821. உண்டிட்ட மணிதனுக்கு
நாலுக்கொன்று உத்தமனே தங்கமிட்டு நாகமிட்டு
மண்டிட்ட காரமிட்டு
உருக்கிக்கொண்டு பாய்ச்சிதற்குச் சரியாக கெந்திகூட்டி
கண்டிட்ட கல்வத்திற்
பொடித்துக்கொண்டு கலங்காதே குலாமல்லிச்சாற்றாலாட்டி
மண்டிட்ட மூன்றுநாள்
அரைத்துப்பின்பு மயங்காதே காசிபென்ற மேருக்கேற்றே
விளக்கவுரை :
822. ஏற்றியல்லோ முத்தீயும் மூன்றுநாள்தான்
இதமாக ஆறவிட்டு எடுத்துப்பாரு
போற்றியல்லோ வருணனைப்போல்
சிவந்துநிற்கும் பொலிவாகப் பணவிடைதான் தேனிலுண்ணு
சாற்றியல்லோ மண்டலந்தான்
தப்பாதுண்ணு சட்டைகக்கி சந்திரர்போல்முகமுமாகும்
வாற்றியல்லோ கெவுனவழி
சுறுக்குமெத்த ஆச்சரியம் சிங்கியென்ற தயிலந்தானே
விளக்கவுரை :
[ads-post]
துவாதசத்தின்தயிலம்
823. தானென்ற துவாதசத்தின்
தயிலஞ்சொல்வேன் சாதகமாய்ச் சேக்கொட்டைநீர் வெட்டிமுந்து
தேனென்ற குருக்கத்தி
வாலுமுலைவித்து சிறப்பான குமட்டிவித்தினொடு
வேனென்ற வாலுமுலையரிசியொடு
விரும்பியே சமனிடையாய்த் தூக்கிக்கொண்டு
பானென்ற
பெருங்காட்டாமணக்குவித்து பாகரிய குன்றிமணி யழுஞ்சில்வித்தே
விளக்கவுரை :
824. வித்தோடு பிராயமணி
பனிரண்டுகேளு விளங்கியதோர் படியொன்று அளந்துபோட்டு
புத்தோடு செங்கனார்
கிழங்குசாற்றில் பொலிவாகவூறவைத்து மூன்றுநாள்தான்
மத்தோடு
கல்வத்திலரைத்துமைபோல பகாரியகந்தகமுந்தாளகமுஞ்சிலையும்
கொத்தோடு
கைவீரங்கெவுரிவெள்ளை கொடியதொரு பூநீறுஞ்சவட்டு உப்பே
விளக்கவுரை :
825. உப்பான கல்லுப்பு வெடியுப்புச்சீனம் உத்தமனே துரிசியொடு சூடனிந்து
விப்பான முன்மருந்தோ
டொக்கப்போட்டு விரவியரையெட்டுநாள் கிழங்குசாற்றில்
அப்பாநீதெல்லுபோல்
வில்லைபண்ணி பாத்தியாம் பூப்புடத்தில் தயிலம்வாங்கி
செப்பான தீயிட்டு
துரிசுநீரிட்டு சீரானசரக்குதனில் சருக்குபோடே
விளக்கவுரை :