696. கூட்டியெல்லாம் பொற்றலையின்
சாற்றாலாட்டி குறிப்பாகப் பொடிபண்ணி குப்பரக்கேற்றி
ஆட்டியே வாலுகையின்
மேலேவைத்து மறுசாமமானபின்பு கடுந்தீப்போடு
நீட்டியே பனிரண்டு சாமமானால்
நிலைத்துநிற்கும் மாதளம்பூ நிறத்தைப்போல
வாட்டியே நவலோகம்
நூற்றுக்கொன்றீய மாற்றெண்ண பனிரண்டாம் பணவிடைதானுண்ணே
விளக்கவுரை :
697. உண்ணவே மண்டலந்தான்
அந்திசந்தி உத்தமனே யுகாந்தவரை இறுத்துந்தேகம்
தண்ணவே இருட்டரையில்
இருந்தாயானால் சந்திரனோ சூரியனோ யென்பார்பாரு
கண்ணவே மேனியது
கஸ்தூரிவீசும் கமலம்போல் கால்கைரண்டு மிருதுவாகும்
எண்ணவே கற்பமெல்லாம்
படிப்படியாய்யேறு இருந்துபார் சமாதிக்குள் கற்பமொன்றே
விளக்கவுரை :
[ads-post]
698. ஒன்றான கெந்தகந்தான்
பலமோபத்து உத்தமனே சுத்திபண்ணி அயச்சட்டியிட்டு
கன்றான குமரிச்சோர்
கீழ்மேலுமிட்டு கலறவே கொதிப்பாக நாலுசாமம்
பன்றான பழச்சாறு
சுருக்குப்போடு பருவமாய்ப் புங்கம்பால் நாலுசாமம்
கன்றான நிழலுலர்த்திக் கல்வத்திட்டுக்
கடுகவே பொடிபண்ணி மாந்துளிரின்சாறே
விளக்கவுரை :
699. சாறதினால் எண்சாமமட்டு ஆட்டு தயங்குமணித்தக்காளிச் சாற்றாலாட்டு
யேறதினால் மந்தாரைப்
வெள்ளைப்பூவைப் பிசைந்தரைச்சாற்றினால் எண்சாமமாட்டு
வாறதினால் புளிப்பான
மாதளையின் பழந்தான் வகையான சாறதினால் எண்சாமமாட்டு
தேறதினால் தாமரைப்பூச்
சாற்றாலாட்டி சிறப்பாகக் காந்தமைந்து பலந்தான்போடே
விளக்கவுரை :
700. போடவே வெண்காரம்
பலந்தானைந்து புகழான குடோரியொரு பலமும்போடு
நீடவே குன்றிமணிக்
கட்டுவுப்பு நிலைக்கவொரு பலம்போட்டு ஆகலையின்பாலால்
வாடவே எண்சாமமாட்டிப்பின்பு
வகையாகவில்லைதட்டி யுலரப்போட்டு
நாடவே நல்லெண்ணெய்
பலந்தானொன்று நயமான அயச்சட்டிக்குள்ளேவாரே
விளக்கவுரை :