போகர் சப்தகாண்டம் 826 - 830 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

826. சுருக்கிடுவ தெதிலென்றால் லிங்கம்வெள்ளை துடியான மாகல்தேவிசீலையும்வீரம்
முருக்கிட்ட கெவுரியொடு கெந்திசூதம் முனையான நாகமொடு காரீயம்வங்கம்
நருக்கிட்ட துரிசியொடு செம்புகாரம் நலமான சிங்கியொடு மெழுகுமாகும்
சுருக்கிடுவ தொவ்வொன்றில் வேதைகோடி கரையில்லை கணக்கில்லை கலந்துபாரே

விளக்கவுரை :


827. பாரப்பா சதமுகமாங் குருவிநாட்டு பண்பேதிசெண்பேதி பென்சத்தபேதி
தாரப்பா தூமமொடு சந்தானபேதி தயங்காத பரிசமொடு லேபனபேதி
சேரப்பா தீபமொடு எட்டுமாகும் சித்தருட நூல்களிலேயில்லையில்லை
பாரப்பா யிதன்பெருமை அறியப்போறார் அரனறிவார் யாத்தாளறிந்தவாறே

விளக்கவுரை :

[ads-post]

828. வாறானநீறு பதக்குவாரி மாட்டிதற்குள் எட்டிலொன்று கல்லுச்சுன்னம்
பேறான கழுதைமூத்திரத்தில் பிசைந்துநன்றாய் கலக்கிவைத்து மூன்றுநாள்தான்
தாறானநாள்தெளிவைவாங்கி தயங்காத கல்லுப்புச்சூடன்ரண்டு
காறானவகைக்குரண்டு பலமேதூக்கி அப்பனே பொடிபண்ணி தெளிவில்போடே

விளக்கவுரை :


829. போட்டுமே யடுப்பேற்றி யெரித்து உப்பாய் புகழான பதத்தெடுத்து கல்வத்திட்டு
மீட்டுமே மூன்றுநாளரைத்தபின்பு மெழுகாகும்பதத்தெடுத்து வில்லைதட்டி
தீட்டுமே மூன்றுதரம் வில்லைதட்டி நிட்சயமாய்ச் சீனமொடு கல்லுப்போடு
தீட்டுமே ரவிதனிலே காயப்போடு செம்பில்வைத்து சீலைசெய்து புடத்தைப்போடே

விளக்கவுரை :


830. புடம்போட்டு ஐந்தெருவில் ஆறவிட்டுவாங்கி பேரானமுன்போலரைத்துக்கட்டி 
கடம்போட்டு மூன்றுதரம் போட்டுத்தீரு கசகாமல் வழலையென்ற குருதானைந்து
திடம்போடு செம்புக்குள் கொடுத்துக்கொண்டு திறமான நாயுருவி சுட்டசாம்பல் புடம்போடு
பதக்கெடுத்து யானைநீர்விட்டு அதட்டிநன்றாய் கலக்கிவைத்துத் தெளிவாவாங்கே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 821 - 825 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

821. உண்டிட்ட மணிதனுக்கு நாலுக்கொன்று உத்தமனே தங்கமிட்டு நாகமிட்டு
மண்டிட்ட காரமிட்டு உருக்கிக்கொண்டு பாய்ச்சிதற்குச் சரியாக கெந்திகூட்டி
கண்டிட்ட கல்வத்திற் பொடித்துக்கொண்டு கலங்காதே குலாமல்லிச்சாற்றாலாட்டி
மண்டிட்ட மூன்றுநாள் அரைத்துப்பின்பு மயங்காதே காசிபென்ற மேருக்கேற்றே

விளக்கவுரை :


822. ஏற்றியல்லோ முத்தீயும் மூன்றுநாள்தான் இதமாக ஆறவிட்டு எடுத்துப்பாரு
போற்றியல்லோ வருணனைப்போல் சிவந்துநிற்கும் பொலிவாகப் பணவிடைதான் தேனிலுண்ணு
சாற்றியல்லோ மண்டலந்தான் தப்பாதுண்ணு சட்டைகக்கி சந்திரர்போல்முகமுமாகும்
வாற்றியல்லோ கெவுனவழி சுறுக்குமெத்த ஆச்சரியம் சிங்கியென்ற தயிலந்தானே

