711. ஆச்சப்பா மயூரத்தின்
செம்பெடுக்க அறைகிறேன் நானறிந்தமட்டுந்தானும்
வாச்சப்பா மயிலிறகு
கொண்டுவந்து வளமாக திரிதிரித்து நல்லெண்ணெய்தோய்த்து
நீச்சப்பா கட்டெடுத்து
கரியாய்ப்பண்ணி நிலைக்கவொரு சேருமட்டும் நிறுத்துகொண்டு
தேச்சப்பா
கல்வத்திலிதனைப்போட்டுத் தூரியாகக் காரமொரு பலந்தானஞ்சே
விளக்கவுரை :
712. அஞ்சான வெண்காரம்
பலந்தானஞ்சு ஆதியாங்குடோரியொரு பலமுங்கொண்டு
நஞ்சான வீரமொரு பலமும்மூன்று
நாயகமாம் கல்லுப்புப் பலமுமொன்று
பிஞ்சான குன்றிமணி
யெள்ளுமொச்சை பேசாதே யொவ்வொன்று பலமும்போட்டு
கஞ்சான வாதளையின்
பாலைவார்த்து கடுகியே திரைமூன்றுநாள் வில்லைகட்டே
விளக்கவுரை :
[ads-post]
713. கட்டியே வில்லைதன்னை
நாளத்தூதிக் கட்டோடே மணிமணியாய் ரவிதனினிற்கும்
ஒட்டியேதே செம்பெல்லா
மெடுத்துக்கொண்டு ஓகோகோ காடெல்லா முன்போலூது
தெட்டியதோரைந்துதரம்
மருந்திட்டு தெல்லிப்போல் வில்லைதட்டி வூதுவூது
யெட்டியதோர் செம்பெல்லாம்
காரமிட்டு பாட்டியே காரமுன்போல் சாய்த்திடாயே
விளக்கவுரை :
714. சாய்த்திடவே செம்பாலே
சூதங்கட்டும் சமுசயங்களெண்ணாதே பாஷாணஞ்சாகும்
மாய்த்திட்ட அரவமது
தீண்டாதையா மகத்தான விஷங்களொன்றுங் கிட்டாதப்பா
பாய்த்திட்ட செம்போடே
தங்கஞ்சேர்த்து பாங்கான கைவளைகள் பண்ணுபண்ணு
காய்திட்ட குண்டலங்கள்
விக்கிரகம்பண்ணு காட்டினுள்ளே சித்தரெல்லாம் தரிப்பார்பாரே
விளக்கவுரை :
715. பாரப்பா மயூரத்தின்
செம்புஒன்று பாங்கான தங்கமொன்று நாகமொன்று
சேரப்பா
மூன்றுமொன்றாயுருக்கிக்கொண்டு செயலான சூதத்தைபொங்கக்கூட்டி
காரப்பா கல்வத்தில்
பொடியாய்ப்பண்ணி கசடற்ற கந்தகத்தைப் பாதிகூட்டு
வாரப்பா செருப்படையின்
சாற்றாலாட்டி வளமாக கல்லுபோல் வில்லைதட்டே
விளக்கவுரை :