791. போடவே நாகமென்ற
தூள்தான்பத்து பகழாக சூதமதுபலந்தான்பத்து
நீடவே துரிசியது
பலந்தானைந்து நேர்பான சூடனது பலந்தானைந்து
வாடவே வெண்சாரம்
பலந்தானைந்து வரிசையாய்க் கெந்தியது பலமுமைந்து
தேடவே வெள்ளையது பலமுமூன்று
சிறப்பான வீரமது பலந்தான்மூனே
விளக்கவுரை :
தீமுருகல்பாஷானம்
கார்முகில்பாஷானம்
792. மூணோடு தாளகமும் பலமுமூன்று
முயற்சியாய்சிலையதுவும் பலமுமூன்று
தூனோடு விதுவெல்லாம்
கல்வத்திட்டு துடியாகப்பொடிபண்ணி சூட்சுமங்கேளு
நாணாக்குமட்டி
மாதளம்பூசாற்றில் அரைத்து எட்டுநாள்ரவியில்வைத்து
பூணோடுபொடிபண்ணி
குப்பிக்கேற்றி புகழாக வானுகையில் வைத்திடாயே
விளக்கவுரை :
[ads-post]
793. வைத்திட்டு தீயெரிப்பாய்
பனிரண்டுசாமம் வாகான கமலம்போல்தீதைமூட்டு
கைத்திட்டு
ஆறவிட்டுமூன்றுநாள் போடு சாதகமாய் ஆறியபின்னுடைத்துப்பாரு
மெய்த்திட்டு மேலேறிப்
பதங்கிப்போகும் மூர்க்கமாம் பாஷானம் இந்திரனாம்
கைத்திட்ட விலாபக்கஞ்
சோரமென்றநாமம் காணப்பா அடியில் நின்றால்நாகமாமே
விளக்கவுரை :
794. ஆமென்றபாஷானம் மூன்றதானும்
அன்றெறித்தார் மன்மதனை ஈசன்தானும்
ஓமென்ற நெற்றிக்கண்
சுவாலைக்கொக்கும் உத்தமனே சரக்குக்குக் காலகாலன்
போமென்ற வெகுதீரன்
யெட்டியோடும் போனபின்பு கற்பகமாம் விருஷமப்பா
வேமென்ற காலனுண்ட கற்பமப்பா
விரைந்துண்ண காயசித்தி மண்டலத்தில்தானே
விளக்கவுரை :
795. சித்தியாகும் சூதமென்ற பாஷானம்வைப்பு செய்யரிது சித்தருடநூலிலில்லை
பத்தியாம் பாஷானம்
பணந்தானெண்பார் பரியாகப் பேச்சாச்சு வாதப்பேச்சு
முத்தியாம் சூதமென்ற
பாஷானத்தை முன்னூற்றுக்கொன்றிடவே பத்தும்பத்தும்
வெத்தியாம்
பாஷானம்பச்சைதன்னில்வேதை வெகுநூலில் ஆராய்ந்துசொன்னேன்காணே
விளக்கவுரை :