுநாள் வார்த்தரைத்து நலமான ரவிதனிலே யுலரப்போட்டு
குஞ்சோடு அண்டநீர் பலந்தானைந்து குழப்பியே பாலாலே வைத்துக்கொள்ளே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 671 - 675 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

671. தள்ளியே மூலிகையைக் கறுப்புபண்ணச் சாதகமாய் அரைமட்டும் குழிதான்வெட்டி
தெள்ளியே சேங்கொட்டை ஒன்றிரண்டாய்வெட்டி சிறப்பாக மிளகுசாம்பல் பரப்பிமேலே
அள்ளியே கரம்பைமண்ணை மேலேபோட்டு அழகாக பாத்திகட்டி நீர்விட்டு
நள்ளியே அழுகவிட்டு மூன்றுதினங்கள் நலமாகக் கொத்தியே ஆறப்போடே

விளக்கவுரை :


672. ஆறவிட்டுப் பதிப்பதற்கு விபரங்கேளு அழகான குமரியொடு ஓமங்கஞ்சா
தேறவிட்டு வல்லாரைக் கரிசாலை சிறப்பான செரும்படையும் நீலிவீழி  
ஏறவிட்டுப் பொற்றலை யினொச்சிநெல்லி இதமான கரந்தையொடு மத்தந்தும்பை
சீறவிட்டுக் கொல்லனி கோவைவாழை சிறப்பாகப் பதித்துவைத்து நீரைவாரே 

விளக்கவுரை :

[ads-post]

673. வார்த்தல்லோ பயிராக்கி தண்ணீர்வார்த்து வாகாகக் காய்ந்தபின்பு விரையைவாங்கிப்
பார்த்தல்லோ முன்போல சேங்கொட்டையிட்டு புகழான மறுபடிதான் விரையைப்போடு
கோர்த்தல்லோ ரண்டிடத்தில் கொட்டையிட்டுச் கொடுஞ்சுருக்காய் மாறியே பயிரைப்போடு
ஏர்த்தல்லோ இப்படிதான் ஆறுதரம்போடு என்மகனே முழுக்கறுப்பாய் மூலிதானே

விளக்கவுரை :


674. தானென்ற மூலிகைதான் மலைகள்தோறும் சாதகமாய் வைத்தாரே ரிஷிகள்சித்தர்
வாவென்ற கறுப்புக்கு பரிட்சைக்கேளு வாகாகக் கொக்கிறகு கொண்டுவந்து
பானென்ற இலைகசக்கி மேலேபூசப் பரிவாகக் காகத்தினிறகோயாகும்
கோனென்ற இலைதின்றால் காயசித்தி கொடுஞ்சுறுக்காய் கொடியவரை இறுத்துந்தானே

விளக்கவுரை :


675. இறுத்தியதோர் குமரியுட கற்பமுண்டு எழுபதுதான் கோடியுகமிருந்தார்பாட்டர்
அருந்தியதோர் ஓமமுண்டு காலாங்கிநாயனறுபதுதான் கோடியுகம் வாதம்பார்த்தார்
வருந்தியதோர் கஞ்சாதான் கோரக்கர்தானும் மனதொன்றிச் சமாதியிலே ஏழுயுகம்நின்றார்
திருந்தியதோர் கரிசாலைக் கற்பமுண்டு சிவயோகிமுனியுடைய திறமைகேளே

விளக்கவுரை :


Powered by Blogger.