போகர் சப்தகாண்டம் 866 - 870 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

866. வாங்கியே குகையிலிட்டு காரம்வைத்து வளமாகயுருக்கியொரு மணியால்வாங்கி
தாங்கியே எடுத்துப்பார் முத்துப்போலத் தவளம்போல் சூதமதுயிருக்கும்பாரு
ஏங்கியே ஆச்சுதென்று மயங்கவேண்டாம் இயல்பாக கெந்தியிட்டுப் பதங்கம்செய்து
ஓங்கியே நாகமிட்டுக் கல்வத்திற்போட்டு உத்தமனே மயிற்கொன்றை சாற்றாலாட்டே

விளக்கவுரை :


867. ஆட்டியே காசிபென்ற மேருக்கேற்றி அப்பனே வானுகையில் மேலேவைத்து
மூட்டியே பனிரண்டுசாமந்தீயை முசியாமலாறவிட்டு யெடுத்துப்பாரு 
நீட்டியே செந்தூரம் அருணன் போலாம் நேரான நவலோகம் நூற்றுக்கொன்று
காட்டியே தனமாற்றாய்க் கண்டுபாரு கனமான பதங்கமது மகிமைதானே

விளக்கவுரை :

[ads-post]

868. தானான அரைவாசி வுப்பின்மேற்போட்டுத் தன்னுக்குள் சூதத்தைப்பரப்பிவைத்து
கானானவதின்மேலே செங்கல்தூள்போட்டுக் கையாலே அமிழ்த்திட்டு மேல்தோண்டிகவிழ்த்து
வானானசந்துக்கு மண்ணைசெய்து மருவிதோர்வடுப்பேற்றி யெறிப்பாயப்பா
தேனான காடாக்கினி சாமம்நாலு சிறப்பாக யெரித்திடவே பதங்கமாமே

விளக்கவுரை :


869. மகிமையென்ற பதங்கத்தை பலந்தான்தூக்கி மகத்தான கல்வத்திற்போட்டுப்பின்பு
மகிமையென்ற அரப்பொடியும் நாலுபலம்போட்டு மகத்தானகாரமொரு பலமும்பலமும்போட்டு
மகிமையென்ற பெருங்காட்டாமணக்கினெண்ணெய் வார்த்தரைத்து சாமமொன்று
குகையிலிட்டு மகிமையாய் மூன்றுதர முருக்கிப்போட மாசற்ற அயந்தானும் நாகமாமே

விளக்கவுரை :


870. நாகமென்ற அயத்திடைக்குச் சூதங்கூட்டி நலமாகவுருக்கையிலே நாகமிட்டு
மோகமென்ற புகையெழுப்பி கட்டிப்போகும் உத்தமனே கெந்தியிட்டுச் சூதமிட்டு
பாகமென்ற பொற்றலையின் சாற்றாலாட்டி பக்குவமாய் ஐந்தெருவிற் புடத்தைப்போட்டு
வேகமென்ற நவலோகம் நூற்றுக்கொன்று வேதிக்க மாற்றெண்ண பனிரெண்டாச்சே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 861 - 865 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

861. தானான அரப்பொடியும் நாகம்வங்கம் சார்பான காரீயம்வெங்கலத்தின் பொடியும்
தேனான வகைக்கொரு காசெடைதான்தூக்கி சிறப்பாக முப்பத்திலொன்றுமாச்சு
வானான சூதமது முப்பத்தொன்று வகையெல்லாம் கல்வத்திற்பொடித்துப்போட்டு
தேனான தயிலத்தைக் குத்தியாட்டி குறிப்பாக ஏழுதரமரைத்துலர்த்தே

விளக்கவுரை :


862. உலர்த்தியே யிரும்பாலே யுள்ளங்கைபோல் உத்தமனே சாகச்சட்டிபண்ணி
மலர்த்தியே வரைவிட்டு செம்புகிண்ணி மருவவே வதைக்குள்ளே வழக்கம்பார்த்து
அலர்த்தியே சட்டியிலே வருந்துவைத்து அதன்மேலேகிண்ணிவைத்து பொருந்தப்பார்த்து
சிலர்த்தியே சத்துக்குச்சீலை செய்யுந்திறமையாய்த் தான்வரிசை செப்புவேனே

