871. ஆச்சப்பா வெள்ளையென்ற
பதங்கம்கேளு ஆதிவெள்ளைப்பாஷாணக் குதிரைப்பல்லும்
ஓச்சப்பா தாளகமும்
பூநீறும்வீரம் உத்தமனே சாரமொடு துருசுசீனம்
பாச்சப்பா கல்லுப்பு
வெடியுப்புக் கெவுரி பரிவாக வெள்ளையென்ற அப்பிரகத்தோடு
காச்சப்பா நாகமொடு
வெள்ளீயப்பொடியும் கடல்நுரையும் சவ்வுநீரண்டத்தோடே
விளக்கவுரை :
872. ஓடோடு அன்னமென்ற பேதிதானும்
உத்தமனே சூடனொடு அரப்பொடியுஞ்சிங்கி
காடோடு வக்கிராந்த கஞ்சமென்ற
நிமிளை காந்தமொடு சத்தியென்ற சாரந்தானும்
நாடோடு இரபத்து ஐந்துமாச்சு
நலமான சூடனதுஇருபத்தைந்து
பாடோடு
யெருகாலம்பால்விட்டாட்டி பதறாம லேழுநாளரைத்துலர்த்தே
விளக்கவுரை :
[ads-post]
873. உலர்த்தியே விமலையாய் வைத்துக்கொண்டு உத்தமனே வெள்ளிபண்ணி
அலர்த்தியே
அயச்சட்டியுள்ளங்கைபோல் அப்பனே வரையிட்டு பண்ணிவைத்து
மலர்த்தியே மருந்துதனை
யுள்ளேவைத்து வகையாக மேற்கிண்ணிப் பொருந்தப்பார்த்து
பிலர்த்தியே முன்கவசம்
போலேசெய்து பேராகமுக்கலரின் மேலேயேற்றே
விளக்கவுரை :
874. ஏங்கியேகல்வைத்துத்
திரியைப்போட்டு இதமான முள்ளியெண்ணெய் விளக்குயேற்றி
போற்றியே
மூன்றுநாளவியாமலேற்று புகழான பதங்கமது யேறும்பாரு
ஆற்றியே பதங்கமெல்லா
மெடுத்துவாங்கி யாதிவெள்ளை யப்பிரேக நவநீதம்பண்ணி
சாற்றியே குகையொன்று
சில்லுபண்ணி சார்பான அண்டவெள்ளைக் கருவால்வண்ணே
விளக்கவுரை :
875. பண்ணியதோர் குகைக்குள்ளே
மருந்தைவைத்து பரிவாக மேல்மூடிசீலைசெய்து
கண்ணியதோர் கெஜபுடத்திற்
போட்டெடுத்து கனமான குகைக்குள்ளே வைத்துருக்கி
கண்ணியதோர் சூதம்நின்று
வருகும்போது நலமான கிண்ணியைநீ சமனாய்ப்போடு
திண்ணியதோர் சூதமிடை
வெள்ளீயம் போட்டு திறமாக காரமிட்டு வுருக்கிச்சாயே
விளக்கவுரை :