விளக்கவுரை :

[ads-post]

துவாதசத்தின்தயிலம்

823. தானென்ற துவாதசத்தின் தயிலஞ்சொல்வேன் சாதகமாய்ச் சேக்கொட்டைநீர் வெட்டிமுந்து
தேனென்ற குருக்கத்தி வாலுமுலைவித்து சிறப்பான குமட்டிவித்தினொடு
வேனென்ற வாலுமுலையரிசியொடு விரும்பியே சமனிடையாய்த் தூக்கிக்கொண்டு
பானென்ற பெருங்காட்டாமணக்குவித்து பாகரிய குன்றிமணி யழுஞ்சில்வித்தே

விளக்கவுரை :


824. வித்தோடு பிராயமணி பனிரண்டுகேளு விளங்கியதோர் படியொன்று அளந்துபோட்டு
புத்தோடு செங்கனார் கிழங்குசாற்றில் பொலிவாகவூறவைத்து மூன்றுநாள்தான்
மத்தோடு கல்வத்திலரைத்துமைபோல பகாரியகந்தகமுந்தாளகமுஞ்சிலையும்
கொத்தோடு கைவீரங்கெவுரிவெள்ளை கொடியதொரு பூநீறுஞ்சவட்டு உப்பே

விளக்கவுரை :


825. உப்பான கல்லுப்பு வெடியுப்புச்சீனம் உத்தமனே துரிசியொடு சூடனிந்து   
விப்பான முன்மருந்தோ டொக்கப்போட்டு விரவியரையெட்டுநாள் கிழங்குசாற்றில்
அப்பாநீதெல்லுபோல் வில்லைபண்ணி பாத்தியாம் பூப்புடத்தில் தயிலம்வாங்கி
செப்பான தீயிட்டு துரிசுநீரிட்டு சீரானசரக்குதனில் சருக்குபோடே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 816 - 820 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

816. போட்டெல்லாங்கெருடனுடகிழங்குசாற்றில் புகழாகவூறவைத்து மூன்றுநாள்காண்
நூட்டிதெல்லாம் கல்வத்திலிட்டுயாட்டி அதிற்போடு மருந்தினைத்தான் அறையக்கேளு
நீட்டிதெல்லாம் அரிதாரஞ்சிலையுங்கெந்தி நேரானவெடியுப்பு சீனஞ்சூடன்
பூட்டிதெல்லாம் சாம்பிரானிச் சாரம்வீரம் புகழ்ந்த கருங்குங்கிலியப்பூநீர்தானே

விளக்கவுரை :


817. தானென்ற துரிசியொடு அன்னபேதி சாதகமாய் வகைக்குரண்டு பலந்தான்போடு
கானென்ற முன்மருந்தோடொக்கப்போட்டு கலந்தரைப்பாய் கெருடனுடகிழங்குசாற்றில்
தேனென்ற எட்டுநாள் மெழுகுபோலாட்டி தெல்லுபோல் வில்லைபண்ணியுலரப்போடு
பானென்ற பூப்புடத்தில் தயிலம்வாங்கி பாச்சியெல்லாம் பரணிதனில் வைத்திடாயே

விளக்கவுரை :

[ads-post]

818. அடைத்திட்ட தயிலத்தில் துரிசிவெள்ளை அப்பனேபலமொன்றுநிறத்திக்கொண்டு
கிடைத்திட்ட தயிலத்தில் மத்தித்தப்பா கெடியான லிங்கத்திற்சுருக்குபோட்டு
மடைத்திட்ட லிங்கமது மெழுகுமாகும் பாங்கான நவலோகம் வேதையாகும்
முடைத்திட்ட மெழுகாகும் பரிசினத்தில் மூதண்டவேதையுமாங்கண்டுபாரே

விளக்கவுரை :


