போகர் சப்தகாண்டம் 806 - 810 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

806. ஆறவிட்டு உடைத்துப்பார் கட்டியாகுமப்பனே குங்குமத்தின் நிறமதாகும்
நீறவிட்ட சரக்குக்காலனாகும் நெடுங்காலமிருக்கவென்றால் வீசமிதையுண்ணு
தேறவிட்டு மண்டலத்திற் சட்டைகக்கும் சித்தர்கள் தானுண்டல்லோ காயசித்தியானார்
மீறவிட்டு மெழுகைபண்ணிக்கொண்டு விரவிதோர் சூதத்தில் போட்டுப்போடே

விளக்கவுரை :


807. போடவே ஆணையைப்போல் வீறிட்டுச்சாகும் போக்கோடே தங்கமிட்டு காகமிட்டு
ஆடவே கெந்தியிட்டு செந்தூரித்து ஆயிரத்துக்கொன்றிடவே னம்மைந்தாகும்
வாடவே மயங்காமல் சரக்குவைப்பு ஒவ்வொன்றாய் பார்த்துத்தேறு
தேடவே காயத்தை சுத்திபண்ணு ஜெகச்சாலத்துன்மார்க்கச் சட்டைபோக்கே

விளக்கவுரை :

[ads-post]
வைணபாஷாணம்

808. போக்கான வைணமென்ற பாஷாணத்தை பொல்லாதவாதிக்குக் காட்டவேண்டாம்
தேக்கான கெதினாலென்றுகேட்கில் ஜெகச்சாலமயக்கத்தில் சிக்கிக்கொண்டு
சோக்கான பெண்ணாசைதனிலுழன்று நோயெத்திக்குடிகெடுத்தால் நுணக்கமாகி
தாக்கான லோகத்தோர் குடிகெடுத்து சங்கியாதேயிருப்பான் சண்டிதானே

விளக்கவுரை :


809. தானென்ற மனதையுற்றுப் பார்த்தானால் சண்டான கோபத்தைநிறுத்தமாட்டார்
ஊனென்ற சுகத்தையல்லோ இச்சித்துக்கொண்டு ஊற்றகின்ற சயயோகத்தாலேகெட்டு
வானென்ற பொருள் தேடமாட்டார் மாண்பர்மகத்தான அறுதலத்தின் தரிசனையைப்பாரார்
மானென்ற ஞானவெள்ளமுண்டுகொண்டு பதறாமலிருக்கனிபார் மூடர்தாமே

விளக்கவுரை :


810. னென்ற வெடியுப்பு பலந்தானூறு சாதகமாய்ப் பாண்டத்திற்போட்டுப்பின்பு
கானென்ற காடியொடு எலுமிச்சை பழத்தால்கலந்துகொண்டு சமனாக நாலு
பானென்ற சாறுவிட்டு கரையக்காய்ச்சி பக்குவமாய் வடிகட்டி பதத்தில்காய்ச்சி
வானென்ற ஐந்துதரம் காச்சிக்கொண்டு மார்க்கமாய் ரவியுலர்த்தி பரம்பாய்வையே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 801 - 805 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

801. சொன்னதொரு சாத்திரபலங்களெல்லாஞ் சொற்பரிய மணித்தாய்க்கு குருவுமாச்சு
பன்னதொரு மனதிலுள்ள கருவையெல்லாம் பாடினேன் வெட்டவெளியாகத்தானும்
மன்னரொரு நாதாக்கள் நூலைப்பார்த்து மவுனமாய்வைத்ததெல்லாம் வெளியிற்போட்டார்
இன்னதொரு சாஸ்திரத்தைக்குள்ளேவைத்து இமுக்காகும் நூல்களையே வெளிவைத்தாரே

விளக்கவுரை :


802. வைத்ததொரு சாஸ்திரத்தின்வழிதன்னை வகையாகச்சொல்லாமல் கருமறைத்துப்போட்டார்
மெய்த்ததொரு வீரமென்ற போக்குதன்னை வெளியாகசொல்ல்மல்சூத்திரமாய்சொன்னார்
தைத்ததொரு சரக்கான வைப்புதன்னைநலமாக ஒளித்துவிட்டால் வாதமெங்கேசெய்வார்
பைத்ததொரு வாதத்திலென்ன பாங்கான வழலையொரு வீரந்தானே

விளக்கவுரை :

[ads-post]

803. தானென்ற வழலையது சுன்னமானால் சரக்கெல்லாம் கழண்டுசுன்னமாகும்
வேனென்றமகாவீரம் வாச்சுதென்றால் வேதையென்ற சொல்லுக்கு உறுதியாகும்
கானென்ற கல்லுப்பு கரியில்நீற்று கசமான சரக்கெல்லாம் ஊறல்போகும்
வேனென்ற மகாவீரம் வாய்க்காவிட்டால் வேதையென்ற சொல்லெல்லாம் விழலாய்போமே

விளக்கவுரை :


குங்குமபாஷாணம்

804. போமென்ற குங்குமபாஷாணவைப்பு காட்டுகிறேன்புத்தியில்லா புல்லருக்குங்காண
வாமென்ற சூதமதுபாஷாணம்பத்து அழகான குதிரைப்பல் பாஷாணம்பத்து 
வேனென்ற வெண்காரபொறி பலந்தான்பத்து வெளுப்பான சீனத்தின்பொறிதானைந்து
தாமென்ற அன்னத்தின் பேதிபலமைந்து கடிதான கெந்தகமும் பலமுமைந்தே

விளக்கவுரை :


805. பலமான தாளகந்தான் சிலையுமானால் பாங்காக நிறுத்தியல்லோ கல்வத்திட்டு
குலமாகும் எலுமிச்சை பழசாறுவிட்டு குமட்டியே அரைத்து ஏழுநாள் ரவியிற்போட்டு
தலமாகும் காசிபென்ற மேருக்கேற்றி தளறாமல் வாலுகையின் மேலேவைத்து
நிலமாகும் பனிரண்டுசாமம் தீமூட்டி நிசமாகும் பதம்பார்த்து ஆறப்போடே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 796 - 800 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

இந்திரகோபம் பூதபாஷானம்

796. காணப்பா யெந்நூலில் ஒன்றுதப்பில் கடைகெட்டபோகரென்று சொல்லிக்காட்டு
பூணப்பா கைதப்பில் போக்குதப்பும் புத்தியண்டாய்ச் செய்திடிலோ ஒன்றும்பொய்யா
வீணப்பா ஒருதரந்தான் தப்பிற்றானால் மீளுமதைமூன்றுதரம் அறைத்துப்பாரு
தூணப்பாதுரும்பான வாறுபோல சொல்முறையைமறவாதே சூட்டிப்பாரே

விளக்கவுரை :


797. சூட்டியதோர் எந்நூலில்பாஷானங்கள் சுளுக்காகும்வேதைக்குப் பச்சைதன்னில்
பூட்டியதோர் பூட்டென்ன பாஷானத்தில் பிரித்திதற்குள் வேதையென்று சொன்னேனில்லை
காட்டியதோடு அடித்துடையில் புண்தனக்கு கண்மறையச் சீலையினால் மூடினாபோல்
மூட்டென்ன விதுதான்மைந்தா மூட்டாளே இம்மட்டும் அறிந்து ஆடே

விளக்கவுரை :

[ads-post]

798. ஆடவே சூதமது பலந்தான்பத்து அத்திடைக்கு வெள்ளையென்ற பாஷானந்தான்
நீடவே கெந்தியது பலமுமைந்து நிலையான வெடியுப்புப் பலமுமூன்று
மகத்தான தாளகமும் பலமுரண்டு மூடவேசிலையதுவும் பலமுமொன்று
முயற்சியாய்க் கல்வத்திற்பொடியாய்ப் பண்ணே

விளக்கவுரை :


799. பொடிபண்ணித் தவசியென்ற முருங்கைசாறில் போக்கோடே மூன்றுநாளரைத்துமைபோல்
மூடிபண்ணி ரவியிலிட்டு மேருக்கேற்றி முயற்சியாய் வாலுகையில் மேலேவைத்து
அடிபண்ணி தீயெரிப்பாய் பனிரண்டுசாமம் ஆறவிட்டுராமாறு மகலிற்போடு
கெடிப்பண்ணி பனிரண்டு சாமமானால் கெடியாகக் குப்பியைத்தான் உடைத்துப்பாரே

விளக்கவுரை :


800. உடைத்திடவே மேலோடி பசுங்கித்துநின்றால் உத்தமனே சூதமென்றபாஷானமாச்சு
அடைத்திடவே அடியில்நின்ற பாஷானந்தான் அப்பனே நீலமென்ற பேருமாச்சு
குடைத்திடவே அடியில்நின்றால் காகபாஷானங்கூறிதுக்குள் கரைகண்டு சொல்லப்போனா
நடைத்திடவே சிவகாமி சொல்லக்கேட்டு நாதாக்கள் பதமறிய சொன்னேன்பாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 791 - 795 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

791. போடவே நாகமென்ற தூள்தான்பத்து பகழாக சூதமதுபலந்தான்பத்து
நீடவே துரிசியது பலந்தானைந்து நேர்பான சூடனது பலந்தானைந்து
வாடவே வெண்சாரம் பலந்தானைந்து வரிசையாய்க் கெந்தியது பலமுமைந்து
தேடவே வெள்ளையது பலமுமூன்று சிறப்பான வீரமது பலந்தான்மூனே

விளக்கவுரை :


தீமுருகல்பாஷானம் கார்முகில்பாஷானம்

792. மூணோடு தாளகமும் பலமுமூன்று முயற்சியாய்சிலையதுவும் பலமுமூன்று
தூனோடு விதுவெல்லாம் கல்வத்திட்டு துடியாகப்பொடிபண்ணி சூட்சுமங்கேளு
நாணாக்குமட்டி மாதளம்பூசாற்றில் அரைத்து எட்டுநாள்ரவியில்வைத்து
பூணோடுபொடிபண்ணி குப்பிக்கேற்றி புகழாக வானுகையில் வைத்திடாயே

விளக்கவுரை :

[ads-post]

793. வைத்திட்டு தீயெரிப்பாய் பனிரண்டுசாமம் வாகான கமலம்போல்தீதைமூட்டு
கைத்திட்டு ஆறவிட்டுமூன்றுநாள் போடு சாதகமாய் ஆறியபின்னுடைத்துப்பாரு
மெய்த்திட்டு மேலேறிப் பதங்கிப்போகும் மூர்க்கமாம் பாஷானம் இந்திரனாம்
கைத்திட்ட விலாபக்கஞ் சோரமென்றநாமம் காணப்பா அடியில் நின்றால்நாகமாமே

விளக்கவுரை :


794. ஆமென்றபாஷானம் மூன்றதானும் அன்றெறித்தார் மன்மதனை ஈசன்தானும்
ஓமென்ற நெற்றிக்கண் சுவாலைக்கொக்கும் உத்தமனே சரக்குக்குக் காலகாலன்
போமென்ற வெகுதீரன் யெட்டியோடும் போனபின்பு கற்பகமாம் விருஷமப்பா
வேமென்ற காலனுண்ட கற்பமப்பா விரைந்துண்ண காயசித்தி மண்டலத்தில்தானே

விளக்கவுரை :


795. சித்தியாகும் சூதமென்ற பாஷானம்வைப்பு செய்யரிது சித்தருடநூலிலில்லை
பத்தியாம் பாஷானம் பணந்தானெண்பார் பரியாகப் பேச்சாச்சு வாதப்பேச்சு
முத்தியாம் சூதமென்ற பாஷானத்தை முன்னூற்றுக்கொன்றிடவே பத்தும்பத்தும்
வெத்தியாம் பாஷானம்பச்சைதன்னில்வேதை வெகுநூலில் ஆராய்ந்துசொன்னேன்காணே

விளக்கவுரை :


Powered by Blogger.