விளக்கவுரை :

[ads-post]

863. செப்பவேசெம்பினுட அரப்பொடியுங்கடுக்காய் திறமான இரும்பினுட அரப்பொடியுங்கூட்டி
அப்பவேசெம்புநீறு மடலானகுருந்தக்கல்மீனினெட்டி
நப்பவே வெண்கருவு மத்திப்பாகும் நலமாக இதில்விட்டி இடித்துநைய
உப்பவே மெழுகுபோல் பதமாய்ப்பண்ணி உத்தமனே சந்துக்குளடைத்திடாயே

விளக்கவுரை :


864. அரைத்திட்ட செம்புபோல் கவசம்பண்ணி அசகாமல் பதனமாய்ச் சீலைசெய்து
உடைத்திட்டு முக்கவரில் சட்டிவைத்து உற்பனமாம் இலுப்பைநெய்யில் விளக்குவைத்து
படைத்திட்டு அங்குட்டப் பருமமாகப் பக்கத்தில் நின்றதிரி விளக்கையேற்றி
கடைத்திட்டு மூன்றுநாள் அவியாமலெடுத்து கைகண்டபதங்கமது ஏறும்பாரே

விளக்கவுரை :


865. றியதோர் பதங்கமெல்லாம் வழித்தெடுத்து இதமானவப்பிரேக நவநீதம்பண்ணி
கூறியதோர் வெண்கருவாலரைத்துவாங்கி குகைசெய்து மேல்மூடிரண்டுசெய்து
மாறியதோர் பதங்கமதையுள்ளேவைத்து வகையாக மேல்மூடிச்சீலைசெய்து  
தேரியதோர் செகபுடத்தில் போட்டெடுத்துச் சிறப்பாக மருந்தெல்லாம் வாங்கிக்கொள்ளே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 856 - 860 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

856. தானென்ற வங்காளப் பச்சைவைப்பு சாதகமாய்ச் சொல்லுகிறேன் மாணாக்கானே
ஊவென்ற செம்பான அரப்பொடிதான்பத்து வுத்தமனே துரிசிபத்து வெடியுப்புரண்டு
வானென்ற எலுமிச்சம்பழச்சார்விட்டு மருவமேமத்தித்து கல்வத்திட்டு
தேனென்ற குப்பியிலே மூன்றுதினங்கள் புதைத்து திறமாகவெடுத்துப்பார் பச்சையாமே

விளக்கவுரை :


857. மப்பாசெம்புதனை சுத்திபண்ண அறையுறேன் கருங்குன்றிக் கொள்ளிலையின்சாறு
வாமப்பாகல்லுருவி நொச்சியொடு வகைநாளுமிடித்துநன்றாய் பழச்சார்விட்டு
காமப்பாகுன்றிமணி யரைத்துப்போட்டு கலக்கியொன்றாய்மத்தித்து யதிற்குடசாய்ப்பாய்
சேமப்பாவேழுதரம் உருக்கிசாய்க்கச் செம்பினுடவூறலெல்லாம் கழன்றுபோமே

விளக்கவுரை :

[ads-post]

858. போகவேயிச்செம்பில் கிண்ணிபண்ணு புகழானசெங்கொட்டை நீர்வெட்டிமுத்து
வேகவேவெளிக்காட்டா மணர்குவித்து விரைந்தவேர் வாழைவித்து சரியாய்கூட்டி
சாகவேதுரிசியொன்று சாரமொன்று சாதகமாய்க் கல்லுப்பு வெடியுப்பொன்று
ஏகவேயுரலிலிட்டு இடித்திதெல்லாம் இதமான கார்த்திகையின் கிழங்குசாறே

விளக்கவுரை :


