861. தானான அரப்பொடியும்
நாகம்வங்கம் சார்பான காரீயம்வெங்கலத்தின் பொடியும்
தேனான வகைக்கொரு
காசெடைதான்தூக்கி சிறப்பாக முப்பத்திலொன்றுமாச்சு
வானான சூதமது முப்பத்தொன்று
வகையெல்லாம் கல்வத்திற்பொடித்துப்போட்டு
தேனான தயிலத்தைக்
குத்தியாட்டி குறிப்பாக ஏழுதரமரைத்துலர்த்தே
விளக்கவுரை :
862. உலர்த்தியே யிரும்பாலே
யுள்ளங்கைபோல் உத்தமனே சாகச்சட்டிபண்ணி
மலர்த்தியே வரைவிட்டு
செம்புகிண்ணி மருவவே வதைக்குள்ளே வழக்கம்பார்த்து
அலர்த்தியே சட்டியிலே
வருந்துவைத்து அதன்மேலேகிண்ணிவைத்து பொருந்தப்பார்த்து
சிலர்த்தியே சத்துக்குச்சீலை
செய்யுந்திறமையாய்த் தான்வரிசை செப்புவேனே
விளக்கவுரை :
[ads-post]
863. செப்பவேசெம்பினுட
அரப்பொடியுங்கடுக்காய் திறமான இரும்பினுட அரப்பொடியுங்கூட்டி
அப்பவேசெம்புநீறு
மடலானகுருந்தக்கல்மீனினெட்டி
நப்பவே வெண்கருவு
மத்திப்பாகும் நலமாக இதில்விட்டி இடித்துநைய
உப்பவே மெழுகுபோல்
பதமாய்ப்பண்ணி உத்தமனே சந்துக்குளடைத்திடாயே
விளக்கவுரை :
864. அரைத்திட்ட செம்புபோல்
கவசம்பண்ணி அசகாமல் பதனமாய்ச் சீலைசெய்து
உடைத்திட்டு முக்கவரில்
சட்டிவைத்து உற்பனமாம் இலுப்பைநெய்யில் விளக்குவைத்து
படைத்திட்டு அங்குட்டப்
பருமமாகப் பக்கத்தில் நின்றதிரி விளக்கையேற்றி
கடைத்திட்டு மூன்றுநாள்
அவியாமலெடுத்து கைகண்டபதங்கமது ஏறும்பாரே
விளக்கவுரை :
865. றியதோர் பதங்கமெல்லாம் வழித்தெடுத்து இதமானவப்பிரேக நவநீதம்பண்ணி
கூறியதோர்
வெண்கருவாலரைத்துவாங்கி குகைசெய்து மேல்மூடிரண்டுசெய்து
மாறியதோர்
பதங்கமதையுள்ளேவைத்து வகையாக மேல்மூடிச்சீலைசெய்து
தேரியதோர் செகபுடத்தில்
போட்டெடுத்துச் சிறப்பாக மருந்தெல்லாம் வாங்கிக்கொள்ளே
விளக்கவுரை :