866. வாங்கியே குகையிலிட்டு
காரம்வைத்து வளமாகயுருக்கியொரு மணியால்வாங்கி
தாங்கியே எடுத்துப்பார்
முத்துப்போலத் தவளம்போல் சூதமதுயிருக்கும்பாரு
ஏங்கியே ஆச்சுதென்று
மயங்கவேண்டாம் இயல்பாக கெந்தியிட்டுப் பதங்கம்செய்து
ஓங்கியே நாகமிட்டுக்
கல்வத்திற்போட்டு உத்தமனே மயிற்கொன்றை சாற்றாலாட்டே
விளக்கவுரை :
867. ஆட்டியே காசிபென்ற
மேருக்கேற்றி அப்பனே வானுகையில் மேலேவைத்து
மூட்டியே பனிரண்டுசாமந்தீயை
முசியாமலாறவிட்டு யெடுத்துப்பாரு
நீட்டியே செந்தூரம் அருணன்
போலாம் நேரான நவலோகம் நூற்றுக்கொன்று
காட்டியே தனமாற்றாய்க்
கண்டுபாரு கனமான பதங்கமது மகிமைதானே
விளக்கவுரை :
[ads-post]
868. தானான அரைவாசி
வுப்பின்மேற்போட்டுத் தன்னுக்குள் சூதத்தைப்பரப்பிவைத்து
கானானவதின்மேலே
செங்கல்தூள்போட்டுக் கையாலே அமிழ்த்திட்டு மேல்தோண்டிகவிழ்த்து
வானானசந்துக்கு மண்ணைசெய்து
மருவிதோர்வடுப்பேற்றி யெறிப்பாயப்பா
தேனான காடாக்கினி சாமம்நாலு
சிறப்பாக யெரித்திடவே பதங்கமாமே
விளக்கவுரை :
869. மகிமையென்ற பதங்கத்தை
பலந்தான்தூக்கி மகத்தான கல்வத்திற்போட்டுப்பின்பு
மகிமையென்ற அரப்பொடியும்
நாலுபலம்போட்டு மகத்தானகாரமொரு பலமும்பலமும்போட்டு
மகிமையென்ற
பெருங்காட்டாமணக்கினெண்ணெய் வார்த்தரைத்து சாமமொன்று
குகையிலிட்டு மகிமையாய்
மூன்றுதர முருக்கிப்போட மாசற்ற அயந்தானும் நாகமாமே
விளக்கவுரை :
870. நாகமென்ற அயத்திடைக்குச்
சூதங்கூட்டி நலமாகவுருக்கையிலே நாகமிட்டு
மோகமென்ற புகையெழுப்பி
கட்டிப்போகும் உத்தமனே கெந்தியிட்டுச் சூதமிட்டு
பாகமென்ற பொற்றலையின்
சாற்றாலாட்டி பக்குவமாய் ஐந்தெருவிற் புடத்தைப்போட்டு
வேகமென்ற நவலோகம்
நூற்றுக்கொன்று வேதிக்க மாற்றெண்ண பனிரெண்டாச்சே
விளக்கவுரை :