போகர் சப்தகாண்டம் 776 - 780 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 776 - 780 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

776. ஆட்டுவது எருக்கம்பால் நாலுசாமம் அப்பனே மெழுகாகும்பதத்தில்வாங்கிப்
பூட்டுவது தெல்லுபோல் வில்லைகட்டி பேரான பூப்புடத்தில் தயிலம்வாங்கி
நாட்டுவது பரணியிலே அடைத்துநலமாக அரப்பொடிதான் பலமுமெட்டு
மூட்டுவது தயிலத்திற் பிசறிக்கொண்டு முயற்சியாய் காரமிட்டு உருக்கிடாயே

விளக்கவுரை :


அயச்செம்பு

777. உருக்கிடவே ஐந்துதரந்தயிலத்தில்பிசறி உத்தமனே ரவிபோலே செம்புமாகும்
சொருக்கிடவே மதிதனிலே ஐம்பதுக்குஒன்று துடியாக மாற்றேழுங்காணும்காணும்
அருக்கிடவே தங்கமிட்டு உருக்கிக்கொண்டு ஆயென்றசூதமிட்டு கெந்தியிட்டு
பருக்கிடவே வானுகையில் செந்தூரித்தால் பதினாறுமாற்றாக விளங்கும்பாரே

விளக்கவுரை :

[ads-post]

778. பாரின்னந்தாளகத்தின் செம்புசொல்வேன் பருகல்லும்சுண்ணாம்புச் சுட்டுக்கொண்டு
காரின்னந்தாளகத்தை கிளிபோற்கட்டுக் கல்சுண்ணங் கீழ்மேலும்பூசிநன்றாய்
வாரின்னம் வெந்நீரைவிட்டுநீற்று மறவாதேவிருபத்துவென்றுநீயும்
சேரின்னங் கூழ்ப்பாண்டங்காடியிலேபோட்டுத் திறமாக கொதிக்கவிட்டு இறக்கிடாயே

விளக்கவுரை :


தாளகம்

779. இறக்கியே கல்வத்திற்சேரைப்போட்டு இதமானகுலாமல்லிச் சாற்றாலாட்டி
அறக்கியே யுலரவிட்டு ஐந்துநாளாட்டி ஆடுதின்னாப்பாலை சாற்நாலுசாமம்
மறுக்கியே சிறுகுட்டித் தக்காளிச்சாறு மைந்தனே யமுரியிலைச் சாற்றாலாட்டு
நறக்கியே எருக்கினுட பழுப்புச்சாறு நலமானவகத்தியுட பழுப்புச்சாறே

விளக்கவுரை :


780. பழுப்பான கெருகனுட கிழங்குசாறு பரிவான எருக்கினுட கிழங்குசாறு
கொழுப்பான வெள்ளாட்டு ரத்தத்தோடு கூரானமுசல்ரத்தம் கோழிரத்தம்
கொழுப்பான வெள்ளைமந்தாரைப்பூச்சாறு திறமான இந்ரிதமாங்கோபப்பூச்சி
நழுப்பான பூநாகம் நூறுபோட்டு நன்கரைத்து ஒவ்வொருநாள் உலரப்போடே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar