876. சாய்த்திடவே மருந்தெடுத்து
நிறுத்துக்கொண்டு சார்பான நாலுக்குச் சூதமொன்று
போய்த்திட்ட மருந்துக்கு
நாலுக்கொன்று புகழான வெள்ளியது நிறுத்துப்போட்டு
காய்த்திட்ட முலைப்பாலை
விட்டுயாட்டிக் கனமானவில்லைசெய்து அயச்செம்பில்வைத்து
யெய்த்திட்ட யைந்தெருவிற்
புடத்தைப்போடு எளிதான செம்புவங்கம் நூற்றுக்கொண்ணே
விளக்கவுரை :
877. ஒண்ணான வெள்ளியது மாற்றுகேளு
உற்பனமா யிருபத்தயைந்துமாற்று
கண்ணான சூதமது வெள்ளியாகும்
காரீயம்வெள்ளீயம் நாகம் வெள்ளியாகும்
விண்ணான செம்பதுவும்
வெள்ளியாகும் மகத்தான வயமதுவும் வெள்ளியாகும்
விண்ணான அம்பலத்தை
தெரிசித்தப்பா மேவியதோர் சிலம்பொலி நாதங்கேளே
விளக்கவுரை :
[ads-post]
878. நாதமென்ற பச்சைரச
கற்பூரம்பண்ண நலமாக சொல்லுகிறேன் கேளுகேளு
போதமென்ற சூதமது
பலந்தானெட்டு புகழான கெந்தகமே பலந்தானொன்று
நீதமென்ற கெந்தகத்தை
ஓட்டிவிட்டுவுருக்கி நினைவாகச் சூதத்தை யதில்விட்டுக்கிண்டு
நாதமென்ற கரிபோல
தூளாய்ப்போகும் நலமாக வெடுத்துவை பாகங்கேளே
விளக்கவுரை :
879. கேளப்பா மண்ணாலே தோண்டிபண்ணி
கெடியாகச் சந்துவாய்ப் பொருந்தச்சுட்டு
நாளப்பா மேல்தோண்டிக்
குள்ளேபூச நலமான மத்தைச்சார் மூன்றுதரம்பூசி
வேளப்பா வுலர்ந்தபின்பு
அடித்தோண்டிக்குள்ளே விரவிதோர்கறி யுப்பு அரைத்தோண்டிமட்டும்
வாளப்பா பொடிபண்ணி
தோண்டியிலேபோட்டு மருவிதோர் செங்கல் மண்ணாழிதானே
விளக்கவுரை :
880. ஆமப்பா பதங்கமது
மேல்தோண்டிக்குள்ளே அப்பனேயேறியது மாப்போல்நிற்கும்
தாமப்பா பதங்கமெல்லா
மயிற்குச்சுகட்டித் ததும்பாம லெடுத்தல்லோ குப்புக்கிட்டு
வாமப்பா வாலுகையின் மேலேவைத்து
மறவாமல் தீப்போடு பனிரண்டுசாமம்
காமப்பா பதங்கமது
யிறுகியேறிக் கம்பிபோல் வெளும்பாக விருக்கும்பாரே
விளக்கவுரை :