691. உலர்ந்தபின்பு வங்கமென்ற தாதொத்தாலூனு உத்தமனே சரவுலையில் வைத்துவூது
அலர்ந்தபின்பு அப்பிரேகம்
சத்தாய்வீழும் ஆராய்ந்து சத்தெல்லாம் பொருக்கிக்கொண்டு
கலர்ந்தபின்பு காடெடுத்துக்
கல்வத்தாட்டி கலங்காதே முன்போலே மருந்தரைத்துக்கூட்டி
நலர்ந்தபின்பு வில்லைதட்டிச்
சரவுலையிலூது நலமாக அப்பிரேகம் சத்துமாமே
விளக்கவுரை :
692. ஆமப்பா காடெடுத்து
மூன்மருந்துகூட்டி அரைத்துநன்றாய் வில்லைதட்டி ஐந்துதரமூது
ஓமப்பா சத்தெல்லாம்
ஒன்றாய்ச்சேர்த்து உத்தமனே வெண்காரம் சரியாய்க்கூட்டித்
தாமப்பா குகையிலிட்டு
உருக்கிநன்றாய் சாய்க்கவே நல்லெண்ணெய் தேங்காய்ப்பாலும்
காமப்பா இலுப்பைப்பூ
நெய்யுந்தேனும் கலந்தொன்றாய் மத்தித்து சாய்த்திடாயே
விளக்கவுரை :
[ads-post]
693. சாய்த்திடவே மூன்றுதரம்
கன்மிசங்கள்போகும் தங்கமது ரண்டுக்கு அப்பிரேகம்காணும்
மாய்த்திடவே ரண்டுமொன்றாய்
உருக்கிக்கொண்டு பரிவாக மெழுகுகட்டி கிண்ணிதாரு
மாய்ந்திடவே சீலையது
திறமையாச்செய்து வானுகைமேல்வைத்து அதற்குசூதம்பாரு
சாய்த்திடவே
கருமத்தஞ்சாருவிட்டு கிண்ணிக்கிதமாக வைத்திடவே வெண்ணெயாவே
விளக்கவுரை :
694. வெண்ணெயெல்லா வழித்துமொரு
மொத்தையாக்கி மேலானகுளிந்ததண்ணீரில்போட்டு
திண்ணெய்தாய் உருகியது
கல்லுப்போலாம் சேர்ந்தெடுத்து ஆரையிலைகவசங்கட்டி
தண்ணெயா யவிர்ப்புடமாய்ப்
பத்துபோட்டு தயங்காதே மத்தங்காய்க் குள்ளேவைத்துப்போடு
விண்ணெயாய்
விராலியிலைக்குள்ளேபோடு விதமான விராலியிலைக்குள்ளேபோடே
விளக்கவுரை :
695. போட்டெடுத்துச் சூடனுட
தீயில்வாட்டிப் புகழாக கரண்டியிலெண்ணெய்குத்தியுருக்கி
ஆட்டெடுத்து வொன்றுக்கு
நாலுதங்கம் அழகாகச் சூதத்தில் பாதிநாகம்
நீட்டெடுத்து
உருக்கியொன்றாய் மணியாய்வாங்கி நேர்ப்பாகக் கல்வத்தில்பொடித்துநன்றாய்
தொட்டெடுத்து சத்தித்த
கெந்திதானும் துரிசாக சூதயிடை கெந்திகூட்டே
விளக்கவுரை :