859. சாற்றினால் மூன்றுநாளரைத்துமைபோல் சந்திச்சு பில்லைதட்டி யுலரப்போடு
பேற்றினால் பூப்புடத்தில் தயிலம்வாங்கி பீங்கானாம் பரணிலடைத்துவைத்து
வாற்றினால் பதங்கமொன்று சொல்வேன்யானும் வகையான கல்லுப்பு வெடியுப்புசீனம்
தேற்றினால் துரிசியொடு சாரந்தானும் சிறப்பாக ஒவ்வொருகாசெடைதான்தூக்கே

விளக்கவுரை :


860. தூக்குவது அரிதாரஞ் சிலையுங்கெந்தி துடியானவெள்ளையொடு கெவுரிலிங்கம்
ஆக்குமது கடல்நுரையும் வீரந்தொட்டி அழகான குதிரைப்பல் அன்னபேதி
தேக்குவது பூநீறுத்தியானமாகும் சிறப்பான வெண்காரங்காந்தஞ்சிங்கி 
நீக்குவது அப்பிரேகம் ராசவந்தாம் நேரான நிமிளையொடு பொன்னம்பர்தானே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 851 - 855 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

851. அண்டவித்தை யாருக்காம் சிவயோகிக்காம் ஆத்தாளப்பூசித்தால் மிக்காகும்
பிண்டவித்தை மும்மூலயோகிக்காகும் பேரான அசையையுட மூலிக்கொக்கும்
வண்டவித்தை பொல்லாதது ரோகிக்கெய்து மகத்தான வேதாந்த ரிஷிகள்சித்தர்
கண்டவித்தை மனதடக்கி யூமையாவார் காரணமாம் சீஷருக்குப் போதிப்பாரே

விளக்கவுரை :


852. பாரென்ற குருவெடுத்து காசெடைதான்தூக்கிப் பரிவான சதுரகள்ளிப்பாலிற்போட்டு
காரென்ற சாமத்தில் சுத்தசலமாகும் கல்வத்தில்சூதம்விட்டு சுத்திபண்ணிப்
பாரென்ற அயச்சட்டிக்குள்ளே விட்டுப் பதறாமலொருசாமம் சுருக்குபோட
கோனென்ற யிட்டிளிபோல் கட்டியாகும் கூப்பிட்டால் ஏனென்னும் வாதந்தானே

விளக்கவுரை :

[ads-post]

853. வாதந்தான் வேண்டுமென்றால் சூதத்தாட்டு மகத்தான அஷ்டகர்மமெட்டுமாகும்
காதந்தான் கோடியது நிமைக்குமுன்னே கலந்தோடிப்புக்கிவரு மணியினோசை
வேதந்தான் திடத்துமே முடிவுக்கொக்கு மேவியதோர் சிலம்பொலியில் நாதங்கேட்கும்
நீதந்தான் குகத்துக்கடுத்தவாறு நிமிஷத்திற்காயசித்தி கெவுனசித்தியாமே

விளக்கவுரை :


854. ஆமிந்தமணிநின்று வுருகும்போது அந்திடைக்குத் தங்கமிட்டு ஆட்டுஆட்டு
சேமிந்தகெந்தகத்தை ரெட்டுயிட்டு சிறப்பான பொற்றலையின் சாற்றாலாட்டி
போமிந்தசரக்கதனைக் குப்பியில்வைத்துப் புகழாக சீலைமண்வலுவாய்ச்செய்து
ஓமிந்தகாசிபென்ற மேருக்கேற்றி உற்பனமாம் வானுகையின் மேலேவையே

விளக்கவுரை :


855. வைக்கவே பனிரண்டுசாமந்தீயை மறவாதே முத்தீயு மாட்டுமாட்டு  
வைக்கவே தாளம்பூ நிறத்தைபோலாம் சார்பாகச் சிலாகிட்டுக் கிண்டிப்பாரு
உய்க்கவே நவலோக மாயிரத்துக்கொன்று உத்தமனே பதினாறுமாற்றுமாகும்
மொய்க்கவே செந்தூரங்குன்றியுண்ணு மேனியுமே யருணன்போலாகுந்தானே

விளக்கவுரை :


Powered by Blogger.