சூதக்கட்டு

819. பாரென்ற சூதமொரு பலந்தானெட்டு பாய்ச்சியல்லோ கல்வத்திலிட்டுநீயும்
வாவென்ற தயிலமது ஏருதுளிதான்குத்தி அரைத்திடவே வெண்ணெயைப்போலாகும்பாரு
காரென்ற கிளிக்கட்டிச் சூடன்தீயில் கலங்காதே இருநாழிகாட்டிபின்பு
சீரென்ற கரண்டியிலே எண்ணெய்குத்தி திறமாகவுருக்கிடவே மணியுமாமே

விளக்கவுரை :


820. ஆமிந்த மணிதனக்கு சாரணையைச்செய்ய அண்டரண்ட பதமளவும் போகலாகும்
போமிந்த மணிதனையே வாயில்வைத்துப் புகழான உமிநீரை உள்ளேகொள்ள
சாமிந்த சடந்தானும் சட்டைகக்கி சந்திரர்கள் சூரியர்கள்போலாந்தேகம்
தாமிந்தபடியண்டாம் பாட்டருண்டார் நாதாக்களிப்படியே உண்டிட்டாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 811 - 815 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

811. பிரம்பான பூநீறுபலந்தானூறு புளிப்பான காடியொடு எலுமிச்சம்பழசாறு கூட்டி   
திறமான தெளிவிருந்து உப்பாய்க்காய்ச்சி சேர்ந்துநின்ற உப்பதனை முன்போல்கரைத்து
அரப்பான ஒருநிரைக்கு நாலுநிரைதண்ணீர் அரட்டையாய்விடுகாதே ஐந்துதரங்காச்சி
உரப்பான உப்பெடுத்து ரவியில்வைத்து உத்தமனே கல்லுப்பு பலந்தானூறே

விளக்கவுரை :


812. நூறோடு பழச்சாறு புளித்தக்காடி நகர்ந்துநின்ற நாநூறு பலந்தான்வார்த்து
காறோடு கொதிக்கவைத்துக் காய்ந்தபின்பு கலங்காமல் வடிகட்டியுப்பாய்க்காச்சு
வீறோடு ஐந்துதரங்காச்சிகாச்சி விளங்கியதோர் ரவியிலிட்டு உப்புபலம் பத்துநிறுத்து
நாறோடு காச்சிதோர் வெடியுப்புப்பார்த்து தாழ்ச்சியில்லா பூநீறு உப்புபத்தே

விளக்கவுரை :

[ads-post]

813. உப்போடு வெள்ளையென்ற பாஷாணம்பத்து உயர்ந்துநின்ற சூதமது பலந்தான்பத்து
அப்போடு கெந்தமது பலமும்பப்து ஆதியென்ற துரிசியது பலமும்பத்து
வைப்போடு தாளகமும் பலமுமைந்து மாசற்ற தாளகமுஞ்சிலையதுவுஞ்சியதுவுமூணே

விளக்கவுரை :


814. மூணோடு இதுவெல்லாம் கல்வத்திட்டு முப்புறத்தையெரித்த குப்பைமேனிசாறு
பூணோடு ஏழுநாளரைத்துமைபோல் பொடியாக்கி காசிபென்ற மேருக்கேற்றி
வாணோடு வானுகையில் மேலேவைத்து மறவாதே தீமூட்டிகமலம்போல
நுணோடு பனிரண்டு சாமமானால் துடியான வைனமென்ற பாஷாணமாச்சே

விளக்கவுரை :


815. ஆச்சென்ற கொடுஞ்சிங்கித்தயிலம்சொல்வேன் ஆதளையும் வாலுமுலை புரசுருட்டி
நீச்சென்ற கஞ்சாவூமத்தையுங்கு நெடுதான குருக்கத்தி அழிஞ்சில்புன்னை
வாச்சென்ற தாளையொடு வானம்வேம்பு வகையான நீர்வெட்டி சமூதைமுன்னி
காச்சென்ற பல்லைந்தும் விரையைவாங்கி கணக்காக படியொன்று அளந்துபோடே

விளக்கவுரை :


Powered by Blogger.