போகர் சப்தகாண்டம் 686 - 690 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 686 - 690 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

686. உண்ணவே மண்டலத்தில் வெளியேமீறும் உத்தமனே கால்கள்ரண்டு கற்றூணாகும்
விண்ணவே பச்சைரசமென்றுதின்னு வெகுளாதே பாஷாணமெல்லாம் தின்னு
விண்ணவே உபரசத்தின் சத்தைத்தின்னு கலங்காதே வாசிகொண்டு உள்ளேபூரு
பண்ணவே நடக்கையிலும் இருக்கையிலும் நீரன் பழக்கமுண்டு மூலத்தைப்பாருபாரே

விளக்கவுரை :


687. பார்க்கவே உப்பென்ற களங்கள்தன்னைப் பலபலவாம் லோகத்தில் அன்பதுக்கொன்றீய்ந்து
ஏர்க்கவே இதைவிற்றுச் செலவுசெய்து எளிதாக அன்னவரை தண்ணீர்கொள்ளு
கார்க்கவே யொருசேரைச் சமைத்துவுண்டு கனமான கற்பத்தை வுண்டுதேறு  
தோர்க்கவே வுட்புகுந்து மூலம்பாரு தொடுகுறிபோல் ஆறுதளம் வெளியாய்போமே

விளக்கவுரை :

[ads-post]

688. வெளியான வப்பிரேக சத்துகேளு விளங்குகின்ற வப்ரோக முதற்றரந்தான்
சுளியான ரத்தவர்னம் ரண்டாம்பட்சம் முயர்ந்த மூன்றாம்தரம்தான் கிருஷ்ணவர்னம்
அள்யாத வப்பிரேக நவநீதம்பண்ணி அப்பனே கிளிபோல கட்டிக்கொண்டு
களியான கொள்ளிலையின் சாறுதன்னால் களியாதே நாள்மூன்று ஓலையாக்கே

விளக்கவுரை :


689. ஆர்க்கவே ஓலையோர் சட்டியிலேவிட்டு அசையாதே கொள்ளிலைசார் தன்னாலே
பார்க்கவே அடுப்பேற்றி கரித்துபின்பு மருவாழைக்கிழங்குச்சார் மூன்றுநாள்தான்
காக்கவே அறுசாமம் ஊறப்போட்டு கலங்காமல் வடிகட்டி எடுத்துக்கொண்டு  
நீக்கவே வானுகையில் அடுப்பிலேற்றி நிதானமதா யெரித்துமெள்ளக் குளிகைவாங்கே

விளக்கவுரை :


690. வாங்கியே பலம்பத்து கல்வத்தில்போட்டு வகையான வெங்காயம் பலம்தான் பத்து
தேங்கியே காரமைந்து கட்டப்புவொன்று சிறப்பான சர்க்கரைதேன் பழமும்போடு
ஓங்கியே ஆகளையின் பாலைவார்த்து உறுதியாம் குடோரியொரு பலமும்போட்டு
நீங்கியே மூன்றுநாள் நெகிழவாட்டி லேசானவடைதட்டி யுலரப்போடே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar