இந்திரகோபம் பூதபாஷானம்
796. காணப்பா யெந்நூலில்
ஒன்றுதப்பில் கடைகெட்டபோகரென்று சொல்லிக்காட்டு
பூணப்பா கைதப்பில்
போக்குதப்பும் புத்தியண்டாய்ச் செய்திடிலோ ஒன்றும்பொய்யா
வீணப்பா ஒருதரந்தான்
தப்பிற்றானால் மீளுமதைமூன்றுதரம் அறைத்துப்பாரு
தூணப்பாதுரும்பான வாறுபோல
சொல்முறையைமறவாதே சூட்டிப்பாரே
விளக்கவுரை :
797. சூட்டியதோர்
எந்நூலில்பாஷானங்கள் சுளுக்காகும்வேதைக்குப் பச்சைதன்னில்
பூட்டியதோர் பூட்டென்ன
பாஷானத்தில் பிரித்திதற்குள் வேதையென்று சொன்னேனில்லை
காட்டியதோடு அடித்துடையில்
புண்தனக்கு கண்மறையச் சீலையினால் மூடினாபோல்
மூட்டென்ன விதுதான்மைந்தா
மூட்டாளே இம்மட்டும் அறிந்து ஆடே
விளக்கவுரை :
[ads-post]
798. ஆடவே சூதமது பலந்தான்பத்து
அத்திடைக்கு வெள்ளையென்ற பாஷானந்தான்
நீடவே கெந்தியது பலமுமைந்து
நிலையான வெடியுப்புப் பலமுமூன்று
மகத்தான தாளகமும் பலமுரண்டு
மூடவேசிலையதுவும் பலமுமொன்று
முயற்சியாய்க்
கல்வத்திற்பொடியாய்ப் பண்ணே
விளக்கவுரை :
799. பொடிபண்ணித் தவசியென்ற
முருங்கைசாறில் போக்கோடே மூன்றுநாளரைத்துமைபோல்
மூடிபண்ணி ரவியிலிட்டு
மேருக்கேற்றி முயற்சியாய் வாலுகையில் மேலேவைத்து
அடிபண்ணி தீயெரிப்பாய்
பனிரண்டுசாமம் ஆறவிட்டுராமாறு மகலிற்போடு
கெடிப்பண்ணி பனிரண்டு
சாமமானால் கெடியாகக் குப்பியைத்தான் உடைத்துப்பாரே
விளக்கவுரை :
800. உடைத்திடவே மேலோடி
பசுங்கித்துநின்றால் உத்தமனே சூதமென்றபாஷானமாச்சு
அடைத்திடவே அடியில்நின்ற
பாஷானந்தான் அப்பனே நீலமென்ற பேருமாச்சு
குடைத்திடவே அடியில்நின்றால்
காகபாஷானங்கூறிதுக்குள் கரைகண்டு சொல்லப்போனா
நடைத்திடவே சிவகாமி
சொல்லக்கேட்டு நாதாக்கள் பதமறிய சொன்னேன்பாரே
விளக்கவுரை :