811. பிரம்பான பூநீறுபலந்தானூறு
புளிப்பான காடியொடு எலுமிச்சம்பழசாறு கூட்டி
திறமான தெளிவிருந்து
உப்பாய்க்காய்ச்சி சேர்ந்துநின்ற உப்பதனை முன்போல்கரைத்து
அரப்பான ஒருநிரைக்கு
நாலுநிரைதண்ணீர் அரட்டையாய்விடுகாதே ஐந்துதரங்காச்சி
உரப்பான உப்பெடுத்து
ரவியில்வைத்து உத்தமனே கல்லுப்பு பலந்தானூறே
விளக்கவுரை :
812. நூறோடு பழச்சாறு புளித்தக்காடி
நகர்ந்துநின்ற நாநூறு பலந்தான்வார்த்து
காறோடு கொதிக்கவைத்துக்
காய்ந்தபின்பு கலங்காமல் வடிகட்டியுப்பாய்க்காச்சு
வீறோடு
ஐந்துதரங்காச்சிகாச்சி விளங்கியதோர் ரவியிலிட்டு உப்புபலம் பத்துநிறுத்து
நாறோடு காச்சிதோர்
வெடியுப்புப்பார்த்து தாழ்ச்சியில்லா பூநீறு உப்புபத்தே
விளக்கவுரை :
[ads-post]
813. உப்போடு வெள்ளையென்ற
பாஷாணம்பத்து உயர்ந்துநின்ற சூதமது பலந்தான்பத்து
அப்போடு கெந்தமது
பலமும்பப்து ஆதியென்ற துரிசியது பலமும்பத்து
வைப்போடு தாளகமும்
பலமுமைந்து மாசற்ற தாளகமுஞ்சிலையதுவுஞ்சியதுவுமூணே
விளக்கவுரை :
814. மூணோடு இதுவெல்லாம்
கல்வத்திட்டு முப்புறத்தையெரித்த குப்பைமேனிசாறு
பூணோடு ஏழுநாளரைத்துமைபோல்
பொடியாக்கி காசிபென்ற மேருக்கேற்றி
வாணோடு வானுகையில்
மேலேவைத்து மறவாதே தீமூட்டிகமலம்போல
நுணோடு பனிரண்டு சாமமானால்
துடியான வைனமென்ற பாஷாணமாச்சே
விளக்கவுரை :
815. ஆச்சென்ற
கொடுஞ்சிங்கித்தயிலம்சொல்வேன் ஆதளையும் வாலுமுலை புரசுருட்டி
நீச்சென்ற
கஞ்சாவூமத்தையுங்கு நெடுதான குருக்கத்தி அழிஞ்சில்புன்னை
வாச்சென்ற தாளையொடு
வானம்வேம்பு வகையான நீர்வெட்டி சமூதைமுன்னி
காச்சென்ற பல்லைந்தும்
விரையைவாங்கி கணக்காக படியொன்று அளந்துபோடே
விளக்கவுரை :