போகர் சப்தகாண்டம் 706 - 710 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 706 - 710 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

706. ஆமப்பா சிற்பரைதான் சொல்லவேண்டாம் அதிகமாய்ப் பொன்னுனக்குத் தாரோமென்று
வேமப்பா வெள்ளியைத்தான் உருகச்சொல்லி விரைந்த மூவாயிரத்திற் காசெடைதான் போட்டார்
தாமப்பா மாற்றதுவும் இருபாதாச்சு சாதகமாய் குளிகையிட்டு மறைந்திட்டாரே
சேமப்பா தவசியெங்கே என்றுகேட்கத் தேடியெங்கும் பார்த்திட்டுத் திகைத்திட்டாரே

விளக்கவுரை :


707. திகைத்திட்டு வந்துசொன்னார் சோழன்முன்னே சிவசிவாவென்றுசொல்லி வாயைப்பொத்தி
நகைத்திட்டு சிற்பருக்கு வெகுமானஞ்செய்து நாதாக்கள்மகிமைசொல்ல எவரால்கூடும்
மிகைத்திட்டு விடுதிக்குப் போனார்சோழன் வேண்டியாதோர் கெந்தகத்தின் சத்துவேகம்
பகைத்திட்டு சித்தரூபங்களுக்கும் சொன்னேன் பாரிதுக்குள் செந்தூரஞ்செய்யக்கேளே

விளக்கவுரை :

[ads-post]

708. கேளப்பா கட்டியதோர் சூதமொன்று கொடியாக உருகையிலே சத்துவொன்று
நீளப்பா தங்கமொன்று நாகமொன்று நேராகவுருக்கி ஒருமணியாய்வாங்கி
வேனப்பா கல்வத்தில் பொடியாய்ப்பண்ணி விளங்கிநின்ற தாளகமும் சிலையுமொன்று போட்டு
நாளப்பா பொற்றலையின் சாற்றாலாட்டி நலமாகத் தெல்லுப்பொல் வில்லைபண்ணே

விளக்கவுரை :


709. பண்ணியதோர் வில்லைதன்னை அகலிலிட்டு பாய்ச்சியே மூடியொருசீலைசெய்து
கண்ணியே பத்தெருவிற்புடத்தைப்போடு கண்கொள்ளா வருணன்போல் செந்தூரமாகும்
கண்ணியே செந்தூரம் ஆயிரத்துக்கொன்று நாட்டிடவே பதினாறு மாற்றுமாகும்
புண்ணியமே செய்தவர்க்கு செந்தூரமாகும் பொல்லாத துரோகிக்கு எய்தவாறே

விளக்கவுரை :


710. வாறுகேள் செந்தூரங் குன்றியுண்ணு மண்டல்ந்தான் அந்திசந்தி மறவாமல்நீயும்
தேறுகே தேகமது செப்புத்தூணாம் சிதறடித்தால் மலைகளெல்லாம் தவிடுபொடியாகும்
சாறுகேள் கத்தியிலே வீசினாக்கால் கனீரென்று வெங்கலத்தின் ஓசையாகும்
நாறுகேள் நரமெல்லாம் சிவந்து காணும் நாதாக்கள் சித்தியெல்லாம் இதற்குள்ளாச்சே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar