701. வார்த்துமே அடுப்பேற்றி
வில்லைதட்டி வாகான கமலம்போல் எரிநேர்ப்பாக
ஏர்த்துப்பொறுத்த
பதந்தன்னில்வாங்கு யிருபுவிமுந்துருத்தியிட்டுச் சரவுலையிலூது
பேர்த்துமே மணிமணியாய்ச்
சத்துவிழும் பேராகக் கட்டையெல்லாம் சோதித்துவாங்கி
கார்த்துமே முன்போலக்
காரங்கூட்டி கலங்காதே ஐந்துதரம் ஊதிடாயே
விளக்கவுரை :
702. ஊதியே சத்தெல்லாம்
ஒன்றாய்ச்சேர்த்து உத்தமனே வெண்காரம்கூடக்கூட்டி
காதியே ஐங்குதுகையிலிட்டுருக
ஆட்டிக்கனமான அப்பிரேகம் சாய்த்தாப்போல
சாதியே சாய்க்காக்கால
வருணன்போலத் தயங்காதே சத்தாகும் கெந்திசந்து
வாதியே இதைக்காணப் போறார்
மாண்பர் மாசற்றநாதாக்கள் ஆடும்ஆட்டே
விளக்கவுரை :
[ads-post]
703. ஆட்டான கெந்தகத்தின்
சத்துவேகம் ஆரறிவார் சிவயோகி அல்லார்காணார்
நீட்டான அம்பலத்தில்
சோழன்றாலும் நிலைத்த நடராசரைத்தான் வார்க்கச்சொன்னார்
பூட்டான சிற்பர்கள்தான்
கருக்கட்டி வார்த்தார்பின்பு போகவுமே சிற்பரேங்கி
கூட்டான மனதுநொந்து
திகைக்கும்போது கொடுமூலநாயனங்கே வந்திட்டாரே
விளக்கவுரை :
704. வந்திட்டு சிற்பரைதான்
வரவழைத்து மனக்குறைதான் என்ன சொல்லு மைந்தாவென்ன
மெந்திட்டு விக்ரகம்
வார்க்கவார்க்க வின்னமாய்ப் போடுதென கெய்வோமென்ன
கெந்திட்ட மனதுகண்டு
திருமூலர்தாமும் நொடிக்குள்ளே வார்த்திடுநீ என்றுசொல்லிக்
கந்திட்டுக் காசெடைதான்
செம்பையீந்தார் கடுகவே சிற்பருந்தான் வார்த்திட்டாரே
விளக்கவுரை :
705. வார்த்திடவே தங்கமெல்லாம்
செம்பாய்ப்போச்சு மனம்புண்ணாய் நிற்குறப்போ சோழன்வந்தார்
ஏத்திடவே விக்கிரகம்
வார்ப்பித்தாயோ எடுத்துவா என்றிடவே கொண்டுமுன்வைத்தார்
பார்த்திடவே தங்கமெல்லாம்
எடுத்துக்கொண்டு பரிவாகச் செம்பாலே வார்த்தாயென்று
வேர்த்திடவே ஆக்கினைதான்
பண்ணச்சொன்னார் வடுபட்டார் சோழன்முன்னே நாயன்தாமே
விளக்கவுரை :