போகர் சப்தகாண்டம் 806 - 810 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 806 - 810 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

806. ஆறவிட்டு உடைத்துப்பார் கட்டியாகுமப்பனே குங்குமத்தின் நிறமதாகும்
நீறவிட்ட சரக்குக்காலனாகும் நெடுங்காலமிருக்கவென்றால் வீசமிதையுண்ணு
தேறவிட்டு மண்டலத்திற் சட்டைகக்கும் சித்தர்கள் தானுண்டல்லோ காயசித்தியானார்
மீறவிட்டு மெழுகைபண்ணிக்கொண்டு விரவிதோர் சூதத்தில் போட்டுப்போடே

விளக்கவுரை :


807. போடவே ஆணையைப்போல் வீறிட்டுச்சாகும் போக்கோடே தங்கமிட்டு காகமிட்டு
ஆடவே கெந்தியிட்டு செந்தூரித்து ஆயிரத்துக்கொன்றிடவே னம்மைந்தாகும்
வாடவே மயங்காமல் சரக்குவைப்பு ஒவ்வொன்றாய் பார்த்துத்தேறு
தேடவே காயத்தை சுத்திபண்ணு ஜெகச்சாலத்துன்மார்க்கச் சட்டைபோக்கே

விளக்கவுரை :

[ads-post]
வைணபாஷாணம்

808. போக்கான வைணமென்ற பாஷாணத்தை பொல்லாதவாதிக்குக் காட்டவேண்டாம்
தேக்கான கெதினாலென்றுகேட்கில் ஜெகச்சாலமயக்கத்தில் சிக்கிக்கொண்டு
சோக்கான பெண்ணாசைதனிலுழன்று நோயெத்திக்குடிகெடுத்தால் நுணக்கமாகி
தாக்கான லோகத்தோர் குடிகெடுத்து சங்கியாதேயிருப்பான் சண்டிதானே

விளக்கவுரை :


809. தானென்ற மனதையுற்றுப் பார்த்தானால் சண்டான கோபத்தைநிறுத்தமாட்டார்
ஊனென்ற சுகத்தையல்லோ இச்சித்துக்கொண்டு ஊற்றகின்ற சயயோகத்தாலேகெட்டு
வானென்ற பொருள் தேடமாட்டார் மாண்பர்மகத்தான அறுதலத்தின் தரிசனையைப்பாரார்
மானென்ற ஞானவெள்ளமுண்டுகொண்டு பதறாமலிருக்கனிபார் மூடர்தாமே

விளக்கவுரை :


810. னென்ற வெடியுப்பு பலந்தானூறு சாதகமாய்ப் பாண்டத்திற்போட்டுப்பின்பு
கானென்ற காடியொடு எலுமிச்சை பழத்தால்கலந்துகொண்டு சமனாக நாலு
பானென்ற சாறுவிட்டு கரையக்காய்ச்சி பக்குவமாய் வடிகட்டி பதத்தில்காய்ச்சி
வானென்ற ஐந்துதரம் காச்சிக்கொண்டு மார்க்கமாய் ரவியுலர்த்தி பரம்பாய்வையே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar