போகர் சப்தகாண்டம் 781 - 785 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 781 - 785 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

781. உலர்ந்தபின்பு துரிசிபலம் நாலுபோடு உத்தமனே வெண்காரம் பலந்தான்மூன்று
அலர்ந்தபின்பு வெடியுப்பு பலந்தான்ரண்டு அப்பனே வீரமதுபலந்தானொன்று
கலந்தபின்பு சீனமதுபலந்தான்போடு கற்பூரசிலாசத்து பலந்தான்ரண்டு
குலந்தனக்குக் கோடாலி குடோரியொன்று கூசாதே கூடவிட்டு அரைத்திடாயே

விளக்கவுரை :


782. அரைத்திடவே யெலியாலம்பாலாலாட்டி அப்பனேமூன்றுநாள் அரைத்துப்பின்பு
நிரைத்திடவே தெல்லுபோல் வில்லைகட்டி நேராக சரவுலையில் வூதுவூது
துரைத்திடவே உருகியது சத்தாய்வீழும் சிதறாமலெடுத்தெல்லாம் கட்டைதானும்
புரைத்திடவே பின்பொருகாலுருக்கிப்பாரு பொன்போலாஞ்சத்தெல்லாம் எடுத்துக்கொள்ளே

விளக்கவுரை :

[ads-post]

783. கொள்ளவே குகையில்வைத்து காரமிட்டு கூசாதே உருகியெல்லா மணியாய்வாங்கே
விள்ளவே நவலோகம் நூற்றுக்கொன்று மேவியகாசெடைதான் சத்தையீய  
துள்ளவே பதினாறுமாற்றுமாகும் துடியான சத்திலே கிண்ணிவார்த்து
அள்ளவே சீலைசெய்து வானுலையில்வைத்து ஆதியாகும் சூதமிட்டு கொதிக்கவையே

விளக்கவுரை :


784. கொதிக்கையிலே கரூமத்தஞ்சாறுவாறு கூசாதே வெண்ணெய்ப்போல் வாருமட்டும்
விதிக்கையிலே வெண்ணெயெல்லாம் வழித்துக்கொண்டு மேலான குளிர்ந்தநீரில்போட்டு
மதிக்கையிலே ஆரையிலை கவசங்கட்டி வகையாக யீரஞ்சு புடத்தைப்போடு
துதிக்கையிலே மணியாலே சிவத்தைப்பண்ணு செனனமென்ற மூவேழுமோஷந்தானே

விளக்கவுரை :


785. தானென்ற மணியாலே செந்தூரம்பண்ணு சமத்தான குரபண்ணு களங்குபண்ணு
வானென்ற வெளிகடக்க சித்திபண்ணு மாசற்ற யோகசித்தி கெவுனசித்திபண்ணு
தேனென்ற வமுர்தமங்கே சித்திபண்ணு ஜெகஜால வார்த்தையெல்லாம் ஜகம்போலெண்ணு
கோனென்ற குரதேடிகூப்பிட்டாலே யென்பாளாயிதானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar