போகர் சப்தகாண்டம் 786 - 790 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 786 - 790 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

சாதிலிங்கவைப்பு

786. தானென்ற சாதிலிங்கவைப்புகேளு சாற்றறிய சூதமது பலந்தானூறு
தேனென்ற கெந்தகந்தான் இருபத்தைந்து நேர்ப்பாக கெந்தகத்தை ஓட்டிவிட்டு
வானென்ற கணவில்வைத்து உருக்கிக்கொண்டு வரிசையாய்ச் சூதத்தை அதிலேபோட்டு
தானென்ற அயத்துடுப்பால் கிண்டிக்கிண்டுக் கறுப்பாகத்தூள்போலே ஆகும்பாரே

விளக்கவுரை :


787. ஆகுமப்பா கெந்தகத்தில் நாலத்தொன்று அசையாதே வெடியுப்புப்பொடித்துப்போடு
வாகுமப்பா செம்பாலேகுடம்போலான வகையாகவதற்குள்ளே தூளைப்போடு
ஏகுமப்பா அரைவாசி மட்டும்போடு எழிலான வானுகையின்மேலேவைத்து
போகுமப்பா தீயெரிப்பா யெட்டுநாள்தான் புகழான பதங்கித்து லிங்கமாமே

விளக்கவுரை :

[ads-post]

788. ஆமப்பா பதங்கித்துப் பவளம்போலே அசையாதுமேல்நின்றததுதான் லிங்கம்  
போமப்பா பாண்டமதுசெம்புத்தொட்டி புகழான அடியில்நின்றால் தீமுறுகலாச்சு 
காமப்பா நடுவில்நின்றால் கார்முகிலுமாச்சு கடுகியிதில்மெழுகுசெய்யில் வேதையாகும்
சேமப்பா ஷானமுப்பத்திரண்டு சிறப்பானவைப்புக்கு நாலுமாச்சே

விளக்கவுரை :


789. வைப்பான நாகமென்ற பாஷானத்தை வகையாகசொல்லுகிறேன் வேதையாக
மெய்ப்பான நாகமதுபலந்தான்பத்து விரவியே இலுப்பைநெய்யில் சுத்திசெய்து
வைப்பான தகடுகட்டிப் புளியிலைபோல்நறுக்கி நயமானகூத்தனென்ற யிலையரைத்து
கைப்பான தகட்டுக்குக் கவசங்கட்டி கடுகியைந்து வெருவிலே புடத்தைப்போடே  

விளக்கவுரை :


790. போட்டபின்பு யீரைந்து புடந்தானப்பா புகழான அயச்சட்டித்தனிலுருக்கி
நீட்டபின்பு குமரிவேர் பொடியாய்நறுக்கி நிற்வாகக் கூடவிட்டுஅயத்தால் கிண்டு
மூட்டபின்பு பனிரண்டுசாமந்தானு முத்தமனே வேர்போட்டுக்கிடைக்கிண்ட
மாட்டபின்பு மஞ்சள்நிறபற்பமாகும் மைந்தனேயிதைநிறுத்துக் கல்வத்திற்போடே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar