771. சாற்றினாலரைத்தரைத்து
வில்லைகட்டி சார்வாகப் பூப்புடத்தில் தயிலம்வாங்கு
தேற்றினால் தயிலம்விட்டு
கெந்தகத்தைச் சிறப்பாக இருபதுநாள் ஆட்டுஆட்டு
பேற்றினால்
துரிசிவெள்ளைப்பலந்தானொன்று பேராகக்கட்டியதோர்சாரமொன்று
காற்றினால் கட்டியதோர்
உப்புமொன்று கலங்காதே கூடவிட்டு மூன்றுநாளாட்டே
விளக்கவுரை :
772. ஆட்டியபின் காசிபென்ற மேருவிலேபோட்டு அப்பனே மூக்கின்வாய்க்கதம்பைவைத்து
மூட்டியபின்
கும்பித்துச்சட்டியிலேபோட்டு மூக்கின்வாய்ப்பிரம்பைவிட்டு மண்ணைக்கொட்டி
தீட்டியபின் அடுப்பேற்றி
அடுப்புக்குள்ளே சிறப்பாகப் பீங்கானாம் பரணிவைத்து
ஓட்டியபின் கட்டியிலே
எருவைப்போட்டு உத்தமனே தயிலமெல்லாம் எடுத்துவையே
விளக்கவுரை :
[ads-post]
773. தயிலமெல்லாம் வீழ்வதற்கு
மூன்றுபுடம்போடத் தங்காமலிறங்கிப்போகும் பீங்கானுள்ளே
அகிலமெல்லாமீந்தாலும்
தயிலவிலைக்கொவ்வாது ஆச்சரியம்பரிமேலே பூசிக்காய்ச்சு
மயிலமெல்லாந்
தங்கமதுசெம்பேயாகும் மாசற்றசெம்பொன்னும் நவலோகங்கோடி
கயிலமெல்லாமுன்கையிலே
செம்பையீயக் கண்கொள்ளா வேதையுமாம் கண்டுபாரே
விளக்கவுரை :
கேசரத்தின்தயிலம்
774. பாரப்பா
கேசரத்தின்தயிலம்சொல்வேன் பரிவான கேசரந்தான் பலந்தானூறு
சேரப்பா இளவயதுரோமந்தன்னை
சீயக்காய்க் கொதியிட்டுக் கழுவிப்போட்டு
சாரப்பா எள்ளுபோல்
நறுக்கிக்கொண்டு சாகாமலெண்ணெய்தனில்தோய்த்து
சீரப்பா சட்டியிலே
வறுத்துக்கொண்டு சிறப்பான கல்வத்திலிதனைப்போடே
விளக்கவுரை :
775. போடவே கெந்தகந்தான்
பலமும்பத்து புகழான தாளகமும்பலமுமைந்து
நாடவே சிலையதுவும்
பலமுமூன்று நஞ்சானவீரமது பலமும்ரண்டு
கூடவே கட்டியதோர் சாரமொன்று
குறிப்பாகக் கட்டியதோர் கல்லுப்பொன்று
தேடவே துரிசுகுரு
பலந்தானொன்று சிறப்பாகக்கூடவிட்டுத் திறமாயாட்டே
விளக்கவுரை :